எப்போதும்
விடுபடலையே
எண்ணி
விடுபடும் தருணங்கள்
உணர்த்துகின்றன
விடுபடாமையின்
வசதியையும்
சுதந்திரத்தையும்
விடுபட்ட
ஒவ்வொரு
பொழுதிலும்...

யாரைப் பார்த்தாலும்
எங்கோ
பார்த்தது போலிருக்கிறது
என்று
பார்க்காது விலகும்போது
எல்லோரும்
பார்க்கிறார்கள்
விலகாது...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.