உயிர்

பூமி
சொல்ல முடியாத
அழகிய
சொர்க்கம்.

மனிதன்
மனிதனை
உயிர்களை
நசுக்காத போது.


picture_370வியப்பு

வியப்பாய்
இருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
இரவில்
துயில்வது.

 அழகு

எனக்குத் தெரியாதா?
நீ
பொய்
சொல்கிறாய்.

அம்மா
சொன்னது போல்
நான்
அழகென்று!

நான்
அறிவேன்
கண்ணே!
இருஇதயமும்
மிகமிக அழகென்று!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.