ஆழ்ந்து ஆழ்ந்து
மூழ்க வேண்டும்
கவிதைகள்.

புதுப்புது திசைகளில்
இழுத்துச் செல்லவேண்டும்
நம்மை..

தோண்டித் துருவி
பொருளறிதல் சுகம்

சொற்களில் இல்லை
கவிதை

சொற்களுக்கிடையில்
மவுனமாய் கிடக்கிறது
கவிதை

அதைத்
தட்டி எழுப்பி
நாம்தான்
கைகுலுக்க வேண்டும்

எவனுக்கும்
புரிபடாத உளறல்கள்
கிளைகளாய்
விரிந்து கிடக்க
அவற்றில்
தொங்கிக் கொண்டு
குலுக்க வேண்டும்
கவிதையை..

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.