எல்லாம் வல்ல சித்தராய்
ஏற்கப்படாத அழைப்புகளைத் தாங்கிய
செல்போனை மடியில் பொதிந்தவாறு
பெரியார் திருப்புவனம்
பேருந்தில் பயணிக்கும்
பொன்னனையாள்.

இசையாத சிறுநகைச் சித்தரின் எதிரே
கோயில் தளி உளார் ஆக விதிக்கப்பட்ட
சுயத்தின் தனிமைப் பயணம்

வுணீரைந்து பின்செல்லும்
ப்ளக்ஸ் போர்டுகளின்
பாவனை முகங்கள்.

ஈமச் சடங்கின் எச்சங்களை ஏந்தி
உத்தரவாகினியாய்த் திரும்பும்
வைகை.

சப்த அர்த்த ரசவாத உலகத்துக்கு
அப்பால் நழுவிச் செல்லும்
அவள்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.