தாமோதர் ஆற்றின் மீது அணைக்கட்டுதல் தொடர்பாக வங்காள அரசு, 1944 ஆம் ஆண்டு தாமோதர் நதி வெள்ளத் தடுப்புக் குழுமத்தை அமைத்துள்ளது. இதற்காக நான் அந்த அரசைப் பாராட்ட விரும்புகிறேன்.

இந்தக் குழுமம் பல நல்ல பரிந்துரைகளை செய்துள்ளது. குறிப்பாக, வெள்ளம் வரும் காலங்களில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தொகுத்துள்ளது. அரசு, வெள்ளம் ஏற்படும் காலங்களில் நதிக்கரை ஓரங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட நீரை எவ்வாறு பல வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீர்ப்பாசனத் திட்டம், மின்சாரம் தயாரித்தல், நதி மீது படகு மற்றும் பிற நீர்ப்போக்குவரத்து எந்த வகைகளில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக,நம் நாடு தண்ணீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையினை நீர்பாசனம் அடிப்படையாகக் கொண்டது.பல இடங்களில் மத்திய அரசின் ரயில்வே துறையினரால் கூட போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முடியாத இடங்களில், நதிநீர்ப் போக்குவரத்தைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பின், அவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நீர் ஆதாரம் அது உற்பத்தி ஆகும் இடத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல.

நாம்,ரயில்வே நிர்வாகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் –நதிநீர் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தை, அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளோம். இம்முறை, பல்வேறு சிக்கலையும், இடையூறுகளையும் ஏற்படுத்துகிறது. இதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டைக் கூறு விரும்புகிறேன். ஒரு மாநில அரசு தனது தேவைக்காக மின்சாரம் உற்பத்தி செய்ய தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களில் அணை கட்டுவதுõக வைத்துக் கொள்வோம். இந்த அணை, பக்கத்தில் உள்ள மாநிலங்களின் விவசாயத்தைப் பெரிதும் பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த அணை, பக்கத்தில் உள்ள மாநிலங்களின் விவசாயத்தைப் பெரிதும் பாதிப்பதாக அமைந்துவிடும். இதன் காரணமாக, இவ்விரு மாநிலங்களும் ஒத்துப்போக முடியாத கருத்துகளையும், மாநில எதிர்ப்பு உணர்வுகளையும் சந்திக்க நேரிடும்.

இந்த இரு மாநிலங்களும் தங்களது கோரிக்கைகள் தான் சரியானது என போராட வேண்டிய அவசியம் ஏற்படும். அணை கட்டுவதால், எந்தவிதமான பிரச்சினைகளும் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படாவிட்டாலும், ஒரு மாநிலத்தில் அமைக்கப்டும் அணைக்கட்டிற்கு, அதன் அருகாமையில் உள்ள மாநிலம் எத்தகைய ஆர்வமும் காட்டாமல், அந்த அணைக் கட்டிற்குத் தேவையான பொருளாதார உதவியை அளிக்க மறுக்கலாம்.

இதனால் பிற்காலக் கட்டங்களில், நதிநீர் சம்மந்தமாக இருமாநிலங்களிடையே பிரச்சனை எழும்போது, அதை நமது அரசு எளிதாக, அரசியல் சட்ட சாசன முறையைப் பயன்படுத்தி, சீர்செய்ய முடியும். இதற்காக நமது இந்திய அரசு, தொழில்நுட்பம் சார்ந்த "ஆற்றல் பயன்பாடு மய்யக்கழகம்' போலவே, மய்ய நீர் வழிகள், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழிப்போக்குவரத்துக் குழுமம் ஒன்றை அமைக்க நான் பரிந்துரை செய்துள்ளேன்.

இவ்விரு குழுமங்களும் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த நீர் ஆதாரங்களைப் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளவும்,அவற்றை மக்களுக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தங்களது பரிந்துரைகளை அளிக்கும்.

இதன்மூலம் அணைகட்டுதல்,வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மட்டுமல்ல, நீர்ப்பாசனம், மின்சாரம், போக்குவரத்துபோன்றவைகளுக்கும் என்பது கணக்கில் கொள்ளப்படும்.

இதன் மூலம் முதல் கட்டமாக,பீகார் அரசும்,வங்காள அரசும் பங்குதாரர்களாகக் கொண்டு இந்தத் தாமோதர் அணை கட்டப்படும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்த நாட்டில் ஓடும் நதிகளால் பயன்பெற வேண்டும். இதற்காக நமது ரயில்வே நிர்வாகத்தை நாடு முழுமைக்குமானதாக அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.போல, நதிநீர் ஆதாரங்களையும் நாட்டுமையாக்க வேண்டும். ரயில்வே துறைக்கான அதே விதிமுறைகளை நதிநீர் ஆதாரத்திற்கும் நமது நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும்.

- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 10, பக்கம் : 220

Pin It