கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

சமீப காலமாக ஒவ்வொரு சமூக அக்கறை உள்ள தமிழர்களின் விவாத கருப் பொருளாக உறுதிமிக்க தலவரை பற்றியதாக மாறி விட்டது. எங்கேயோ, தமிழகத்தின் ஒரு ஓரத்தில் மக்கள் தன் எழுச்சியை நிமிர்ந்து நின்றால் தலைவர்கள் கூட்டம் ஒன்று கூடி மக்களை சமாதானப்படுத்துவதிலும், தத்துவ விளக்கம் கொடுப்பதிலும் மூழ்கி விடுகின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே சென்று காந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள போலி மார்க்சிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாய் மாறி சட்ட ஒழுங்கையும் அடிமை அமைதியையும் நிலைநாட்ட அரும்பாடுபடுகின்றனர்.

லெனின் சொன்னபடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தன்னிச்சையாகவே போராடிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு சிறந்த தலைமையைக் கொடுப்பதே பொது உடைமையாளர்களின் பிரதானக் கடமையாகிறது. தத்துவத் தலைமையில் முன்னிருத்தும் தோழர்களில் கருத்துக்களின் முழுமையாக ஏற்றுக் கொண்டாலும் சில சந்தேகங்களை எழுப்ப வேண்டியுள்ளது.

மத்தியத்துவையும் தத்துவத்தையும் கடைப் பிடிக்கும் தலைமைக் குழு அராஜ கும்பலாக மாறுவது ஏன்? சமூகத் தளத்தில் முன்னேராத அரை நில உடமை சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று கூட்டி ஜனநாயக அடிப்படையில் ஆவணங்களும் குறிக்கோள்களும் செயல்படுத்தப் படுகிறது என்பது பித்தலாட்டமாகவே அமையும். ஏனெனில் ஒடுக்கப் பட்ட மக்களை குட்டி முதலாளித்துவ சிந்தனை யாளர்கள் எளிதில் தன்வகைப்படுத்த முடிவதால் ஆக அறிவியல் பூர்வமான தத்துவார்த்த பலம் கொண்ட தன்னலமற்ற விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட சிறந்த உறுதி மிக்க தலைவர்கள் இன்று அரசியலில் அவசியமாய் இருக்கிறது. தோழர் தியாகி முத்துக்குமார் கனவு கண்டது போல!

வரலாற்று கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டு குழந்தைப் பருவத்திலேயே நம் மூளைகளில் விதையிடப்பட்ட காந்தியைப் போன்ற இந்திய தேசிய தலைவர்களுக்கு அப்பால் இயங்கிய அனைவரும் பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். ஆகையால் நமக்கான தலைவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண் டும் என்ற மனக் குழப்பம் எழுகின்றது. இதற்கு தீர்வு காண நிச்சயம் வரலாற்றுப் பக்கங்களையும் வெளித்தேசங்களின் போராட்டங் களையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

அதன் ஒரு பயணமாக காஷ்மீரத்தின் தலைவர் முகபல் பட்டை சமகால நம் தலைவர்களிடம் உரசிப் பார்க்க இருக்கின்றோம்,

தற்போது பல இடங்களில் செந்தமிழர் என்னையும் ஆயுதம் ஏந்த சொல்கின்றீர்களா என்று வினவுகின்றார். அப்படி எதையும் தமிழக இளைஞர்கள் அவரிடம் கேட்கவில்லை. வரலாற்றை படிக்கவும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கவே கேட்டுக் கொள்கின்றனர்.

முகமல் பட் மற்றும் அவரது அமைப்பின் மீது நமக்கும் பல்வேறு விமர்சனங்கள் உண்டு. ஆனால் மார்க்சியத்தை கரைத்துக் குடித்த தோழர்கள் முகமல் பட் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததுபோல் இல்லாமல் இருப்பது ஏன்?

வெறும் புத்தகப் போராட்ட விமர்சனங்களாக மாறி இருப்பது ஏன்?

தன் இறுதி மூச்சு வரை காஷ்மீர் விடுதலையை நேசித்த அந்த அழகிய நெஞ்சை உரசிப் பார்ப்போம்!

18.2.1938ம் ஆண்டு குப்புவோரா மாவட்டத்தில் தேசியல் அன்டுவேரா கிராமத்தில் விவசாய குடும்பத்தில் முகமல் பட் பிறந்தார். 11வது வயதில் தன் தாயை இழந்த இவரின் முதல் அரசியல் நடவடிக்கை என்பது நிலவுடைமைக்கு எதிராக இருந்தது அவருக்குக் கிட்டதட்ட 11 வயது இருக்கும் போது காஷ்மீரம் டோக்ரா குடும்பதால் ஆட்சி செய்யப்பட்டது.

இந்த அரசால் திவான்கள் நிலங்கள் பராமரிக்கப் பட்டு வந்தது. இத்திவான்களால் கருதார் நியமிக்கப் பட்டு விவசாயிகள் ஒடுக்கப்பட்டனர். இக்கருதார்கள் உழுவது விதைப்பது கிடையாது. எந்தவிதமான உழைப்பையும் செய்வதில்லை. ஆனால் அறுவடைக் காலத்தில் திவான்களுக்காக விளை தானியங்கள் பறிக்கப்பட்டது. சிறிதளவே விவசாயிகள் பெற முடிந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1941ம் ஆண்டு இயற்கை சீற்றத்தினால் ஏராளமான விளைபொருள்கள் அழிந்து போனதால் நில பிரபுக்களுக்கு அளிக்க வேண்டிய பங்கை செலுத்த முடியவில்லை. ஆனால் கொடுமனம் படைத்த திவான் கண்டிப்பாக தானியங்களை விவசாயிகள் கொடுக்க வேண்டும் என்று கோரினான். இதை எதிர்த்து கிராம வாசிகள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு திவானின் மகிழூந்தை மறித்தனர். அதில் ஒருவராக முகமல் பட் இணைந்து இருந்தார். 1949ல் காஷ்மீரில் ஷேக் அப்துல்லா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிறுவனமயமாக்கப்பட்ட சமத்துவ இன்மையை ஒழித்துக் கட்ட பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பங்களிப்பாக பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் வேற்றுமைக்கு எதிராக பட் குரல் எழுப்பினார்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பாரமுல்லா சென் ஜோசப் கல்லூரியில் இணைந்தார். கல்லூரி பருவத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கினார். இதன் விளைவாக பல கல்லூரி வேலை நிறுத்தங்களுக்கு தலைமை தாங்கினார். இவ்வேலை நிறுத்தத்தின் நோக்கம் என்பது சுய நிர்ணய வாக்கெடுப்பு முன்னணியைச் சார்ந்தே இருந்தது. 1959 டிசம்பரில் முன்னர் கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்ட பின் தொடர் போராட்டங்கள் வெடித்தது. அனைத்துப் போராளிகளும் கைது செய்யப்பட்டனர். அத்தருணத்தில் இறுதியாண்டுப் படித்துக் கொண்டிருந்த பட் தனது இறுதித் தேர்வை ஏப்ரல் 2ந் தேதி எழுதினார். ஷேக் அப்துல்லா மீண்டும் 27ந் தேதி கைது செய்யப்பட்டார். அதன் விளைவாக தேசிய போராளிகளும், மாணவர்களையும் கைது செய்ய நடவடிக்கை தொடங்கியது. அதில் பட்டும் தேடப்பட்டார். ஆகவே அவர் தலைமறைவானார். மூன்று மாதங்களுக்கு பின்னர் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையை தாண்டி பாகிஸ்தானில் உள்ள பெசாவர் மாவட்டத்தில் குடியமர்ந்தார். பொருளாதார காரணங்களுக்காக வார பத்திரிகையான இன்ஜாமில் துணை ஆசிரியராக பணியாற்றினார். இதன் ஊடாக தனது முதுகலைப் பட்டத்தை பெசாவர் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.

1961ல் முகமல் பட் காஷ்மீரிகளுக்கான தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜி.எம். லோன் காஷ்மீர் ஸ்டேட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் கிப்பிராட்டர் என்று பெயரிட்டு இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தது. இம்முயற்சிக்கு பட்டு ஆதரவளிக்க முன் வந்தார். ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளால் நிராகரிக் கப்பட்டது, இத்தருணத்தில் காஷ்மீர் விடுதலை குழு 1963, 12ந் தேதி செயல்வீரர்கள் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இந்தியாவும் பாகிஸ் தானும் காஷ்மீரை இரண்டாகப் பிரித்தெடுக்கும் முயற்சியை எதிர்த்து குரல் எழுப்பியது. இக்குழுவின் தலைவராக ஜி.எம். லோனி தலைவராகச் செயல் பட்டார். இக்குழுவிற்காக தீவிரமாக பட் பரப்புரை செய்தார். இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை முடிவில்லாமல் நின்று போனதால் இக்குழு செயலற்றுப் போனது. இதன் பின்னர் பல்வேறு தேசிய விடுதலை அமைப்புகள் ஆசாத் காஷ்மீரிலும், கில்கில் பாகிஸ்தானிலும் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும்) ஒருங்கிணையத் தொடங்கினர். கே.சி.ஐ. மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஜம்மு காஷ்மீர் பொதுவாக்கெடுப்பு முன்னணி (JKPF) உருவாக்கினர்.

இதன் செயலாளராக் முகமல்பட் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவ்வமைப்பு பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப் பட்ட காஷ்மீரில் செயல்பட்ட முழு விடுதலை கோரிய அமைப்பாகும். 1965 ஜூலை 12 ஆம் தேதி மீர்பூரில் நடந்த செயல் திட்ட கூட்டத்தில் ஆயுதப் போராட்டம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இருந்த போதிலும் முகமது பட், அமலூர்அலான், மீர் அப்துல் குலாம் மற்றும் செயல் வீரர்ககளைத் தலைமையாகக் கொண்டு, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (NLF), 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 இல் போச்வாரில் தொடங்கப் பட்டது. இவ்வமைப்பின் குறிக்கோள், ஒரு வரியில் எழுதப்பட்டு இருந்தது. அவை "எல்லாவிதமான போராட்டங்களையும் கொண்டு ஆயுதப் போராட்டம் உட்பட வருங்காலங்களில் ஜம்மு காஷ்மீர், மக்கள் தங்கள் தாய்நாட்டிற்கு தனித்த சொந்தக்காரர்கள் என்பதை நிர்ணயிக்கப்படும். பத்து மாத இடைவெளியில் இயக்கம் பலப்படுத்தப்பட்டது. 10.6.1966 முதல் NLF குழு ரகசியமாக இந்திய ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்குள் நுழைந்தது. அக் குழுவிற்கு தலைமைதாங்கி சென்றவர்கள் பெயர்கள் பின்வருமாறு:

முகமல்பட், அவுரங்கசீப், அமீர் அகமது மற்றும் கலாகன்.

இவர்கள் பள்ளத்தாக்கின் மூலை முடுக்கெல்லாம் சென்று பரப்புரை செய்து கொரில்லா படைக்கு ஆட்களை இணைத்தனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்திய உளவுத் துறையால் இயக்க செயல்பாடு அதிகரிக்கப்பட்டு எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் விளைவாக போலி மோதலில் அவுரங்கசிப் கொல்லப்பட்டார். மற்றும் கலாகான் படுகாய மடைந்தார்.

முகமல் பட், கலாகான் மற்றும் அமீர் அகமது கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 1. சட்டத்திற்கு புறம்பாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது, 2. இகஇஐஈ அதிகாரி அமர்சந்தை கொலை செய்ததாக. ஆனால் முகமதுபட் இரண்டாவது குற்றச் சாட்டை மறுத்தார். இறுதியாக 1968ல் நீதிமன்றத்தால் முகமதுபட் மற்றும் அமிர் அகமதுக்கு தூக்குத் தண்டனையும் கலாகானுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் அத்தருணத்தில் காங்கிரஸ் முதல் தேசிய வாத காங்கிரஸ் வரை இருந்த காஷ்மீர் விடுதலை உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட முகமது பட்டின் காஷ்மீர் விடுதலை உணர்வை அடக்கி வைக்க முடியவில்லை. ஆதலால் இரண்டே மாதங்களில் சிறை உடைப்புப் போராட்டம் துவங்கியது.

இம்முயற்சியின் பலனாக 8.12.1968 காலை 2 மணிக்கு சிறை உடைத்து ஆசாத் காஷ்மீருக்குப் பறந்து சென்றார். 25.12.1968 முசாரப் அடைந்த முகமல் பட் நான்கு மாத விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பப்ளிசைட் தலைவர் பதவியை ஏற்றார். அப்போது இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயக்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை கூறும்போது கூறியது என்னவென்றால் அச்சம்பவம் பல்வேறு காஷ்மீரிகளை விடுதலை உணர்வையும் ஆயுதப் போராட்டத்தை நோக்கி உந்தி உள்ளது. தாங்கள் புதிய மொழியைப் பேசினோம். அதுவே இந்திய அரசிற்குப் புரிகின்ற மொழி. மேலும் அச் சம்பவம் காஷ்மீரிகள் சிக்கல் உலக அளவிற்கு அறியப்பட வைத்தது. சில ஆண்டுகளில் முகமல் பட்டு ஆசாத் காஷ்மீரிலும் கில்ஜித் பல்ஜிஸ்தானிலும் தன் அரசியல் செயல்பாட்டை தொடர்ந்தார். 1970ல் காஷ்மீர் அமைச்சகம் வழி ஆட்சி செய்யப்பட்ட பகுதி (சிறப்பு அதிகாரி) குறிப்பாக கில்ஜில் பல்கிஸ்தான் விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து, அமுலுகானும், முகமதுபட்டும் போராட்டங்களைத் தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு எல்லை கடத்தப்பட்டனர். பின்னர் காஷ்மீர் சிக்கலையும் முகமது பட்டும் உலகளவில் பாய்ச்சல் கொண்டு சென்ற மற்றொரு செய்தி கங்கா வானூர்தி கடத்தல் சம்பவமாகும். அதாவது 30.1.1971ல் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவிற்குப் பறக்க விருந்த கங்கா வானூர்தி லாகூர் விமான நிலையத் திற்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் விடுதலைக்காக இந்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் NLF உறுப்பினர்களின் விடுதலையை கோரினர்.

1.2.1971ல் அனைத்துப் பயணிகளும் இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தின் விளைவாக பாகிஸ்தான் வானூர்திகள் இந்திய வான் பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டது. மற்றும் இந்தோ பாகிஸ்தான் யுத்தம் ஏற்பட்டு இறுதியில் பங்களாதேஷ் பிரிவினை ஏற்பட்டது. மேற்சொன்ன கடத்தல் சம்பவத்தையும் தற்போது நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் கடத்தல் சம்பவம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இவை நடந்தேறிய பின் NLF உறுப்பினர்கள் கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக் கானோர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தால் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் முகமது பட், ஜி.எம்.லோனி, மீர் அப்துல் கலாம், மீர் அப்துல் மனான், அசிக் குரேஷ் மற்றும் அசரப் கொரிஸ் ஆகும். 1968ல் இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்ட அதே தேச விரோத சட்டத்தின் கீழ் முகமது பட்டு பாகிஸ்தான் அரசால் குற்றம் சாட்டப்பட்டார். அவர் சிறைச்சாலையில் இருக்கும்போது, பல்வேறு கடிதங்கள் எழுதி இருந்தாலும் அவரின் மன நிலையை புரிந்துக் கொள்ள ஜிமிரின் புதல்வி, அசாரா மிற்கு எழுதிய கடிதத்தின் முக்கியமான அம்சங்களை பார்த்தாலே போதும். அவை பின்வருமாறு:

“நான் இப்போது உனக்கு (அசாரப்மீர்) ஒடுக்கு முறையானது எப்படி ஒடுக்கப்பட்டு கொண்டு இருப்போரையும், மற்றும் ஒடுக்குமுறையாளர்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதை விளக்கு கின்றனர். ஒடுக்குமுறையாளர்களின் குழந்தைகள், அவர்களைச் சுற்றி இருக்கும் ஒடுக்குமுறைகளை காண்கின்றனர். இருந்த போதும் அவர்கள் எதிர் நிலையிலேயே வாழ்கின்றனர். ஆனால் எங்கேயும் விடுதலைப் போராளிகளின் குழந்தைகள் ஒடுக்கு முறையை பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் வலிகளை உணர்ந்துள்ளனர்.

மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட விளைகின்றனர். ஒடுக்குமுறையாளர்களின் குழந்தைகள் ஆடம்பரம் மற்றும் இன்பமான உலகம், அதிகப்படியான உணவு, அணிவதற்கு விலை உயர்ந்த ஆடைகள், வாழ்வதற்கான ஆடம்பரமான வீடுகள் இருக்கின்றன. ஆனால் போராளிக் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆடம்பரங்கள் இன்பமாய் இருப்ப தில்லை. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத் திலேயே திருப்தி அடைகினறனர். ஆடம்பர வாழ்க்கையில்லை உயர்ந்த துணிகள், மற்றும் வீடுகளின் மன நிறைவிலும் திருப்தியின் அனுபவத் தைப் பெற முடியாது. அதனால் தான் போராளிகளின் குழந்தைகள் விடுதலைக்கான நாட்களை விரும்பு கின்றனர். என்னுடைய மகளே ஒடுக்கப்பட்ட தேசத்தின் அனைத்துக் குழந்தைகளும் அரசின் ஒடுக்கு முறையால் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கொடுங்கோலர்களால் கடத்தப்படுவார்கள். ஆதலால் இதை எதிர்த்து தோள் கொடுத்து சண்டை போட வேண்டியுள்ளது. அவர்கள் முதியவர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டியுள்ளது. அடிமைத் தன மென்பது ஒரு தீங்கானது. எப்பொழுதும், குழந்தை களிடம் வேற்றுமை உருவாக்கப்படுகின்றது. அடிமை நிலையில் குழந்தைகள் சித்திரவதை செய்யப்படு கின்றனர். எண்ணற்ற துன்பங்கள் அவர்களின் முதியவர்களால் இழைக்கப்படுகிறது! மற்றொரு இடத்தில் பாகிஸ்தான் அரசைப் பற்றி விளக்குகையில் பின்வருமாறு கூறுகின்றார்.

“நீ இப்படியும் குறிப்பிட்டு இருந்தாய் (அமீர் கடிதத்தில்) காஷ்மீரிகள் தங்கள் வாழ்க்கையை பாகிஸ்தானுக்காக அர்ப்பணித்தனர். ஆனால் பாகிஸ் தானியர்களோ, நம்மை பிற நாட்டு பிரதிநிதிகளாய் (ஏஜெண்ட்) இங்கே உன் கருத்து சிறிதாக இடமாறி இருக்கின்றது. பாகிஸ்தானியர்கள் காஷ்மீரிகளை உளவாளிகள் என்று கூறுவதில்லை. ஆனால் ஆளும் துரோகிகளால் குற்றம் சாட்டப்படுகின்றது. இதே ஆளும் கும்பலால் பாகிஸ்தான் விடுதலையையும், ஜனநாயகத்தையும் மட்டுப்படுத்தப்படுகின்றது. உளவாளியைக் காட்டிலும் இந்த கூட்டு கொடுங்கோலர்கள் ரொம்பவும் கீழ்த்தரமாக செயல்படுகின்றனர். இதே ஆளும் வர்க்கம்தான் சொந்த நாட்டு மக்களுக்கு (பாகிஸ்தான்) எதிராக குற்றம் புரிகின்றது. நம்பகமான தலைவர்கள் வெளிதேச பிரதிநிதிகளாய் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஆனால் நாம் கண்டிப்பாக கோபப்படக் கூடாது.

உண்மையான பாகிஸ்தான் மக்கள் நியாயத்தை அவர்கள் முன் கொண்டு செல்லும்போது அவைகளுக்கு துணை நிற்கின்றன. நமக்கு இழைக்கப்பட்டு இருக்கும் கொடுமை பாகிஸ்தானியர்களின் வேலையல்ல. ஆளும் வர்க்க கொடூர மனிதர்கள் யார் சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகின்றனரோ அவர்களே இந் நிலைமைக்குக் காரணம். வெளிப்படையாக சொந்த நாட்டு மக்களுக்கெதிராக யுத்தம் தொடுக்கும் எந்த ஆளும் வர்க்கமும் எங்கேயும் யாருக்கும் எதையும் செய்துவிட முடியாது அநீதியைத் தவிர. பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் காஷ்மீர் விடுதலையை ஆதரித்ததில்லை. உண்மையாகவே எந்தவிதமான அக்கறையும் இல்லை. அவர்கள் என்ன சொல்லி இருந்தாலும் அது உதட்டலானதே, உதட்டலவானது மற்றும் நம்பத் தகுந்தது அல்ல எப்படி இருந்தாலும் பாகிஸ்தான் மக்கள் நம்முடைய ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள்.

மே 1973ம் ஆண்டு கடத்தல் வழக்கில் முடிவிற்கு வந்தது. குரேட்சி சகோதரர்களுக்கு வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டது. முகமது பட் விடுதலை செய்யப்பட்டார். பட் இவ்வழக்கில் அளித்த வாக்கு மூலத்தின் மூலம் தன் அரசியலை வெளிப்படுத்தினார். அதன் சிறு வரிகள் பின்வருமாறு:

“என்னால் எந்த ஒரு தயக்கமுமின்றி சொல்ல முடியும், நான் எந்த ஒரு சதியும் தீட்டவில்லை. அல்லது எந்த சதிக் கும்பலிலும் இருந்தது இல்லை. என்னுடைய நடத்தை எப்போதும் திடமாகவும் மற்றும் வெளிப்படையாக இருந்து வருகின்றது. எப்படி இருந்தாலும் நான் ஒன்றைச் செய்து இருக் கின்றேன். அதாவது நான் அறியாமைக்கு, பேராசைக்கு, சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு, அடிமைத்தனத்திற்கு, மற்றும் பாசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்வேன். பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்தின் உற்பத்தி பொருளாய் இருந்தால் அதன் அதிகார வர்க்கப் பிரதிநிதிகள் மற்றும் ராணுவ சர்வாதிகாரிகள் மேற்சொன்ன வேலை சதியாக நினைத்தால் இயல்பாகவே எந்தவித தயக்கமும் கொள்ளாமல் குற்றங்களை ஏற்றுக் கொள்கின்றேன்.''

கங்கா வானூர்தி கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு NLF தன் உறுப்பினர் பலத்தைப் பல வகையில் இழந்தது. ஒருபுறம் கொடூரமான சித்திரவதை, மறுமுனையில் மன ரீதியான அழுத்தம், கைது போன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு கடை பிடித்து வந்தது. இயக்கத்தில் கருத்து பரிமாற்றத்தில் ஏற்பட்ட சிக்கல்களினால் மற்றும் தவறான புரிதலி னால் இயக்கத்தில் மேலும் சிதைவு ஏற்பட்டது. இவைகள் களையப்பட்டு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். இறுதியாக இயக்க வேலைக்காக நண்பர்களின் அறிவுரையையும் மீறி இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்தார். இந்திய அரசின் சார்பில் தூக்குமேடை காத்துக் கொண்டு இருப்பதைத் தெரிந்திருந்தும் வந்தார். இந்திய அரசால் கைது செய்யப்பட்டு 1978ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஜனநாயகவாதிகள், பண்டிட்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், தூக்குத் தண்டனைக்கு எதிராக அமைதி வழியில் போராடினர். எந்தவித பலனும் இல்லை. இந்திய அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டது. எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியாக முகமல் பட் விடுதலையைக் கோரி மீர்காமில் இந்திய தூதர் கடத்தப்பட்டு அறியப்படாத குழுவால் கொலை செய்யப்பட்டார். அது நடந்த ஒரு வார காலத்தில் காஷ்மீரின் உண்மையான தியாகி முகமல் பட் 11.2.1987ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட்ட முதலமைச்சர் பரூக் அப்துல்லா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகமது பட்டைப் பற்றிச் சொன்ன வாக்கியங்கள் இவை:

"சே குவாராவை போலவே முகமல் பட்டும் உணர்ச்சிமிக்க மனிதராக தென்பட்டார். அவர் சென்ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது ஷேக் அப்துல்லாவால் உந்தப்பட்டார்.'

உலகத்தில் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் சட்ட மேல் முறையீடுகள் நிலுவையில் இருக்கும்போது தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்படும்போது அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. பட்டுவின் தங்கை ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டார். பிரிட்டீஸ் அரசு பகத்சிங், ராஜகுருவை தூக்கிலிடப்பட்டதுபோல் முகமது பட்டுவின் சடலம் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. விடுதலை அடைந்து விட்டதாக ஏமாற்றும் இந்தியப் பார்ப்பனிய ஆளும் வர்க்கத்தால், முகமல் பட்டைப் பற்றி ஒரு கவிஞன்,

பல நபர்களுக்கு நீ எங்கே உறங்குகிறாய் என்று தெரியாது,

எந்தவித செய்தியும் இல்லை, புதைகுழியும் இல்லை,

ஆனால் நீ லட்சக்கணக்கானவர்களுக்கு, உயர்ந்த எண்ணங்களை ஊட்டியுள்ளாய்.

நீ அவர்களின் நெஞ்சங்களிலும் மூளைகளிலும் வாழ்கின்றாய்.         -     கவாஜ்

அவர் மரண தண்டனை சிறையில் காத்துக் கொண்டு இருந்தபோது அவர் பல நபர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அவரின் உறுதியை அரசியலில் வெளிப்படுத்தினார். அதிலிருந்து சில வரிகள் பின்வருமாறு:

“வரலாறு தத்துவத்தையும் நடைமுறையையும் புதிய வகையில் அணுகிய எண்ணற்ற மனிதர்களைப் படைத்திருக்கின்றது. அவர்கள் நிலை நிறுத்தப்பட்ட நிறுவனத்திற்கும் மற்றும் நம்பிக்கைகளுக்கும் எதிராகக் கலகம் செய்தனர். அப்படிப்பட்ட மனிதர்களின் முக்கியத்துவத்தை இங்கே தருகிறேன்.

சாக்ரடீஸ் விஷ கோப்பையை அருந்த மறுத்தாரா? அல்லாவின் தூதர் நிம்ரோ வெப்பத்தில் குதிக்காமல் இருந்தாரா? ஆளும் வர்க்கங்கள் தட்டி எழுப்பிய சிலுவையில் ஏசு முத்தமிடாமல் இருந்தாரா? நம்முடைய முகமது நபி துணிச்சலின் குறியீடாக இருந்தார். அவர் தாராவி சந்தையில் சித்திரவதை மற்றும் கல் எறியப்பட்டபோது கௌதம புத்தர் எப்போதாவது பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக சமரசம் செய்தாரா?

காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் தத்துவத்தையும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நடத்திய தேசிய போராட்டத்தையும், மார்ட்டின் லூதர் கிங் இயக்கத்தையும் சற்றுப் பின்னோக்கி பார்க்கவும், இந்த மனிதர்கள் எப்போது அந்நேரத்தில் ஒடுக்கிய நிறுவனங்களிடம் சமரசம் செய்தனர்? இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்கள் வரலாற்றில் எண்ணற் றவை உள்ளன.

யாரெல்லாம் புரட்சிகர இயக்கத்திற்கு அடித்தள மாக இருந்தார்களோ அவர்கள் துவக்கத்தில் வெளிப்படையாக இயங்க முடியவில்லை. ஆனால் அவர்களின் பாத்திரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. போராட்டத்தின் வெற்றி அவர்களின் எண்ணங்களின் வெளிச்சத்திலேயே அடைகிறது. இதுபோன்ற போராட்டக் கட்டுமானத்தில் தந்தையாக நிலைத்து நிற்கின்றனர், உனக்கு தெரியும் தேசிய அடையாள உருவாக்கமென்பது பல்வேறு தாக்கத்தினாலும் காரணிகளாலும் மற்றும் வரலாற்று ரீதியாகவும் பரிணமித்துள்ளது. ஒருமுறை தேசிய அடையாளங்கள் உருவாகி விட்டால் எந்த சக்தி யாலும் அதை இந்தப் புவியில் இருந்து அழித்துவிட முடியாது. ஆகையால் நாம் தேசிய விடுதலையை விட்டுக் கொடுப்பது என்பது கேடு கெட்ட செயலாகும்.

தீர்க்கமான முகமல் பட்டின் வரலாற்றைப் பார்க்கும் ஊடாக நாம் நமக்கான தலைவர்களின் உருவகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அடங்கமறு! அத்துமீறு! என்றவர் சாந்த உருவமாக மாறிய பின் செந்தமிழர் உட்பட அவர்களின் முன்னோடிகள் நகைச்சுவையாளர்களாய் மாறிய பின் தூய தமிழில் கவியரங்கம், கருத்தரங்கம் நடத்தி தன் இன்பம் அடைவதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களின் தமிழர் பிரச்சனைக்கு கண்ணீர் விடுவதை விட்டுவிட்டு, தமிழ் தேசிய முரண்களைப் பற்றி சிந்திப்போம். புது உலகு, புது வரலாறு, புதிய தமிழகம், தேசிய உணர்வை நிலைநாட்ட புதிய மொழிகள் பேசுவோம். ஆளும் வர்க்கத்திற்கு புரியும் வகையில் நமக்கான தலைவர் களை நாம் அந்தரத்தில் தேட வேண்டியதில்லை. போலிகளால் வரலாற்றில் மறைக்கப்பட்டு மற்றும் நவீன திருபுவாதிகளால் பூஜை மடங்களாக மாற்றப் பட்டு இருக்கும்போது தமிழரசன் போன்ற தலைவர்கள் கடந்து சென்ற பாதைகளில் இருக்கும் சிக்கல்களைக் களைந்து வீறுநடை போடுவோம்!