பரபரப்பை ஏற்படுத்தாத மீடியாக்களும் காவல்துறையும்!

அகமதாபாத்தை சேர்ந்த பியூலா என்ற பெண் போலி அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு பெங்களூருவிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் விருந்தினர் மாளிகையில் 4 நாட்களாக தங்கி இருந்திருக்கிறார்.

உயர் பாதுகாப்பு மிகுந்த இஸ்ரோவிற் குள் இவர் எப்படி நுழைந்தார் என்ற கேள்வி இஸ்ரோவின் பாதுகாப்பு பலவீன மாக இருப்பதை ஒரு புறம் வெளிப்படுத் தினாலும்... நான்கு நாட்களாக விருந்தினர் மாளிகையில் பியூலா தங்கியது இஸ்ரோ விற்குள் தேச விரோத சக்திகள் இருக் குமோ என்ற சந்தேகத்தை பலமாக எழுப் பியுள்ளது.

பியூலாவை விசாரிக்க நான்கு நாள் நீதி மன்றக் காவலில் எடுத்திருக்கும் காவல் துறை விசாரணையை துவக்குவதற்கு முன்பே, இவர் மன நிலை சரி இல்லாத வர் என்று இவரது கணவர் கூறுகிறார் என்று ஒரு பிட் செய்தியை சேர்த்து பத் திரிகைகளுக்கு கொடுத்திருக்கிறது. இதன் மூலம் இந்த விசாரணை எந்த கோணத்தில் செல்லும் என்பதை விவரமா னவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

இஸ்ரோவிற்குள் சில நாட்களாக தங்கி இருந்தவர் எப்படி மனநிலை சரி இல்லாத வராக இருக்க முடியும்? இவர் சில நாட் களாக காணவில்லை என்று இவரது கண வர் ஏன் புகார் அளிக்கவில்லை? என் றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது. இத ற்கு ஏற்றவாறு காவல்துறை ஆதாரங் களை ஜோடித்துவிடும். இதெல்லாம் காவல்துறைக்கு கஷ்டமான காரியமல்ல.

காவல்துறை நினைத்தால் அப்பா வியை தீவிரவாதியாக்க முடியும். தீவிர வாதியை அப்பாவியாக்க முடியும்.

இந்த பியுலாவைப் பற்றிய செய்தி ஒரு நாளோடு முடிந்து போனது. இதே இஸ் ரோவுக்குள் முஸ்லிம் பெயரைத் தாங்கிய ஒருவர் புகுந்திருந்தால் என்னவாகி இரு க்கும்? நமது காவல்துறையும் மீடியாக்க ளும் ஒரு நாள் செய்தியோடு நிறுத்தி இருக்குமா? அவர் மனநோயாளி என்று கூறியிருக்குமா? சம்மந்தப்பட்டவர் உண் மையிலேயே மனநோயாளியாக இருந்தா லும் கூட!

ஐ.எஸ்.ஐ முதல் அல்காயிதா வரை அந்த முஸ்லிமை தொடர்பு படுத்தி தினம் தினம் புதுப்புது குற்றச்சாட்டுகளை கூறி சர்வதேச தீவிரவாதி சிக்கி விட்டதைப் போல அல்லவா பில்டப் கொடுத்திருக்கும்?

இவர்கள் சொல்லும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பியூலாவை உளவு பார்க்க அனுப்பாதா? பரிதா பேகத்தைதான் அனுப்புமா?

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மீடியா பிரிவில் பணியாற்றி வந்த - மாதுரி குப்தா என்பவர்தான் ஐ.எஸ்.ஐ.க்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்திய அரசின் ரகசியங்களை விற்று வந்தவர். இவரை மதிய உளவு பிரிவு கைது செய்து குற்றத்தை நிரூபித் தது.

ஆக, பரிதா பேகத்தை விட பியூலாக்க ளையும், மாதுரிகளையும்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புகள் தேர்ந்தெடுக்கும் என்று நம் புவதற்குத்தான் முகாந்திரங்கள் உள்ளன.

இஸ்ரோவிற்குள் பியூலா புகுந்த விஷயத்தை சாதாரணமான செய்தியாக கொடுப்பதும் காவல்துறைதான். அதிராம் பட்டினம் அன்சாரி வெறும் சீடி வைத்தி ருந்ததற்காக அவரை இன்டர்நேஷனல் உளவு நிறுவனங்களின் இன்பார்மராக, தேச விரோதியாக இன்னும் பல வகைக ளிலும் சித்தரித்து மீடியாக்களுக்கு செய்தி கொடுப்பதும் இதே காவல் துறைதான். அது பெங்களூரு காவல்துறை. இது திருச்சி காவல்துறை. ஆனால் இரண்டும் ஒரே ஜாதிதான். அது முஸ்லிம் விரோத ஜாதி.

- பைஸ்

Pin It