1423 ஆண்டுகள் பழமை வாய்ந்தது!

படத்தில் காணப்படும் நாணயம் 1423 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பு நாணயமாகும். இது நபிகள் நாயகம் காலத்தில் புழக்கத்தில் இருந்தது என வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

11மி.மீ அளவில் 1650 கிராம் எடையுள்ள இந்நாணயத்தின் ஒரு பக்கத்தில் முஹம் மது முஸ்தஃபா (புகழப்பட்டவர் மற்றும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்) என்றும் மறுபுறத்தில் அல்லாஹு அஸ்ஃபியா (அல்லாஹ் தூய்மையாளன்) என்றும் பொறிக்கப்பட் டுள்ளது. இவை பழங்கால அரபு முறையில் எழுதப்பட்டுள்ளது.

தபரீ என்கிற ஹதீஸ் நூலில் பாகம் 11 பக்கம் 939ல் உமர் (ரலி) அவர்களின் காலத் தில் அறுங்கோண வடிவம் கொண்ட நாணயங்கள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டு, ஒருபுறம் "அல்லாஹ்' என்றும் மறுபுறம் பர்கா என்றும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டதாக தபரி குறிப்பிட்டுள்ளார்.

படத்திலுள்ள நாணயத்தில் ஹிஜ்ரி 6 என் பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் இது நபிகள் நாயகம் காலத்திய நாணயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

முன்னதாக, இதேபோன்ற சுமார் 30 நாணயங்கள் தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள ஆழ்வார் திருநகரி என்ற ஊருக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட மணல் பாதையில் கண்டெடுக்கப்பட்டது.

நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட அந்த இடம் ஒரு காலத்தில் காயல் நகரமாக அழைக் கப்பட்டது என்கிறார் "திருநெல்வேலி வர லாறு' என்ற நூலை எழுதிய பிஷப் கார்டு வெல் என்பவர். ஆழ்வார் திருநகரியில் நாணயங்களை கண்டறிந்த கார்டுவெல், இவை மிகப் பழமை வாய்ந்தவை; இவற்றில் ஒரு சில வற்றில் முகம்மதிய வருடம் 71 என்றும் வேறு சிலவற்றில் சுல் தான் சலாவுத்தீன் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இது வரலாற்றில் சொல்லப்படும் சலாவுத்தீன் அய்யூபி காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என் றும் கூறுகிறார் கார்டுவெல்.

முஹ்ம்மது நபி(ஸல்) அவர்கள் மக்கா வாசிகளோடு ஹுதைபியா உடன்படிக்கையை நிறைவேற்றிய பின் மதினாவிற்குச் சென்று ஆட்சிப்பொறுப்பை ஏற்று பலம் பொருந்திய பேரரசை உருவக்கிய பின் ஹிஜிரி 6ம் ஆண்டில் புழகத் தில் இருந்த நாணயங்கள் இவை என அறிய முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார் பிஷப் கார்டு வெல்.

இந்த அரேபிய நாணயங்கள் இஸ்லாமிய ஆட்சியின் துவக்க காலத்திய பொருளாதார நிலை யையும், தென்னிந்தியாவோடு அக்காலத்தில் இருந்த கடல் வாணிபத் தொடர்பையும் எடுத் துச் சொல்வதாக அமைந்திருக்கி றது.

குறிப்பாக தூத்துக்குடியின் கரையோர ஊர்களுக்கும் அரபு நாடுகளுக்குமிடையே இருந்த தொடர்பு தெரிய வருகிறது.

தகவல் : டாக்டர் ஷொய்புதீன் (ஷிஃபா யுனானி ஹெர்பல் க்ளினிக்) சென்னை

Pin It