கடந்த வார இதழில் (ஆக.5-11,2011) முஸ்லிம் லீக் தலை வர் கட்சியை அடகு வைத்து விட்டதாக தாவூத் மியாகான் அளித்த பேட்டி வெளியாகி முஸ்லிம் லீக் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நம்மைத் தொடர்பு கொண்ட முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் தாவூத் மியா கானின் பேட்டியில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும், இது குறித்த தங்களின் நிலையை பத்திரிகையில் வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

மரைக்காயர் லெப்பைத் தெரு வில் உள்ள முஸ்லிம் லீக் தலை மையகத்தில் அவர்களைச் சந்தித்தோம்.

தனது 15வது வயதிலிருந்தே முஸ்லிம் லீக்கின் பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது மாநிலப் பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் கே.ஏ.எம். முஹம்மது அபு பக்கர் நமக்கு பேட்டிய ளித்தார்.

அப்போது மாநில இளைஞ ரணி அமைப்பாளர் கே.எம். நிஜா முதீன், மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் ஆகியோர் உடனிருந்தனர்.

நூற்றாண்டு கால பாரம்பரிய மிக்க கட்சியான முஸ்லிம் லீக் கிற்கு மக்கள் மத்தியில், குறிப் பாக இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்ற கருத்து நிலவுகிறதே?

! ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று வேகமாக போராட்டங் களில் தொடர்ந்து செயல்படாத தால் ஒரு சிலர் இப்படி பொத்தாம் பொதுவான கருத்தை தெரிவிக்கி றார்கள்.

கட்சியின் கிளைகள், மாவட் டங்கள், மாநிலங்கள் ஆகியவற் றில் பொறுப்பில் இருப்பவர்களில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள் தான். இ.யூ.மு.லீக் சார்பாக நடத்தப்படும் மாநாடுகளில் நடை பெறும் பேரணிகளை சற்று கவ னித்தால் இளைஞர்கள் திரண்டு வருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

அண்மையில் ஜூலை 11 அன்று தென்காசியில் மாநில இளைஞ ரணி கூட்டத்தையும், ஜூலை 30 அன்று மாணவரணி கூட்டத்தை சென்னையிலும் நடத்தினோம். அதனை பார்த்திருந்தீர்கள் என் றால் இந்தக் கேள்வியைக் கேட்டி ருக்க மாட்டீர்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இளைஞர்கள் இல்லை என்பது தவறான கருத்து.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் காதர் மொய் தீன் கட்சியை அடகு வைத்து விட்டதாக தாவூத் மியா கான் குற்றம் சாட்டி உள்ளாரே?

கேட்டதுதான் தாமதம் உடன டியாக பொங்கியெழுந்த அபு பக்கர் ஆவேசத்துடன், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பு. 20 மாநிலங்களில் கட்சியின் நிர் வாக அமைப்பும் தொண்டர்க ளும் உள்ளனர். கேரளாவில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் கேரளாவில் மாநில மந்திரி சபையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினர் 4 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள கட்சியில் ஒரு சிலர் அவ்வப் போது குழப்பங்களை நிகழ்த்து வதும் காலப் போக்கில் அவர்கள் அழிந்து போவதும் அடிக்கடி நடந்து வரும் நிகழ்வு தான்.

முஸ்லிம் லீக்கின் தலைவர் என்று கூறிக் கொண்டு அடிக்கடி பத்திரிகைகளில் பேட்டியும், அறிக்கையும் கொடுத்து வருகி றார் தாவூத் மியாகான். அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை மாநகர சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரையோ, அந் தப் பெயரை முன்போ, பின்போ சேர்த்து பயன்படுத்தக் கூடாது என்றும், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் கொடியை பயன்படுத் தக் கூடாது என்றும் நிரந்தர உறுத்துத் தடை ஆணை பெற் றுள்ளோம்.

அந்த தடையாணை இன்றள விலும் அமுலில் இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரைப் பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது. பெயரைப் பயன்படுத்தியது குறித்து ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது...'' என்று உணர்ச்சி வசப்பட்டவரிடம்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னணி தலைவரான காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் குடும்பத்தின் வழித் தோன்றலான தாவூத் மியா கான் மீது இவ்வளவு கோபம் தேவைதானா?

!கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் மீது நாம் மிகு ந்த மரியாதை வைத்துள்ளோம். அதன் காரணமாகத்தான் எங்களு டைய தலைவர்களும், பாராளு மன்ற உறுப்பினர்களும், மத்திய அரசில் பேசி, பெரும் முயற்சி செய்து காயிதே மில்லத் உருவம் பொறித்த ஸ்டாம்ப்பை வெளி யிட்டோம். தமிழக அரசிடம் பேசி காயிதே மில்லத் மணி மண் டபம் கட்ட ஏற்பாடு செய்தோம். மேலும் காயிதே மில்லத் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி ஏழைகளுக்கு பல்வேறு உதவி களை செய்து வருகிறோம்.

தமிழக அரசிடம் எப்போதி ருந்த உறவைப் பயன்படுத்தி காயிதே மில்லத் நூற்றாண்டு விழாவை எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் அரசு சார் பாக கொண்டாட வைத்தோம்.

இவ்வளவு ஏன்? மாவட்டம் தோறும் சென்று தலைவர் காதர் மெய்தீன் சிறிது சிறிதாக வசூல் செய்து 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தலைமையகத் திற்கு "காயிதே மில்லத் மன்ஜில்' என்று பெயர் வைத்தவர் காதர் மொய்தீன் அவர்கள்தான்.

ஆனால் காயிதே மில்லத் வசித்த குரோம்பேட்டை வீட்டை பிளாட் போட்டு விற்ற தாவூத் மியாகானுக்கு லீக்கையும், லீக் தலைவர்களையும் பற்றிப் பேசுவ தற்கு எந்த அருகதையும் கிடை யாது...'' என்று காட்டமாக கே.ஏ.எம். அபுபக்கர் கூறிக் கொண் டிருந்தபோது இடைமறித்த மாநில இளைஞரணிச் செயலாளர் கே.எம். நிஜாமுத்தீன்,

“காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள் முஸ்லிம் சமுதாயம் கல் வியில் மேம்பாடு அடைவதற்காக பெருந் தொண்டு ஆற்றினார். சமு தாயத்தின் பேரால் 14 கல்லூரிகள் உருவானதில் காயிதே மில்லத் அவர்களுக்கும் பங்குண்டு.

காயிதே மில்லத்தின் தொண் டினை போற்றும் வகையில் சென்னை மேடவாக்கம் பகுதியில் முஸ்லிம் லீக் முன்னணித் தலை வர்களின் பெரு முயற்சியினால் தமிழக அரசால் குறைந்த விலை யில் வழங்கப்பட்ட 40 ஏக்கர் நிலத் தில் 1974ம் ஆண்டு காயிதே மில் லத் கல்லூரி உருவாக்கப்பட்டது.

கல்லூரி நிர்வாகத்திற்கான சொசைட்டியில் தாவூத் மியாகான் அப்போது உறுப்பினர் கூட கிடையாது. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த அவர் 1996ம் ஆண்டுதான் இந்தி யாவிற்கு வந்தார். கல்லூரியின் வளர்ச்சிக்காக ஒரு சிறு துரும்பை யும் அசைக்காத தாவூத் மியா கான், கல்லூரி நிர்வாகத்தை கைப் பற்றியது தவறானது மட்டுமல்ல, சமுதாய துரோகமும் அதில் அடங்கியிருக்கிறது...'' என்றவர்,

“1998ம் ஆண்டு வரை மறைந்த அப்துல் லத்தீப் அவர்களின் நிர் வாகத்தின் கீழ் கல்லூரி இருந்து வந்தது. அப்போது தமிழக முதல் வராக இருந்த கலைஞர் பாஜகவு டன் கூட்டணி அமைத்ததால் கூட் டணியிலிருந்து அப்துல் லத்தீப் அவர்கள் விலகினார்.

அப்போது வலியப் போய் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் அரசியல் சூழ்ச்சி யின் காரணமாக கல்லூரி நிர்வா கத்தை துரோகத்தினால் மைனா ரிட்டி உறுப்பினர் களோடு கைப் பற்றினார் தாவூத் மியாகான். தற் போது தன்னுடைய குடும்ப உறுப் பினர்களை சொசைட்டியில் சேர் த்து குடும்பச் சொத்தாக மாற்றி உள்ளார்...'' என்று தன் பங்கிற்கு கொட்டித் தீர்த்தார்.

நாம் மீண்டும் கே.ஏ.எம். அபு பக்கரிடம், “கல்லூரி நிர்வாகத்தை தாவூத் மியா கான் முறைகேடாக கைப்பற்றி இருந்தால் அதனை மீட்பதற்கான முயற்சியில் ஏன் இறங்கவில்லை?'' எனக் கேள்வி யெழுப் பினோம்.

! காயிதே மில்லத் கல்லூரியை மீட்பதற் கான அத்தனை தார்மீக உரிமைகளும் முஸ் லிம் லீக்கிற்கு இருக்கிறது. கல்லூரியை மைய ப்படுத்தி எதிர் நடவடிக்கைகள் தொடங்கி னால் கல்லூரி அரசாங்கத்தின் கைக்கு சென்று விடுமோ என்ற அச்சத் தின் காரண மாக அமைதியாக உள்ளோம்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு காதர் மொய்தீன் பெயர் முடிவு செய்யப்பட்டது. பின்னர் கூட்டணி கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக வேட்பா ளர் மாற்றப்பட்டார். இது தாவூத் மியாகா னின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகத்தானே உள்ளது?

! நீங்கள் குறிப்பிட்ட பாராளுமன்றத் தேர் தலின்போது முதலில் காதர் மொய்தீன் வேட் பாளராக அறிவிக்கப்பட்டது உண்மைதான். அது மட்டுமல்லாது கூட்டணி கட்சியின் சின் னத்தில் அல்லாமல் தனிச் சின்னத்தில் போட் டியிட வேண்டும் என்றும் முடிவெடுத்திருந் தோம்.

ஆனால் அந்தத் தொகுதி வாக்காளரின் மனநிலையையும், கட்சியின் பொருளாதார நிலை மைகளையும் ஆராய்ந்து பார்த் ததில் தனிச் சின்னத்தில் போட்டி யிட்டால் வெற் றிக்கு வாய்ப்பு இல்லை என்பதும், கூட்டணிச் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது என் பதும் தெரிய வந்தது.

அதனடிப்படையில் கூட்டணி சின்னத்தில் போட்டியிடுமாறு காதர் மொய்தீனிடம் கூறி யபோது அதனை அவர் விரும்பவில்லை.

அதன் காரணமாக நீண்ட காலமாக கட்சி யில் உள்ள அப்துல் ரஹ்மானை போட்டியிட வைத்தோம். இதுதான் நடந்த உண்மை. இதில் யாருடைய நிர்ப்பந்தமும் இல்லை. வேட்பா ளரை மாற்றுவது என்பது கட்சியின் உரிமை. எல்லா கட்சிகளிலும் இந்த நிலை இருக் கத்தானே செய்கிறது. முஸ்லிம் லீக்கை மட் டும் விமர்சிப்பது என்ன நியாயம்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டீர்கள் தேர் தலில் தோல்வியுற்றதால் தற்போது கூட் டணி கட்சிகள் ஒவ்வொன்றாக திமுகவை விட்டு விலகுகிறார்கள். முஸ்லிம் லீக்கின் நிலை என்ன? திமுக கூட்டணியில் இருக்கி றதா?

! கூட்டணி என்பதெல்லாம் தேர்தலை முன் வைத்துத்தான். தேர்தலின்போது மட்டும் தான். ஆகவே அடுத்து தேர்தல் அறிவிக்கப்ப டும்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி என் பதை முடிவு செய்து கட்சி அறிவிக்கும். அதே நேரத்தில் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். திமுக கூட்டணியை முறித்துக் கொள்ள எந்தக் காரணமும் இல்லை.

வகுப்பு வாத கலவர தடுப்புச் சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளாரே?

! வகுப்புக் கலவரங்கள் தொடர்பாக பல முறை பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடை பெற்றிருக்கிறது. விவாதத்தில் பங்கு கொண்டு தலைவர் பனாத்வாலா கருத்துகளை சொல்லி யிருக்கிறார்கள்.

வகுப்புக் கலவர சட்ட மசோதா சம்பந்த மாக உள்துறை இலாகா அமைத்த கமிட்டி யில் பேராசிரியர் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத் கலவரத்தின்போது கலவரக்காரர்களுக்கு மாநில அரசு துணை நின்றது. எல்லோருக்கும் தெரியும். அம்மாதிரி சமயங்களில் மத்திய அரசு நேரடியாக பொறு ப்பில் எடுத்து செயல்பட வேண்டும் என்று ஏற்கெனவே எங்கள் பாராளுமன்ற உறுப்பி னர்கள் விவாதத்தில் சொல்லியுள்ளனர்.

புதிதாக அமைந்துள்ள அரசின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்து என்ன?

ஆட்சி அமைத்து சில நாட்கள்தான் ஆகியி ருக்கிறது. அதனால் உடனடியாக விமர்சனம் செய்வது சரியல்ல. மேலும் நிதி நிலை அறிக்கையில் உலமாக்கள் பென்சன் அதிகரிப்பு, வக்ஃபு போர்டுக்கான மானியம் அதிகரித்து கொடுத் திருப்பது மற்றும் வக்ஃபு நிலங்கள் மீட்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியது.

அதே நேரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட் டங்களில் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் அதைப் பற்றி எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார். அதனை நிறை வேற்றித் தர வேண்டுமென்பதுதான் நம்மு டைய கோரிக்கை...'' என்று சொன்னவரிடம் நாம் விடைபெற முயன்றபோது இறுதியாக ஒரு விஷயம் என்று கூறியவர்,

“இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்களின் வாரிசுகளான தாவூத் மியாகான், பாத்திமா முஸôப்பர் ஆகியார் தங்கள் கோபதாபங்களை மறந்து முஸ்லிம் லீக்கில் இணைந்து பணியாற்ற வேண்டும். லீக்கில் சேர்ந்தவுடனே பதவிகளை பெற வேண்டுமென்று நினைக்காமல் சமுதாயப் பணியாற் றினால் சமுதாயம் அவர்களை கண்ணியப்ப டுத்தும். மக்கள் ரிப்போர்ட் மூலமே அழைப்பு விடுக்கிறேன்...'' என்றார்.

சந்திப்பு : அபு சுபஹான்

Pin It