இலங்கையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

இலங்கை மத்திய மாகாணத்தில், மாத்தளை மாவட்டத்தில் தம்புல்ல எனும் ஊரில் அமைந்துள்ள 60 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்று ஜுமுஆ நேரத்தில் இடிக்கப் பட்டுள்ளது.

சிங்கள புத்த மத புனித பூமியில் எந்த பிற மத ஸ்தலங்களும் அமையக் கூடாதெனக் கூறி சுமார் 2000 புத்த பிக்குகள் மற்றும் "ஹெல உறுமய' இயக்கத்தவர் கள் ஊர்வலமாக சென்று இலங்கை காவல்படை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளி யேற்றி பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்து கரசேவகர்கள் 1992ல் பாபர் மஸ்ஜித் இடித்த அதே பாணியில் புத்த மத கரசேவகர்கள் பள்ளிவா சலை இடித்து அட்டூழியம் செய் துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில தினங்களி லேயே இது போன்ற ஒரு உரிமை மீறல் பகிரங்கமாக அரங்கேறியுள் ளது. கடந்த மனித உரிமை மாநாட் டில் முஸ்லிம் நாடுகளின் வாக்குக ளைப் பெற்றுக் கொடுத்த இலங்கை யின் முஸ்லிம் அரசியல் தலைமைக ளும், ஜமாஅத்துல் உலமாவும் முழு மூச்சாய் செயல்பட்டிருந்தன. ஆனாலும் முஸ்லிம்களின் பள்ளி வாசல் அரசின் ஆதரவிலேயே தகர்க்கப்படும்போது முஸ்லிம் பெயர் தாங்கி அமைச்சர்களும், உலமா சபைத் தலைவர்களும் மரண மௌனம் சாதிப்பது சமூக உணர்வை அடகு வைத்துள்ளதை படம் பிடித் துக் காட்டுகிறது.

2000 பேரினவாதிகள் ஒன்று சேர்ந்தால் ஒரு சிறுபான்மை மத ஸ்த லத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என்கின்ற நிலைமை இலங்கையில் உருவாகியிருப்பது சிறுபான்மையி னரின் இருப்பை கேள்விக்குறியாக்கி யுள்ளது.

சுஷ்மா தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு, தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து ஆராயும்போதே முஸ்லிம் களின் மத உரிமை பறிக்கப்பட்டுள் ளது.

புத்த பிக்குகளின் தலைமையில் அணி வகுத்த சிங்கள இன வெறி யர்கள் ஜுமுஆ தொழுகையை நிறை வேற்றக் கூடாது என கோஷமிட்டப டியே பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தம்புல்ல மட்டுமல்லாமல் அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலும் சமூகப் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இனவெறியர்களின் அராஜகத்தை தடுத்து நிறுத்த இயலாத இராணுவம் மற்றும் காவல் படையினர் பள்ளி வாசலில் புகுந்து முஸ்லிம்கள் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றவிடாமல் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் அன்றைய வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகை ரத்து செய்யப்பட்டது.

தம்புல்ல நகரம் எங்களுக்குப் புனி தமானது. அதனால் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பாசிச வெறியை தூண்டி வருகின்ற னர் புத்த பிக்குகள். இதன் காரணமாக சில மாதங்களாகவே தம்புல்ல பகுதி வகுப்புப் பதட்டம் நிறைந்ததாகவே காணப்பட்டது.

இந்த நிலை நீடித்தபோதும் போது மான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் யாத சிங்கள அரசு, புத்த பிக்குகளு டன் சிங்கள் வெறியர்கள் கைகோர்த் துக் கொண்டு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதை கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறது.

அரசின் பாதுகாப்புப் படைகளின் கண்னெதிரிலேயே பெட்ரோல் குண் டுகளையும் வீசி பள்ளிவாசலை சேதப்படுத்தியுள்ளனர் சிங்கள இன வெறியர்கள்.

கடந்த நவம்பர் மாதம் கூட ஒரு புத்த பிக்கு தலைமையில் திரண்டு சென்ற பெரும் கூட்டம் அனுராதாபுரத்திலுள்ள ஒரு தர்காவை இடித்தது குறிப்பிடத் தக்கது. இந்த தர்காவையொட்டி பள்ளிவாசல் இருக்கிறது. இந்த பள்ளிவாசலை முஸ்லிம்கள் விரிவுபடுத்தப் போகிறார்கள். அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியே வன்முறையில் ஈடுபட்டனர் சிங்கள வெறியர் கள். இந்த சம்பவத்திற்கு நடு நிலை சிங்களச் சமூகம் கண்ட னம் தெரிவித்தது என்பது குறிப் பிடத்தக்கது.

இதேபோல தம்புல்ல பள்ளி வாசல் தாக்குதலையும் நடுநிலை கொண்ட சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் எம்.பி.க்கள் கண்டித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரம சிங்கே புத்த பிக்குகளின் அராஜ கத்தை கண்டித்து பத்திரிகையா ளர் சந்திப்பை நடத்தியிருக்கி றார்.

தம்புல்ல பள்ளி வாசல் சேதப்படுத் தப்பட்ட செய்தியை இலங்கையின் ஊட கங்கள் வெளியிட வில்லை. செய்தித் தணிக்கை இலங்கை யில் அமலில் இருப்ப தால் அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத் தும் இதுபோன்ற செய்திகள் வெளியிட அரசு அனு மதிப்பதில்லை. ஆயினும் இலங் கையின் டெய்லி மிரர் பத்திரிகை தனது ஆன்லைன் பதிப்பில் இச் செய்தியை வெளிப்பட்டுள்ள சர்வதேச செய்தி நிறுவனமான பி.பி.சி.யும் இது குறித்த செய்தி களை வெளியிட்டுள்ளது.

பதட்டம் நிறைந்த சூழலில் தம்புல்ல பள்ளிவாசல் வெறும் கட்டிடம்தான் எனக் கூறி முஸ் லிம்களை மேலும் வேதனைப்ப டுத்தியுள்ளார் இலங்கைப் பிரத மர் டி.எம். ஜெயரத்னே. சில தினங்களுக்கு முன்புதான் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப் பாஸ் இலங்கைக்கு உத்தியோகப் பூர்வ விஜயம் மேற்கொண்டிருந் தார்.

அப்போது அவரிடம் முஸ் லிம்களுடனான எங்களது உறவு பாரம்பரியமிக்கது. முஸ்லிம்களின் நலன் சார்ந்த திட்டங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது என்றெல்லாம் பேசிய ராஜபக்ஷே சிறுபான்மையின ரால் பள்ளிவாசல் சேதப்படுத் தப்பட்டதை வேடிக்கை பார்த் திருக்கிறார்.

இலங்கை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பேரினவாதம் இப்போது முஸ்லிம்களை நோக் கித் திரும்புகிறது.

சிறுபான்மையினரின் உரிமை கள் மீது போர் தொடுக்கும் பெரும்பான்மை ஆணவத்தின் உச்சம் தம்புல்ல பள்ளிவாசல் தாக்குதல் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

- இலங்கையிலிருந்து ஷரப்தீன்

இலங்கை முஸ்லிம்களுக்கு போராட்ட உணர்வை ஏற்படுத்திய புத்த பிக்குகள்!

தம்புல்ல பள்ளிவாசல் தாக்கு தல் முன்னரே திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. தம் புல்ல பகுதி பௌத்தர்களின் புனித இடம் என புத்த பிக்குகள் தொடர்ந்து சொல்லி வந்த வேளையில், அவர்க ளுக்கு ஆதரவாகவே ராஜபக்ஷே அரசு செயல்பட்டு வந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் தம்புல்ல (மஸ் ஜித் கைரிய்யா) பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றிக் கொள் ளுங்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசின் நாடாளுமன்ற உறுப்பின ரான லக்ஷ்மன் பெரேரா கேட்டுக் கொண் டிருந்ததை சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகம் நிராகரித்து விட்டது.

இதனையடுத்து, ஜுமுஆ தொழுகையை நடத்த வேண்டாம் என காவல்துறை கேட் டுக் கொண்டதையும் பள்ளிவாசல் நிர்வாகம் நிராகரித்து விட்டது. இதன் பின்னர்தான் புத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக வந்த மதவெறியர்கள் பள்ளிவாசல் மீது தாக் குதல் நடத்தியுள்ளனர்.

“தம்புல்ல பகுதியில் பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் பள்ளிவாசலும், இந்துக் கோவில் ஒன்றும் சட்ட விரோதமாக கட்டப் பட்டுள்ளன. இவற்றை இடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை...'' என்கிறார் அக்மீமனா தயா ரத்னா என்கிற புத்த பிக்கு.

ஆனால் அப்பகுதியில் வசிக்கும் முஹம்மது முஸ்தபா என்பவரோ, “இங்குள்ள பள்ளி வாசல் பல தசாப்தங்களாக இருக்கிறது. சட்ட ரீதியாக கட்டப்பட்ட பள்ளிவாசல் இது...'' என்கிறார்.

இந்நிலையில், நாட்டின் பெரும் பான்மை மக்களான பௌத்தர்க ளின் புனித இடமாக கருதப்படும் பிரதேசத்திலிருந்து பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என இலங்கைப் பிரதமர் ஜெயரத்னே உத்தரவிட்டி ருக்கிறார்.

ஜெயரத்னேவின் இந்த உத்தரவு முஸ்லிம் கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பெரும்பான்மை பௌத்தர்களின் விவகாரங்க ளுக்கு பொறுப்பாளராக இருக் கும் பிரதமர் ஜெயரத்னே, “தம் புல்லவில் இருக்கும் பௌத்தர்க ளின் புனித பிரதேசத்தி லிருந்து மஸ்ஜிதை அப்புறப்படுத்தி தம் புல்லைக்கு அருகாமையிலுள்ள சுற்றுப்புறத்தில் பொறுத்தமான இடத்தில் மஸ்ஜித்தை நிர்மாணி க்க வேண்டும்...'' என தான் உத்த ரவிட்டிருப்பதாக செய்தியாளர் களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், “அந்தப் பள்ளிவாச லில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதை வைத்து, முன்பு இருந்த சிறிய கட்டடத்தை சட்ட விரோதமாக விரிவுபடுத்தி வருவதாக உள் ளூர் பௌத்தர்கள் தகவல் அளித்திருக்கிறார்கள்'' என்றும் தெரிவித்திருக்கிறார் ஜெய ரத்னே.

ஆனால் மஸ்ஜிதின் தலைமை இமாமோ, “இந்தப் பள்ளிவாசல் சட்டப்பூர்வமான முறையில் அமைந்திருக்கிறது. சட்ட விரோ தமாக நாங்கள் மஸ்ஜிதை விரிவு படுத்துவதாகக் கூறுவது தவறு. ஏற்கெனவே இருக்கின்ற பள்ளி வாசலை புதுப்பித்து வருகிறோம் அவ்வளவுதான்...'' என்கிறார்.

இதற்கிடையில் இலங்கை மத்தியப் பகுதியிலிருக்கும் புத்த பிக்குகள், அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த வாரம் நாங்களே பள்ளி வாசலைத் தகர்ப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த சம்பவம் குறித்து விவாதிக்க அரசுக்கும் முஸ்லிம் தலைவர்களுக் கும் இடையில் பிரதமர் ஜெயரத்னே தலைமையில் சிறப்புக் கூட்டம் நடந்து கொண்டி ருந்தபோதே பித்த பிக்குகளின் இந்த மிரட்டல் பாணி ஸ்டேட்மெண்ட் வெளி வந்திருக்கி றது.

அதே சமயம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நான்கு முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும், அவர்கள் பள்ளிவாசலை வேறு இடத்தில் கட்டிக் கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தாகக் கூறப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளான அலவி மவ்லானா, அமைச்சர்களான ஹிஸ் புல்லாஹ், காதர், பௌசி ஆகியோரில் மூவர் இந்தச் செய்தியை மறுத்துள்ளதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்தக் கூட்டத் தில் கலந்து கொண்டதாக கூறப்படும் கேபி னட் அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி, தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக வந்த தகவலை மறுத்திருப்பதோடு,

“நான் அந்தக் கூட்டத்தில் பங் கெடுக்கவில்லை. ஆயினும் வேண் டுகோளின் அடிப்படையில் பள்ளிவாசலை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது ஏற்புடையதாக இருக்கும். ஆனால் உத்தரவிட்டுச் செல்வதை ஒப்புக் கொள்ள முடி யாது...'' என்று செய்தியாளர்களி டம் தெரிவித்திருக்கிறார்.

கொழும்பு மாநகராட்சி கவுன் சில் உறுப்பினரான ஆஸôத் காலியோ, “பள்ளிவாசல் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருப்ப தாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், குண்டர்களின் பாணியில் வன்முறையைத் தூண்டி எதிர்ப்பு தெரிவிப்பது அநாகரீகம். இந்த நாட்டில் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ உரிமையில்லையா?'' என கோபத்தை வெளிப்படுத்தியிருக் கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம்மும் மாத் தளை மாவட்ட எம்.பி.யும், காணி அமைச்சருமான ஜனக பண்டார தென்ன கோனும் தாக்கப்பட்ட பள்ளிவாசலை பார்வையிட்டுள் ளார். பள்ளிவாசல் தாக்கப்பட் டது குறித்து தனது அதிருப் தியை வெளிப்ப டுத்தியிருக்கி றார் அமைச்சர் தென்னகோன்.

தம்புல்ல பகுதி சிங்கள மக்கள் இந்த பள்ளிவாசல் பழமை வாய்ந்தது. ஆனால் இந்த அக்கிர மத்தில் ஈடுபட்டவர்கள் ரஜ மஹா விகாரைச் சேர்ந்த பிக்கு கள்தான் என ரவூஃப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசல் நிர்வாகமும், மஸ் ஜித் கைரிய்யா சட்டப்பூர்வமா னது என்பதற்கான ஆவணங்க ளையும், உறுதிப்பத்திரங்களை யும் ரவூஃப் ஹக்கீமிடம் காண் பித்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் கட் சித் தலைவர்கள் மத உணர்வுக ளுக்கு அப்பால் நின்று பள்ளிவா சல் தாக்குதலை கண்டித்துள்ள னர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான், “பள்ளிவாசல் தகர்ப்புக்கு எதிராக அரசாங்கத் தில் இருக்கும் 29 முஸ்லிம் எம்.பி.க்கள் என்ன செய்யப் போகிறார்கள்?'' எனக் கேள்வியெ ழுப்புகிறார்.

இதே கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரான கபீர் ஹாஷிம், “பள்ளிவாசல்கள் பல வந்தமாக உடைக்கப்படுவது தொடர்ந்தால் முஸ்லிம் நாடுக ளின் ஆதரவை இலங்கை இழக்க நேரிடும்...'' என எச்சரிக்கிறார்.

ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரான மனோ கணேசனோ, “60 வருட பழமை வாய்ந்த பள்ளிவாசல் என்று முஸ்லிம்கள் கூறி வரும் வேளை யில் அதைப் பற்றி ஆராயாமல் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி வன்முறையில் ஈடுபடு வது பௌத்த மத தலைவர்கள் செய்யும் காரியமல்ல.

வடக்கிலும், கிழக்கிலும் பௌத்த மத விகாரைகள் இர வோடு இரவாக சட்ட விரோத மாக கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் சட்ட விரோதச் செய லுக்காக தமிழ், முஸ்லிம் அரசி யல்வாதிகளும், இந்து, முஸ்லிம் மதத் தலைவர்களும் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி னால் நிலைமை என்னவாகும்?

இந்த ஆட்சியின் கீழ் வரலாற் றில் என்றும் இல்லாத அளவிற்கு சிறுபான்மை மக்கள் கொடு மைக்கு உள்ளாகிறார்கள் என்ப தற்கு இந்தச் சம்பவம் உதாரணம். இது பெரும்பான்மை ஆணவத் தின் உச்சம்...'' என்றெல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரான ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே, சம்பவம் நடந்த அன்றே பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து புத்த பிக்குகளின் வன்முறை ஆட் டத்தை கடுமையாக கண்டித்தி ருக்கிறார்.

அக்கட்சியின் பிரமுகரான ஷரஃப்தீன், “சிறுபான்மை மக்க ளின் உரிமைகள் இலங்கையில் கேள்விக் குறியாக உள்ளன. தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பேரினவாதம் இப்போது முஸ் லிம்களை நோக்கி திருப்பப்படு கிறது. அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்டுவதை விடுத்து சமர சப் போக்கில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது...'' என்கிறார்.

சிறுபான்மை மக்கள் மீதான இலங்கை அசின் அடக்குமுறை யாகத்தான் தம்புல்ல சம்பவத் தைப் பார்க்க முடிகிறது. இல ங்கை முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரை அரச எதிர்ப்பு போராட்டங்களில் பொதுவா கவே தயக்கம் காட்டியே வந்தி ருக்கின்றனர். ஆனால் தம்புல்ல சம்பவம் அரச எதிர்ப்புணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக் கிறது. இதை ஏற்படுத்தியவர்கள் புத்த பிக்குகள்தான்.

- ஃபைஸ்

Pin It