அரசியல் கட்சிகள் உள்பட பல அமைப்புகளும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் கருத்துகளை வெளியிடக்கூடிய பொது இடமாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளது.

சமீபத்தில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கூடங்குளம் இடிந்தகரை மக்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகையாளர் அருள் எழிலன் ஒருங்கிணைத்த இந்த கூட்டத்தில் சமூக சிந்தனையாளரும் மனித உரிமை ஆர்வலருமான அ.மார்க்ஸ், எழுத்தாளர் ஜெயபிர சாகம், கவிஞர் மனுஷ்யபுத்திரன், பத்திரிகையாளர் ஞானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஞானி பேசும்போது, “கூடங்குளம் மக்கள் மீது காவல்துறை பல அடக்குமுறைகளை ஏவுகிறது. ஆனால் அதனை தட்டிக் கேட்கும் முதுகெலும்பு இல்லாத ஊடகங்களும், பத்திரிகைகளும் அமைதி காப்பது வெட்கக்கேடானது; தினமலர் பத்திரிகை பொய்யான, அவதூறான, கேவலமான செய்திகளை பரப்பி, வன்முறையைத் தூண்டி சட்டம் ஒழுங்கை கெடுக்க முயல்கிறது.

அதன் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும்; பிரஸ் கிளப் என்பது குடிப்பதற்கும், கூத்தடிப்பதற்கும், சீட்டாடுவதற்கும் பயன்படுவது வேதனைக்குரியது; கேவலமானது. நாய் பிழைப்பு...'' என்பன போன்ற சூடான வார்த்தைகளால் விளாசினார்.

ஞானியின் இந்த அதிரடிப் பேச்சால் அதிர்ச்சியடைந்த - பிரஸ் கிளப்பே கதியென கிடக்கும் சிலர் இதனால் ஆவேசமடைந்து ஞானிக்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கினர்.

“பத்திரிகையாளர்களையும், பிரஸ் கிளப்பையும் அவமானப்படுத்திய ஞானியே மன்னிப்பு கேள், பிரஸ் கிளப்பை விட்டு வெளியே போ!'' என அவர்கள் கோஷமிட, ஞானியோ “மன்னிப்பு கேட்க முடியாது'' என மறுத்ததுடன், “நானும் பத்திரிகையாளன்தான். 35 வருடம் இதழியல் பணியாற்றி உள்ளேன். எக்ஸ்பிரஸில் வேலை பார்த்தபோது பத்திரிகை தொழிற்சங்கம் அமைத்து பாடுபட்டேன்...'' என கடந்த காலத்தில் அவர் செய்த பணிகளை பட்டியலிட்டார்.

ஆனாலும் பிரஸ் கிளப்பைச் சேர்ந்த சிலர் ஆத்திரத்துடன் கூச்சலிட்டு ஞானியை தாக்க முயன்றனர். இதனால் ஞானி வெளியேறினார். ஆனாலும் இந்த பிரச்சினை பத்திரிகையாளர் யார்? பிரஸ் கிளப் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சென்னை நிருபர் சங்கம் திறக்கப்படுமா?

சென்னை பிரஸ் கிளப் அருகே அரசு கட்டிக் கொடுத்துள்ள சென்னை நிருபர் சங்கக் கட்டிடம் மூடியே கிடக்கிறது. இனி அதில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

அமைதிப்படுத்திய அ. மார்க்ஸ்! 

“பிரஸ் கிளப்பை குடிப்பதற்கும், கூத்தடிப்பதற்கும், கவர் வாங்குவதற்கும் பயன்படுத்தாமல் சமூக அக்கறையுடன் செயல்படுங்கள்...'' என்ற ஞானியின் ஆவேச பேச்சால் ஆத்திரமடைந்த பிரஸ் கிளப் உறுப்பினர்கள் சிலர் ஆக்ரோஷமாக கூச்சலிட்டு ஞானியை கடுமையாக திட்டித் தீர்த்தனர். ஞானி இனிமேல் பிரஸ் கிளப்புக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்றனர்.

மேலும், அன்றைய பிரஸ் மீட்டை எந்த பத்திரிகையும், ஊடகமும் வெளியிட முடியாது என்றனர். இப்படி பிரச்சினை பெரிதான நிலையில் அ. மார்க்ஸ், “ஞானி பேசியவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். உங்கள் மனம் புண்பட்டால் தயவு செய்து மன்னியுங்கள்...'' என உருக்கமாகக் கூறி அமைதிப்படுத்தினர்.

அணு உலைக்கு எதிரான கண்டக் கூட்டம்! 

கூடங்குளம் அணுஉலையை திறப்ப தற்கு தமிழக அரசு உத்தரவிட்டதைக் கண்டித்து கடந்த 22-03-2012 அன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட அணு உலைக்கு எதிரான கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மாநிலச் செயலாளர் அபு ஃபைஸல், துணைத் தலைவர் முஹம்மது முனீர், தோழர் டி.எஸ்.எஸ். மணி, ஆவணப் பட இயக்குனர் ஆளூர் ஷானவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு ஆகியோர் கலந்து கொண்டனர். தாயகத்திலிருந்த மதிமுக மல்லை சத்யாவும் கலந்து கொண்டார்.

இதில் கலந்து கொண்ட செய்தி ஊடகங்கள் எஸ்.எம். பாக்கர், வன்னி அரசு, மல்லை சத்யா ஆகியோரிடம் பேட்டி கண்டன. 

Pin It