முடிந்தது இலண்டன் மண்ணில்

                முறையாக ஒலிம்பிக் போட்டி

இழந்தது இந்தி யத்தார்

                எண்ணத்துக் கோட்டை; எல்லாம்

நடந்தது; தங்கம் வெல்லும்

                நம்பிக்கைக் கீற்று கூட

ஒடிந்தது; நம்ஊழல் பேர்

                ஒளிர்ந்தது உலகமெங்கும்

‘காமன்வெல்த்’ போட்டி ஊழல்

                கண்டோம்நாம்; எதிலு மேநம்

மாமன்கள் மச்சான் கள்தாம்

                மந்திரி, அதிகாரி என்று

‘nக்ஷமமாய் உள்நு ழைந்து

                தில்லியை ஆள்வர்; எங்கும்

‘ஹோமத்தீ’ ஓங்க வேண்டும்

                ஒலிம்பிக்தீ யார்க்கு வேண்டும்!

அண்டத்தில் நூற்றி ருபது

                கோடியாய் மக்கள் கண்டும்

குண்டூசி அளவி லான

                டுனீசியா நாடு கூட

கண்டோமே தங்கம் வெல்ல!

                கவலையை யார்க்குச் சொல்ல

மண்டையர் மன்மோகன் - ஆல்

                முடியுமா புரிந்து கொள்ள?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற

                ஒவ்வொரு நாட்டின் பேரும்

துலக்கியோர் கறுப்பி னத்தின்

                தொல்குடி மக்கள் அன்றோ?

தலைக்குனிவு அகன்று வெற்றித்

                தடம்காண இங்கும் இந்த

இலக்கினைக் கொள்ள வேண்டும்

                இனியேனும் வெல்ல வேண்டும்!
Pin It