நாம் பல செயல்களைச் செய்துகொண்டு வாழ்கின்றோம். நல்ல செயலோ, கெட்ட செயலோ பல செயல்கள் நம்மைவிட்டு விலகிக் கொண்டே உள்ளன. அப்படிப்பட்ட சில செயல்கள் குறிப்புகள் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் கொள்வது, அஞ்சல் அட்டை மற்றும் கடிதங்கள் எழுதுவது, தந்தி கொடுத்துச் செய்தி அனுப்புவது, உறவினர்கள் இல்லத்தில் விழாக்கள் நடத்தி உறவினர்களுக்கு உணவு பரிமாறுதல், காதல் கடிதங்கள் எழுதுவது, மாட்டு வண்டி களில் பொருட்களை ஏற்றுதல், முறைப் பெண்கள்-முறை மாமன்களின் மீது மஞ்சள்நீர் ஊற்றியது, பள்ளிகள், கல்லூரி கள் பொதுத் தேர்வு எண்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தது, மிதிவண்டிகளைப் பயன்படுத்தியது, நொண்டியாட்டம், கிட்டிப் புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலியாடுதல், பச்சைக் குதிரை யாட்டம், நிலாச்சோறு, அஞ்சாங்கல்லு, புலியன்கொட்டை தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்கள், நாணயங்களில் 1, 2, 3, 4, 10, 20, 25, 50 பைசா காசுகளைக் கண்டது, பனை-நுங்கு மட்டையில் வண்டி ஓட்டியது, அரைஞாண் கயிறு கட்டிக் கோவணம் கட்டியது, பட்டாபட்டி கால் சட்டை போட்டது, வரகு, சாமை, தினை அரிசிகளின் கஞ்சி காய்ச்சி யது; சோறு சமைத்தது, சிட்டுக்குருவிகளை சோளக் காட்டில் விரட்ட தகர டின்களைத் தட்டியது, இயற்கை உணவுகளை அதிகம் உண்டது, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மனநிறைவுடன் உதவியது, விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டியது, சுத்தமான ஆற்றுநீர் கண்டது, அதிகம் ஆடு-மாடுகளை நேசித்து வளர்த்தது, பனைஓலை மட்டான்களில் கூழ் குடித்தது, தெய்வமே தன்மீது வந்துவிட்டது என்று ஆடியது, மோடி வித்தைகள் காட்டியது, கிராமங்களின் விழாக் காலங்களில் கூத்து, கும்மி, லாவண்யம் விளையாடிது, இயற்கையாக நிலத்தில் நீர் மேலே ஊற்றாக வந்தது, நண்டு, தவளை, மீன்கள் போன்றவை அனைத்து அறுவடை நிலத்திலும் நிறைந்து இருந்தது, ஒளி, ஒலி-நாடாக்களில் பதிவு செய்தது, பட்டன் வைத்த கைப்பேசி வைத்திருப்பது, பெரிய பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வைத்து பார்த்தது, மண் ணெண்ணெய் விளக்குகளை ஏற்றியது, கையூட்டு வாங் காமல் வேலை செய்யும் அரசு ஊழியர்கள், அக்கறையுடன் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், விரல்விட்டு எண்ணும் நேர்மையான காவலர்கள், நீதிபதிகள், சொத்து சேர்க்காத அரசியல் தலைவர்கள், தன்னுடன் இருப்போரின் நலன்களில் அக்கறைகாட்டும் ஒருசில தலைவர்கள், தனக்கு பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல், பொது மக்களின் நலன் களில் அக்கறையுடையவர்கள் - போன்ற செயல்களையும், தலைமுறையினர்களையும் இனி காண்பது அரிது; இனி காணவும் முடியாது. நாம்தான் இவைகளை கண்ட கடைசி ஆட்கள். இயற்கையை காப்போம். நீர்வளம், நிலவளம், மனிதவளம் பெருக்குவோம்.

Pin It