மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவனுடைய வாழ்க்கை முறை, வரலாறு, பண்பாடு, சமூக கலை பொருளாதாரக் கூறுகள், விவசாயம், அரசியல், உறவு முறைகள் பற்றி நாம் தெரிந்துகொள்ளப் பயன்படுபவையே அகழ்வாராய்ச் சிகள். நமக்குத் தெரிந்து நம் பாடநூல்களில் வெளிவந்த அரப்பா, மொகஞ்சதாரோ, சிந்து சமவெளி நாகரிகங்கள் ஆகியவற்றை இதுவரை படித்திருப்போம்.
இந்த நாகரிகங்களைவிடக் காலத்தால் முந்தைய நாகரிகம் நம் தமிழர் நாகரிகம்தான் என்பதைத் தற்போது கீழடியில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகளிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் அறியலாம். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி” என்று நம் தமிழ்க்குடி வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.
தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும், கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதும் கீழடியில் நடந்த 4ஆம் கட்ட ஆய்வில் தெரிய வருகிறது. தமிழர்களின் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம் பெரும் பழமையான நாகரிகம் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கீழடியில் 4ஆம் கட்ட ஆய்வில் கிடைத்த 5000க்கும் மேற்பட்ட அரும்பொருள்களின் தேர்ந்தெடுத்த, மாதிரி சர்வதேச ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வகச் சோத னைகளின் அடிப்படையில் அறிஞர் குழுவால் அறிவிக்கப்பட் டுள்ளது. அதன் அடிப்படையில் நம் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் “கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நாகரிகம்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்ப ட்டுள்ளது.
கீழடி அகழ்வாய்வில் திமில் உள்ள எலும்புக் கூடு கிடைத்திருக்கிறது. அது நம் வேளாண்மைத் தொழிலையும், தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குரிய தொன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. வடநாட்டவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் பல்வேறு நிகழ்வுகளின் ஆதாரங்களை மூடி மறைத்துவிட்டார்கள். இப்போதும் கீழடியில் 2015 முதல் 2017 வரை நடந்த 3ஆம் கட்ட ஆய்வுகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமலேயே உள்ளன.
சிந்து சமவெளி ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டு 1922. அதற்கு முன்பே 1876-இல் நடத்தப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுதமிழர்கள் பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வைப் பற்றி உலகுக்கு உணர்த்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து “தமிழ்நாட்டுத் தொல்லி யல் ஆய்வுகள்; ஆதிச்சநல்லூர் சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்” என்ற பொருளில் 2009 மார்ச் 4, 5, 6 தேதிகளில் தேசிய கருத்தரங்கமாகப் பல்வேறு அறிஞர்களை அழைத்து நடத்தின.
தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமையில் நடக்கும் இந்த அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாட்டிற்கு அனைவரும் ஊக்கமூட்டி, ஒத்துழைக்க வேண்டுகிறேன்.