பேராசிரியர் இராதாகிருட்டிணன் (சுதந்தர இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர்) “இந்துக் களின் பெருமையை நிரூபிப்பதற்கு ஒரு வாதம் இருக்கிறது. காலத்தின் அதிர்ச்சிகளைத் தாங்கி அது உயிர் பிழைத்திருக்கிறது. இந்துமதம் இன்னும் இருந்து வருகிறது. அதேபொழுதில் பிற பண்டைய வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் நீண்ட காலத்திற்கு முன்பே மாண்டு போய்விட்டன” என்று ஒரு சமயம் கூறினார்.

இந்த வாதத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு கூறினார் :

“இந்தக் கூற்று ஒரு தீங்கான வாதத்திற்கு - உயிர் பிழைத்திருப்பதானது, பிழைத்திருப்பதற்குத் தகுதியு டையது என்று நிரூபணமாகிறது என்பதின் அடிப் படையாகிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறதா அல்லது இறந்து விட்டதா என்பதல்ல பிரச்சினை என்று எனக்குத் தோன்றுகிறது. அது எந்த அடிப்படையில் வாழ்கிறது என்பதே பிரச்சினையாகும். உயிர் பிழைத்திருப்ப தற்கான வெவ்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே சம அளவில் மரியாதைக்குரியவை அல்ல. ஒரு தனிநபருக்கும், அதுபோலவே ஒரு சமுதாயத்திற்கும் வெறுமனே வாழ்வதற்கும், தகுதியான முறையில் வாழ்வதற்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்கிறது. ஒரு போரில் ஈடுபட்டு, புகழுடன் வாழ்வது ஒரு வழி, பின் வாங்கிச் சென்று சரணடைந்து, ஓர் அடிமையைப் போல் வாழ்வதும் உயிர் பிழைத்திருப்பதற்கான ஒரு வழியாகும். தானும் தன் மக்களும் உயிர் பிழைத்திருக்கிறோம் என்ற உண்மையில் ஒரு இந்து பெருமை கொள்வது பயனற்றதாகும். அந்த உயிர் பிழைப்பின் தன்மை (தகுதி) என்ன என்பதை டாக்டர் இராதாகிருட்டிணன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர் அதைச் செய்தால், உயிர் பிழைத்திருப்பதை மட்டுமே கொண்டு அவர் பெருமை கொள்ளமாட்டார் என்று நான் உறுதியாகக் கூறுவேன். இந்துக்கள் தொடர்ந்து தோல்வி வாழ்க் கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நிலையாக உயிர் பிழைத்திருப்பதாகத் தோன்றுவது, நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பதல்ல. அது உயிர் பிழைத்திருக்கும் ஒரு வழியேயாகும். உண்மையை ஒத்துக்கொள்வதற்குப் பயப்படாத ஒவ்வொரு நியாயப் புத்தியுடைய இந்துவும் இது குறித்து அவமானமடைவர்.”

(1936 சூன் 25, ‘விளக்கு’ (லேம்ப்) இதழில் வெளியானது. ஆதாரம் : டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 36, பக்கங்கள் 24, 25)

Pin It