பொதுநலம் பேணாத பொய்யாளர் கேண்மை
மதுவினுங் கேடு தரும்.

பிறர்நலம் பாராது தன்னலமே பார்ப்பான்
குலநலம் குன்றி விடும்.

வாழ்க்கைக்கு வேண்டாம்காண் தன்நலம்; வேண்டுமெனில்
தீக்குச்சிநீ போலக் கெடும்.

எந்நலத்தும் யாம்கண்ட தில்லை பழிசேர்க்கும்
தன்னலத்தின் தாழ்ந்த பிற.

தன்னலம் என்றோரு தாழ்ந்தநோய்; சேர்ந்தாரின்
நன்னலம் நீக்கி விடும்.

புவிகூறும் பொய்க்கெல்லாம் தாயாகும்
    தன்னலத்தால்
பேரோடு சீரும் கெடும்.

அறிவிற் சிறந்தே அடங்கியவர் எண்ணார்
இழிவைப் பயக்கும் நலம்.

பொதுநலம் பேணி இருப்போர்க்குக் காட்டும்
அதுநலம் ஆயுள் வரை.

தந்நலம் காக்கப் பிறர்நலங் கொல்வானின்
என்னலத்தும் என்ன பயன்?

தன்னலம் கொண்டு தருக்கும் தகவிலார்
நன்னலம் பேசல் நகை.

- பாவலர் வையவன்

Pin It