எல்லைப் பிரிக்கையில்ஏற்பட்ட சூதுதான்

முல்லைப் பெரியாறுக்கு முட்டு - தொல்லைதந்து

கூட்டாட்சி யைப்பிடித்தோர் பூணூலில் கட்டிவிட்டான்

பட்டேலாம் பார்ப்பா னவன்.

ஆட்டோடு மாட்டோடு பன்றி பலவிலங்கைக்

கூட்டியொடு பட்டியிலே பூட்டிவிட்டான் - கேட்டதற்கு

‘இந்தியா’ என்றே இளித்தவாய்க் காட்டுபவர்

மந்தியோ! மற்ற எதுவோ?

அவனவன் வீட்டிலே அன்போடு வாழாது

எவனது வீட்டிலும் ‘பாய்’ தான் - எவனெங்கும்

வந்தே பொறுக்கிட வாய்ப்புள்ள பாட்டாகும்

வந்தே மாதரந் தான்.

யாருக்கு வேண்டுமிங்கு இந்திமொழி; அய்யய்யோ

யாருக்கு வேண்டுமிங்கு ஜெய்இந்து - பாருக்கு

யாதும்நம் ஊரென்றும் யாவரும் கேளிரென்றும்

ஓதியதே நாங்களன் றோ!

Pin It