சாதிக்கு
ஒரு நீதி சொல்லும்
சனாதன வர்ணாசிரமப் பேயை
அறிவெனும் உடுக்கால்
விரட்ட வந்த
புதிய கோடாங்கி
ஏதிலிகள் ஏற்றம்பெற
இம்மண்ணில் அவதரித்த
போதிமரத்துப் புத்தன்
வெறும் சட்டமேதை என்று
எல்லோரும்
கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
உன்னை,
நீயோ
மனிதகுல வரலாற்றில்
புதிய அத்தியாயம்
படைக்க வந்த
புரட்சிப் படைப்பாளி
கடவுள்களென்று
கதைக்கப்பட்ட
இராமனையும் கிருட்டிணனையும்
கடையர்களென்று ஆய்வினால்
சிதைத்தவன் நீ !
இந்துமதப் புதிர்களை
எதற்கும் அஞ்சாது
நிந்தனை செய்து
ஆரியர்களின் நிம்மதியைக்
குலைத்தவன் நீ !
எங்கள் நெஞ்சில்
நிலைத்தவன் நீ !
Pin It