சிறுவர் பாடல்

மேதை அம்பேத்கர்
சாதனை மாந்தர்
மெலிந்தவர் போற்றும்
விடுதலை வேந்தர்
ஏப்பிரல் பதினான்கு
அவரின் பிறந்தநாள்
திசம்பர் ஆறு
திருமகன் இறந்த நாள்
படிப்பையும் அறிவையும்
பாமரர் மேம்பட
வழங்கிய தூயவர்
வரலாற்று நாயகர்
அரசியல் சட்டம்
அளித்த மேதை
அறிவர் புத்தர்
வழிஅவர் பாதை
சாதி ஒழிப்பே
அவரின் செந்நெறி
சமத்துவம் காணச்
செல்வோம் அவர்வழி!

Pin It