சூலை 9 அன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் வட கிழக்கில் தெற்குச் சூடான் புதிய சுதந்திரத் தேசமாய் மலர்ந்தது, தெற்குச் சூடானின் மக்கள் தொகை 85 இலட்சம்தான். ஆயினும் கர்டோமைத் தலைநகராகக் கொண்ட சூடானின் கொடுங்கோன்மையை எதிர்த்து தென்சூடானியர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதமேந்திப் போராடினர். இதில் இருதரப்பிலும் சேர்ந்து 10 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டனர். (தி இந்து, 14.7.2011 தலையங்கம்) தெற்குச் சூடானியரின் வீரஞ்செறிந்த தேசிய இன விடுதலைப் போராட்டம், வெற்றியில் முடிந்ததற்கு, அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளான அய்ரோப்பிய நாடுகளும் தொடர்ந்து அளித்த ஆதரவும், செய்த உதவிகளும் பெருங் காரணிகளாகும்.

கி.பி.632இல் முகமது நபியின் மறைவுக்குப்பின், அவரால் தோற்றுவிக்கப்பட்ட இசுலாமிய மதம் சூடா னின் வடபகுதியில் பரவியது. இந்தியாவுக்குள் ஆரியர் கள் அலை அலையாய் நுழைந்து, பல பகுதிகளிலும் பரவி தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். அதுபோல் அராபிய இசுலாமியர்கள் அலை அலையாய் நுழைந்து சூடானின் வடக்கின் பெரும் பகுதியில் தங்கள் ஆதிக் கத்தை நிலைநாட்டினர். காலங்காலமாக வாழ்ந்த நிலப் பகுதியிலிருந்து - இசுலாமிய மதத்திற்கு மாற விரும்பாத ஆப்பிரிக்கப் பழங்குடியினர் சூடானின் தென்பகுதிக்கு விரட்டப்பட்டனர். எனவே வடசூடா னுக்கும் தென் சூடானுக்கும் இடையிலான முரண்பாடு பல நூற்றாண்டுகளாக நீடித்துவந்தது.

19ஆம் நூற்றாண்டில் கிறித்தவப் பாதிரிகளின் பரப்புரையால் - தொண்டால், தென்சூடானியரில் பெரும் பகுதியினர் கிறித்துவ சமயத்தை ஏற்றனர். மற்றவர்கள் இயற்கையை வழிபடுவோராக உள்ளனர். இசுலாம் - கிறித்தவம் எனும் மதவழிப்பட்ட வேறுபாடு சூடான் மக்களிடையிலான முரண்பாட்டை மேலும் முற்றச் செய்தது.

இலங்கையில் முதலில் டச்சுக்காரர்களின், பின்பு ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன், சிங்களர் ஆட்சிப் பகுதி தனியாகவும், தமிழர் ஆட்சிப் பகுதி தனியாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தன. அதைப்போலவே சூடானிலும் வடக்கும், தெற்கும் தனியாட்சிகளாக விளங்கின. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் சூடான் வந்தபிறகு கூட, வடக்கும் தெற்கும் தனியான ஆட்சிப் பகுதிகளாகவே இருந்தன. 1948இல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர் வெளி யேறியபோது, இலங்கை முழுவதன் அரசுரிமையைச் சிங்களரிடம் கொடுத்துவிட்டுச் சென்றது போல், 1956 இல் பிரித்தானிய ஏகாதிபத்தியம் சூடான் நாட்டில் முழு ஆட்சி அதிகாரத்தையும் கர்டோமைத் தலைநகராகக் கொண்ட வடசூடானிய அராபிய இசுலாமியர்களிடம் ஒப்படைத்தது.

வடசூடானையும் தென்சூடானையும் சூட் எனும் பெரும் சதுப்பு நிலப்பகுதி பிரிக்கிறது. அதனால் ஆங்கிலேயர் அந்நாட்டிற்குச் சூடான் என்று பெயரிட்ட னர். (தி இந்து, 10.7.2011) சூடான் ஆப்பிரிக்கக் கண் டத்தில் பரப்பில் மிகப் பெரிய நாடு. உலக அளவில் 10ஆவது பெரிய நாடாக இருந்தது. இந்திய நிலப்பரப் பில் 75 விழுக்காடு கொண்டதாக இருந்தது. ஆனால் மக்கள் தொகை 4 கோடி மட்டுமே!

எண்ணெய் வளத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் சூடான் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. சூடானில் கிடைக்கும் எண்ணெயில் 80 விழுக்காடு தென் சூடானில் கிடைக் கிறது. ஆனால் எண்ணெய் துப்புரவு நிலையங்கள் வட சூடானில் உள்ளன. இதை ஏற்றுமதி செய்வதற் கான துறைமுகமும் வடசூடானில் இருக்கிறது.

தெற்குச் சூடான் புறக்கணிக்கப்பட்டது; வஞ்சிக்கப் பட்டது; ஒடுக்கப்பட்டது. இசுலாமிய ஷரியத் சட்டம் திணிக்கப்பட்டது. எனவே தென் சூடானியர் மருத்துவர் ஜான் கரங் டி மபாயர் தலைமையில் வடசூடானின் ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ந் தெழுந்தனர். அதற்காகச் ‘சூடான் மக்கள் விடுதலைப் படை’ 1983 மே 16 அன்று போர்டவுன் என்ற இடத் தில் நிறுவப்பட்டது. மதச்சார்பற்ற சோசலிச அரசை அமைப்பதே குறிக்கோள் என்று தலைவர் மபாயர் அறிவித்தார்.

1989இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஓமர் அசன் அல் பஷீர், சூடான் ஆட்சியைக் கைப்பற்றி னார். அதுமுதல் சூடானின் அதிபராக - சர்வாதிகாரி யாக இருந்து வருகிறார்.

ஓமர் அசன் அல் பஷீர் ஆட்சிக்குவந்தபின் தென் சூடானியர் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டார். சூடான் மக்கள் விடுதலைப் படை, ஆதிக்க ஆட்சியாளர்களின் தாக்குதலை முறியடித்தது. அதன் விளைவாக 1993 இறுதியில் தெற்குச் சூடான் தனி நிர்வாகப் பகுதியாக அமைக்கப்பட்டது.

 

தன்னைப் பிறவி கிறித்தவன் என்று கூறிக்கொள் வதில் பெருமிதங்கொள்ளும் புஷ் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தபோது தென் சூடானில் இருந்த சில கிறித்துவக் குழுக்கள் வெள்ளை மாளி கையின் அதிகாரவர்க்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டன. அதனால் தெற்குச் சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு மேலும் வலுப்பெற்றது.

மேற்குச் சூடானின் தார்பர் பகுதியின் பெரும்பான் மை மக்கள் இசுலாமியர். ஆனால் அரசின் புறக்கணிப் பால் அங்கு கொடிய வறுமை தாண்டவமாடியது. தார்பர் பகுதி மக்கள், பஷீர் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். தெற்குச் சூடான் விடுதலையை ஆதரித்தனர். அதனால் கொடுங்கோலன் பஷீர், படைகளையும், அராபிய குண்டர் படையினரையும் தார்பர் பகுதி மக்கள் மீது ஏவினார். பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. 20 இலட்சம் மக்கள் அஞ்சி தம் வாழிடங்களை விட்டு ஓடினர். எனவே தெற்குச் சூடான் விடுதலைப் போராட் டத்தை இசுலாம் - கிறித்துவம் என்ற மதக் கண் ணோட்டத்துடன் சுருக்கிவிட முடியாது. ‘மக்களில் ஒரு பிரிவினர் மற்றொது பிரிவினர் மீது நிகழ்த்தும் ஒடுக்கு முறையே ஏகாதிபத்தியம்’ என்கிற லெனினின் வரை யறையின்படி, தார்பர் பகுதி மக்களின் போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமேயாகும்.

தார்பர் மக்கள் மீது பஷீர் அரசு நடத்திய படுகொலை உலகையே உலுக்கியது. இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவற்றுக்காக பஷீர் தண் டிக்கப்பட வேண்டுமென்று உலகம் முழுவதும் எதிர்ப் புக்குரல் ஒலித்தது. அமெரிக்கா, மேற்கு அய்ரோப்பிய நாடுகள் பஷீர் எதிர்ப்பில் முன்னிலையில் நின்றன. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் சூடான் அதிபர் பஷீர் இனப்படுகொலை செய்தார் என்பதை உறுதி செய்து அவரைக் கைது செய்ய ஆணையிட்டது. அமெரிக்கா சூடானை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஆயினும் அரபு நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளும் பஷீர் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தன. அதன்பின் பஷீர் சீனாவின் ஆதரவுடன் ஆட்சியில் தொடர்ந்தார்.

இந்த நெருக்கடியைத் தணிப்பதற்காக, பஷீர் அரசு தெற்குச் சூடானுடன் உடன்பாடு செய்துகொள்ள முன் வந்தது. அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ், 2005ஆம் ஆண்டு மே மாதம், வடக்குச் சூடான் அரசுக்கும் தெற்குச் சூடான் மக்கள் விடுதலை இயக்கத் துக்கும் இடையில் நய்வாஷா நகரில் உடன்படிக்கை ஏற்பட்டது. புஷ் ஆட்சியில் அமெரிக்காவின் அயலுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவெல் இதில் முதன்மையான பங்காற்றினார்.

உடன்படிக்கை ஏற்பட்ட இரண்டு மாதங்களில் மபாயர் விபத்தில் காலமானார். அவருக்குப்பின் சல்வா கிர் மாயார்தித் இயக்கத்தின் தலைவரானார்.

2005 உடன்படிக்கையின்படி 2011 சனவரியில் நடந்த கருத்து வாக்கெடுப்பில் தெற்குச் சூடான் மக்கள் 98.83 விழுக்காடு வாக்குகளைத் தனிநாட்டிற்கு ஆதரவாக அளித்தனர். அதனால் 9.7.2011 அன்று தெற்குச் சூடான் தனிச் சுதந்திர நாடாக மலர்ந்த்து. சல்வாகிர் மாயார்தித் தெற்குச் சூடான் நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆப்பிரிக்கப் பெருநிலப் பரப்பில் 54ஆவது நாடாக உருவான தெற்குச் சூடான் அய்.நா. மன்றத்தின் 193ஆவது உறுப்பு நாடாக இணைந் தது. அதன் தேசியக்கொடி அய்.நா. மன்றத்தில் ஏற்றப்பட்டது.

தெற்குச் சூடான் மக்கள், விடுதலையின் மகிழ்ச்சி யில் திளைத்துள்ளனர். ஆயினும் தெற்குச் சூடான் முன் தீர்க்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. தெற்குச் சூடான் இந்திய நிலப்பரப்பில் 19ரூ பரப்புடையது. ஸ்பெயின் நாட்டைவிடப் பெரியது. வடக்குச் சூடானுக்கும் தெற்குச் சூடானுக்கும் இடையில் 1900 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லையைத் தீர்மானிக்க வேண்டி யுள்ளது. எண்ணெய் வளம் மிக்க அப்யே (ஹலெநi) பகுதியில், ஒப்பந்தப்படி இரண்டாம் கட்டமாகக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் அப்யேவின் நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடக்குச் சூடான் படையினர் அதிரடியாகக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் நூறு தென் சூடானியர் கொல்லப்பட்டனர். 45,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோன்று தெற்குச் சூடானின் எல்லையை யொட்டியுள்ள தெற்குக் கார்டோபன் பகுதியில் வாழ் வோரில் பெரும்பான்மையினர் தென்சூடானியர். இவர் கள் தெற்குச் சூடான் விடுதலைப் போராட்டத்திற்குப் பலவகையிலும் உதவியவர்கள். இவர்களின் எதிர் காலம் கேள்விக்குரியாக உள்ளது. இதேபோன்ற சிக்கல் தார்பர் பகுதியிலும் உள்ளது. மேலும் எண்ணெய் வளத்தைப் பங்குபோட்டுக் கொள்வது பற்றி முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது.

எனவே 9.7.2011 விடுதலை நாளில், தலைநகர் ஜுபாவில், வடக்குச் சூடான் அதிபர் அல்-பஷீர் முன்னி லையில், தெற்குச் சூடானின் அதிபராகப் பொறுப்பேற்ற சல்வாகிர் மாயார்தித் உரையாற்றிய போது,“அப்யே, தார்பர், நீலநைல், தெற்குக் கார்டோபன் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நான் ஓர் உறுதியை அளிக்க விரும்புகிறேன். உங்கள் துன்பம் எங்கள் துன்பமாகும். நீங்கள் குருதி சிந்தினால், அது எங்கள் குருதி கொட்டு வது போன்றதாகும். வடக்குச் சூடான் அதிபருடன் கலந்துபேசி, உங்கள் சிக்கல்களுக்கு நியாயமான, அமைதி யான தீர்வு காண்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று அறிவித்தார். இச்சிக்கல்கள் விரைவில் தீருமா? அல்லது உள்நாட்டுப் போராக மாறுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

6,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தெற்குச் சூடானில் 100 கி.மீ. அளவுக்கே நல்ல பாதை உள்ளது. தெற்குச் சூடானில் 1200 கி.மீ. தொலை வுக்கு நைல் நதி ஓடுகிறது. ஆனால் தலைநகர் ஜுபாவில் மட்டும் ஒரே ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மருத்துவமனை மட்டுமே உள்ளது. மகப் பேறு காலத்தில் பெண்கள் அதிகமாக இறப்பதில் தெற்குச் சூடான் உலகில் முதலிடத்தில் உள்ளது. பெண்களில் 80ரூ பேர் எழுத்தறிவற்றவர்கள். குடிநீர், பீர், தொழிற் சாலை தவிர வேறு தொழிற்சாலை இல்லை. அந்த அளவுக்கு வடக்குச் சூடான் ஆட்சியால் தெற்குச் சூடான் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் தெற்குச் சூடான் தற்சார்பு உடைய நாடாக உருவாவதற்குத் தேவையான வளங்கள் உள்ளன. எண்ணெய் வளம், பயிரிடுவதற்கு ஏற்ற பெரும் நிலப்பரப்பு, நைல் ஆற்றின் நீர்வளம் ஆகிய வற்றை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால், மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு களையும், வேலை வாய்ப்பையும் அளிக்க முடியும்.

வல்லரசு நாடுகளின் துணையுடன் விடுதலை பெற்றிருப்பதால், அந்நாடுகள் தெற்குச் சூடானின் வளங் களையும், மனித உழைப்பையும் சுரண்டாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை தெற்குச் சூடான் அரசுக்கு இருக்கிறது.

தெற்குச் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் தந்தையாக விளங்கிய ஜான் கரங் டி மபாயர் விரும்பி யவாறு தெற்குச் சூடான் உண்மையான மதச் சார்பற்ற சோசலிசக் குடியரசாக அமைய வேண்டும். தேசிய இனங்களின் விடுதலையை நேசிக்கின்ற அனைவரும் சுதந்திர தெற்குச் சூடானை வரவேற்போம்.

Pin It