மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் பேரவையும் இணைந்து, புது தில்லியில் இராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தில், திருவள்ளுவர் அரங்கில் 25.03.2012 ஞாயிறு மாலை 4 மணிக்கு, “எல்லா வகுப்பினர்க்கும் கல்வியிலும், வேலையிலும் விகிதாசார வகுப்புவாரிப் பங்கீடு கோரும் மாநாடு” நடைபெற்றது. அம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1: இந்தியாவிலுள்ள இந்துக்களில் 52 விழுக்காட்டினரும், இஸ்லாம், சீக்கியம், கிறித் துவம் முதலான சிறுபான்மை மதங்களைச் சார்ந் தவர்களில் 52 விழுக்காட்டினரும், சமுதாயத்திலும், கல்வியிலும், பிற்படுத்தப்பட்டவர்கள் என “மண்டல் குழுவினர்”; கண்டறிந்தனர். இவர்களுக்கு 52 விழுக் காடு இட ஒதுக்கீடு தரப்படுவதே இவர்கள் மற்ற வகுப்பினரைப்போல முன்னேற்றம் பெற வழியாகும். ஆயினும் 1963-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), 16 (4), 338(10) இவற்றில் இல்லாத ஒரு கோட்பாட்டை அவர்களா கவே உருவாக்கி, “ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் அளவு 50 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர். இதன் நேரடி விளைவாகவே எப்போதும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காட்டுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட முடியாத – மக்கள் நாயக உரிமை வேண்டு மென்றே மறுக்கப்பட்டவர்களாகப் பிற்படுத்தப் பட்டவர்கள் வைக்கப்பட்டுவிட்டனர். இது அநீதி யாகும் எனக் கருதுகிறோம்.

இக்குறையை நீக்கும் வகையில் இந்தி யாவிலுள்ள இந்து மற்றும் சிறுபான்மை மதங்களிலுள்ள முற்பட்ட வகுப்பினர், எல்லா மதங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பி னர் மற்றும் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் ஆகிய நான்கு வகுப்பினருக்கும் (ஊழஅஅரnவைநைள ழச ளுநபஅநவெள) அந்தந்த வகுப்பி னரின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்குச் சமமாக இடப்பங்கீடு செய்து தந்திட ஏற்ற வகையில் கல்வியிலும், வேலையிலும் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் பங்கீடு செய்து தர உரிய ஏற்பாட்டை உடனடியாக இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.

பழைய சென்னை மாகாணத்தில் 100 இடங் களையும் பங்கீடு செய்து தரும் நடைமுறை 1928 முதல் 1954 வரை பின்பற்றப்பட்டது. அதனால் எல்லா வகுப்பினரிலும் உள்ள தகுதியுள்ளவர்கள் வாய்ப்புப் பெற்றனர். தகுதியுள்ளவர்கள் எந்த வகுப்பிலும் புறக்கணிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே மொத்த முள்ள 100 விழுக்காட்டு இடங்களையும் பங்கீடு செய்து தர உரிய ஏற்பாட்டை நிறைவேற்றிட இந்திய அரசினரும், இந்திய நாடாளுமன் றத்தினரும் ஆவன செய்ய வேண்டுமென இ;ம்மாநாட்டின் வாயிலாக வேண்டிக்கொள்கிறோம்.

தீர்மானம் 2: பெரும்பாலான மாநில அரசு களிலும் உள்ளது போன்று, இந்திய அரசிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமுதாய, கல்வி, பொருளாதார நலன்களை மேம்படுத்தும் திட்டங் களை வகுக்கவும், அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து பெறவும் ஏதுவாகப் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகம் என்னும் பெயரில் தனியாக ஓர் அமைச்சகத்தை உடனடி யாக இந்திய அரசினர் ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 3: 1980-ல் “மண்டல் குழு” பரிந் துரை செய்தபடி, எல்லா அரசுத்துறைகளிலும், எல்லா அரசுப் பொதுத்துறை நிறுவனங்களிலும், கல்விலும், வேலையிலும் ஒதுக்கீடு தரப்படுவது போலவே, வணிகம், வங்கிக் கடன், தொழில் முதலான எல்லாத் துறைகளிலும் பிற்படுத்தப் பட்டோர்க்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு இந்திய அரசினரை வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 4: பிற்படுத்தப்பட்டோர் குழு மற்ற குழுக்களைப் போலவே ஏழு (7) உறுப்பினர் களைக் கொண்டதாக விரிவு செய்யப்பட வேண்டும் என்றும், அந்தக் குழுவின் தலைவராக நீதிபதிகளாக இருந்தவர்களே அமர்த்தப்படுவது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை உள்ள அரசியல் கட்சிச்சார்பற்ற தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு நிபுணரையே அமர்த்த வேண்டும் என்றும்; இக்குழுவிற்கு இப்போது உள்ள ஒரே பணி, பட்டியலிலுள்ள சாதிகளில் எவற்றை நீக்குவது எவற்றைச் சேர்ப்பது என்பதை மட்டுமே செய்யும் அதிகாரம் தரப்பட்டிருப்பது நகைப்பிற்கு இடமானது என்றும் இம்மாநாடு மனமாரக் கருதுகிறது.

இக்குழு அரசியல் சட்ட அமைப்பின்படி முழு அதிகாரம் வழங்கப்பட்டதாக அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய அரசினரை இந்த மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 5: பிற்படுத்தப்பட்டோராக உள்ளவர்கள் 2012-ல் ஏறக்குறைய 58 விழுக் காட்டினர் ஆவர். இவ்வகுப்பினர் பெரியாh

ஈ. வெ. இராமசாமி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோரின் வழிநின்று இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள எல்லாத் தீர்மானங்களையும், எல்லா வகுப்பு மக்களிடமும் விளக்கிக் கூறி விழிப்புணர்வை உண்டாக்கிட ஆர்வத்துடன் முன்வர வேண்டு மென்றும், பிற்படுத்தப்பட்டோர் எல்லோரும் ஒன்று திரண்டு இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட வேண்டுமென்றும்; முற்பட்ட வகுப் பினர் எல்லோரும் இம் மாநாட்டின் கோரிக்கை களில் உள்ள நியாயங்களை உணர்ந்து அவர்கள் எல்லோரும் இக்கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட மனமுவந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

Pin It