சிறுவர் பாடல்

இவர்தான் நமக்குப் பாவேந்தர்
இனத்தை எழுப்பிய தமிழ்வேந்தர்
கவர்ந்தார் இனிய பாட்டாக
கலந்தார் நம்முள் மூச்சாக
அமிழ்தத் தமிழில் மகிழ்ந்தாரே
அழகின் சிரிப்பில் நனைந்தாரே
கமழக் கவிதை வடித்தாரே
கன்னல் சுவையாய்க் கொடுத்தாரே
சாதி மதங்கள் பொய்என்றார்
சமம் எல்லாரும் மெய்என்றார்
நீதி நேர்மை உயர்வென்றார்
நிலத்தில் ஆண்பெண் ஒப்பென்றார்
எளிய சொற்கள் தாம்கொண்டு - இவர்
இயற்றிய பாடல்கள் கற்கண்டு
தெளியக் கற்போம் மனங்கொண்டு
செய்வோம் நாளும் தமிழ்த்தொண்டு.

Pin It