தி.பி.2051 கும்பம் 09 (கி.பி.2020 பிப்பிரவரி 21)

தமிழ்நாட்டுக்கல்வி இயக்கம் சென்னையில் நடத்திய உலக - தாய்மொழி நாள் பேரணி ஆனது மாணாக்கர்கள்-ஆசிரியர்கள்-பெற்றோர்கள் பங்கேற்புடன் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.பொழிலன் பேரணிக்குத் தலையேற்க, செய்தித் தொடர்பாளர் திருமலை தமிழரசன், சென்னை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பேரணிக்கான முன்னேற்பாடுகளைச் செய்தனர். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க.காமராசு அவர்கள் தொடங்கி வைத்த பேரணியை, பேராசியர் கருணானந்தம், முனைவர் மா.பூங்குன்றன் ஆகியோர் நிறைவு செய்து வைத்தனர்.

world language day 600கருமலை (கிருட்டிணகிரி) மாவட்டத்தில் தமிழ் நாட்டுக் கல்வி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புரவாளன் தலைமையில், உலக-தாய்மொழி நாள்விழாவானது இராயக்கோட்டை அருகிலுள்ள இரா.நொரப்புக்குட்டை, ஒடையாண்ட அள்ளி, ஏரி சின்ன கவுண்டன அள்ளி ஆகிய ஊர்களின் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் சோசப்ராபின் உறுதுணையாக இருந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்ப்பேட்டையில் உலகத் தாய்மொழி நாள்(21.02.2020), தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.ஆற்றல் எனும் சக்தி, அனைவரையும் ஒருங் கிணைத்தார். மாணவர்கள் ஊக்கத்தோடும் உணர் வோடும் பங்குபெற்றனர்.  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் "உலக-தாய்மொழி நாள் விழா! கருத்தரங்கத்தை (21.02.2020) வெள்ளிக்கிழமை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் சிறப்பாக நடத்தியது. ஆசிரியர் சி.சசிக்குமார் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து, கருத்துரையாற்றினார். தமிழ்நாட்டுக்கல்வி இயக்கத் தின் கொள்கைப் பரப்புநரும் மாணவருமாகிய தமிழ்ச் சமரன் (தருமசாசுத்தா), எழுச்சியுரையாற்றினார். 

தெற்குமண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.கர்ணன் தலைமையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், (20.02.2020) வியாழக்கிழமையன்று தெரு முனைக் கூட்டமும், அடுநாள் (21.02.2020) காலையில், பள்ளிக்கூடத்தில் தாய்மொழி நாள் விழா கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. மேலும், அன்றைய நாளின் மாலையில், சிவகங்கை நகரத்தில் பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை இரா.பாவாணன் அவர்கள், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் குணசேகரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மதுரை மாவட்டம் சோளங்குறுணியில் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் கொள்கைப் பரப்புநர் ஆசிரியர் துளிர் அவர்களின் முன்முயற்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்புடன் பேரணி மற்றும் உரை அரங்கம் நடைபெற்றது. பேரணியில், தமிழே கல்விமொழி! தமிழ் நாட்டிற்கே கல்வி உரிமை! தமிழ் வழி படித்தோருக்கே வேலை! எனும் முழக்கங்கள் ஓங்கி எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடை பெற்ற உரைஅரங்கத்தில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தோழர் மீ.தா.பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வுக்கு பள்ளியின் வரலாற்று ஆசிரியர் திருமதி. ஸ்டெல்லா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் விஜயலட்சுமி, தனலட்சுமி, முத்தரசி, கவிதா பானு மற்றும் வினோத் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பாவலரேறு தமிழ்க்களத்தில் நடைபெற்ற தாய்மொழி நாள் விழாவுக்கு, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் நெறியாளர் திரு.கி.குணத்தொகை தலைமையேற்க, மாணவர்களம் திரு.மா.பிறை நுதல் வரவேற்புரையாற்றினார். சிறப் பழைப்பாளர்களாக, காயிதேமில்லத் கல்லூரி முதல்வர் முனைவர் முகமது செரிப் அவர் களும் தமிழ்த்துறைப் பேராசிரியர் இன்குலாப் அவர் களும், தலைமையாசிரியர் இறை.பொற்கொடி அவர் களும், தலைமையாசிரியர் தமிழ்க்கண்மணி அவர்களும் கலந்து கொண்டனர்.  திருவாரூரில், மாணவர் கள் தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கல்வி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர் பாவலர் த.ரெ.தமிழ்மணி அவர்களும் பாவலர் இரா.கார்த்திக் அவர்களும் கருத்துரையாற்றினர்.

Pin It