நேருவின் பார்ப்பனப் புத்திக்கு இரையானவர்கள் பிற்படுத்தப்பட்டோர்!
விகிதாசார வகுப்புவாரிப் பங்கீடு, வீணான வகுப்பு உணர்ச்சியை நீக்கும்;
வெகுமக்கள் இந்திய ஆட்சியைப் பிடிக்க வழிகோலும்!

பட்டறிவும், கொண்ட கொள்கையில் முழு ஈடுபாடும் உள்ள தலைவர்களாக விளங்கினர் நம் முன்னோர்கள். அவர்கள் 1870 முதல் முன் வைத்த கோரிக்கைகள் மூன்று.

அவை யாவை?

1. வெகுமக்கள் பிறவி காரணமாக நாலாஞ்சாதி சூத்திரர் களாகவும், அய்ந்தாம் சாதி தீண்டப்படாதவர்களாகவும் இந்துமதச் சாத்திரங்களாலும் ஆகமங்களாலும் ஆக்கப் பட்டதை நீக்கவேண்டும் என்பது;

2. சாதி வழிப்பட்ட உடலுழைப்புத் தொழில்கள், அடிமை வேலைகள் செய்வதிலிருந்து-சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, அரசியல் விடுதலை பெறவேண்டும் என்பது;

3. மக்கள் தொகையில் சரிபாதியாகவுள்ள பெண்டிர் சமத்துவ உரிமைகள் பெற வேண்டும் என்பது.

இக்கொள்கைகளை மிகத் துல்லியமாக வரித்துக்கொண்டவர்கள் மகாத்மா சோதிராவ் கோவிந்தராவ் புலே,பண்டித அயோத்திதாசர்,மேதை டாக்டர் டி.மாதவன்நாயர்,டாக்டர் சி.நடேச முதலியார், சர்.பி.தியாகராயச் செட்டியார், பெரியார் ஈ.வெ.இராமசாமி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் லோகியா ஆகிய பெருமக்கள் ஆவர்.

இப்பெருமக்களுள்,இந்தியாவிலிருந்த 9 பிரிட்டிஷ் மாகாணங்களுள் - சென்னை, மாகாணத்தில் மட்டுமே, திராவிடர் கட்சி என்கிற நீதிக்கட்சி, அரசுக் கல்வியிலும், அரசு வேலையிலும், 100 விழுக்காடு இடங்களையும் 1921 இல், 5 வகுப்புகளுக்குப் பங்கீடு செய்து ஆணை பிறப்பித்தது.
அப்போது ஈ.வெ.ரா. தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்திலிருந்தார். அங்கேயே, அக்கட்சி பதவிக்குப் போனால்-வேலையில் விகிதாசாரப் பங்கு வேண்டுமென்று கோரினார். 22.11.1925 வரையில் காங்கிரசுப் பார்ப்பனர்கள் முழுமூச்சாக அவரை எதிர்த்தனர்.எனவே அன்றே காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

1926இல், சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், நீதிக்கட்சி படுதோல்வி கண்டது. அத்தேர்தலில் கண்ட தோல்வியை வெற்றிப் படிக்கட்டாக மாற்றிட அவர் விரும்பினார். அதற்காகவே, நீதிக்கட்சியினரைக் கொண்டு, “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” என்பதை 26.12.1926இல் மதுரையில் தோற்றுவித்தார்.

1. அவருடைய பேராதரவினால், 1927இல், சென்னை மாகாணத்தில், ஆதித்திராவிடர் உள்ளிட்ட 5 வகுப்புகளுக்கும், அமைச்சர் எஸ்.முத்தய்யா முதலியாரால், வகுப்பு வாரி ஆணை முழுமையாக நடப்புக்கு வந்தது.அவர், 1934 முதல், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஆதித் திராவிடருக்கும் விகிதாசாரப் பங்கீடு கோரினார்.

2. அதற்கிடையில், 1935இல், நீதிக்கட்சி முதலமைச்சர் பொப்பிலி அரசருடன் இணைந்து, சர்.ஏ.இராமசாமி முதலியார் மூலம் இந்திய அரசுக்கு விண்ணப்பம் விடுத்து,சென்னை மாகாண எல்லைக்குள் இயங்குகிற எல்லா மத்திய அரசுத்துறை அலுவலக வேலைகளிலும்-பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு 44ரூ ஒதுக்கீடும்,ஆதித்திராவிடருக்கு 16ரூ ஒதுக்கீடும் பெற்றுத் தந்தார்.ஈ.வெ.ரா.அப்போது,வேறு எந்த மாகாணத்திலும் இப்படி மாகாண அரசு வேலைகளிலும்,மத்திய அரசு வேலைகளிலும் இரண்டு வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வரவில்லை.

பட்டறிவும், கொண்ட கொள்கையில் முழு ஈடுபாடும் உள்ள தலைவர்களாக விளங்கினர் நம் முன்னோர்கள். அவர்கள் 1870 முதல் முன் வைத்த கோரிக்கைகள் மூன்று.
அவை யாவை?

1. வெகுமக்கள் பிறவி காரணமாக நாலாஞ்சாதி சூத்திரர் களாகவும், அய்ந்தாம் சாதி தீண்டப்படாதவர்களாகவும் இந்துமதச் சாத்திரங்களாலும் ஆகமங்களாலும் ஆக்கப் பட்டதை நீக்கவேண்டும் என்பது;

2. சாதி வழிப்பட்ட உடலுழைப்புத் தொழில்கள், அடிமை வேலைகள் செய்வதிலிருந்து-சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, அரசியல் விடுதலை பெறவேண்டும் என்பது;

3. மக்கள் தொகையில் சரிபாதியாகவுள்ள பெண்டிர் சமத்துவ உரிமைகள் பெற வேண்டும் என்பது.

இக்கொள்கைகளை மிகத் துல்லியமாக வரித்துக்கொண்டவர்கள் மகாத்மா சோதிராவ் கோவிந்தராவ் புலே,பண்டித அயோத்திதாசர்,மேதை டாக்டர் டி.மாதவன்நாயர்,டாக்டர் சி.நடேச முதலியார்,சர்.பி.தியாகராயச் செட்டியார்,பெரியார் ஈ.வெ.இராமசாமி,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் லோகியா ஆகிய பெருமக்கள் ஆவர்.

இப்பெருமக்களுள்,இந்தியாவிலிருந்த 9 பிரிட்டிஷ் மாகாணங்களுள் - சென்னை, மாகாணத்தில் மட்டுமே, திராவிடர் கட்சி என்கிற நீதிக்கட்சி, அரசுக் கல்வியிலும், அரசு வேலையிலும், 100 விழுக்காடு இடங்களையும் 1921 இல், 5 வகுப்புகளுக்குப் பங்கீடு செய்து ஆணை பிறப்பித்தது.
அப்போது ஈ.வெ.ரா. தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்திலிருந்தார். அங்கேயே, அக்கட்சி பதவிக்குப் போனால்-வேலையில் விகிதாசாரப் பங்கு வேண்டுமென்று கோரினார். 22.11.1925 வரையில் காங்கிரசுப் பார்ப்பனர்கள் முழுமூச்சாக அவரை எதிர்த்தனர்.எனவே அன்றே காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

1926இல், சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், நீதிக்கட்சி படுதோல்வி கண்டது. அத்தேர்தலில் கண்ட தோல்வியை வெற்றிப் படிக்கட்டாக மாற்றிட அவர் விரும்பினார். அதற்காகவே, நீதிக்கட்சியினரைக் கொண்டு, “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” என்பதை 26.12.1926இல் மதுரையில் தோற்றுவித்தார்.

1. அவருடைய பேராதரவினால், 1927இல், சென்னை மாகாணத்தில், ஆதித்திராவிடர் உள்ளிட்ட 5 வகுப்புகளுக்கும், அமைச்சர் எ.முத்தய்யா முதலியாரால், வகுப்பு வாரி ஆணை முழுமையாக நடப்புக்கு வந்தது.

அவர், 1934 முதல், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஆதித் திராவிடருக்கும் விகிதாசாரப் பங்கீடு கோரினார்.

2. அதற்கிடையில், 1935இல், நீதிக்கட்சி முதலமைச்சர் பொப்பிலி அரசருடன் இணைந்து, சர்.ஏ.இராமசாமி முதலியார் மூலம் இந்திய அரசுக்கு விண்ணப்பம் விடுத்து,சென்னை மாகாண எல்லைக்குள் இயங்குகிற எல்லா மத்திய அரசுத்துறை அலுவலக வேலைகளிலும்-பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு 44ரூ ஒதுக்கீடும், ஆதித்திராவிடருக்கு 16ரூ ஒதுக்கீடும் பெற்றுத் தந்தார். ஈ.வெ.ரா. அப்போது, வேறு எந்த மாகாணத்திலும் இப்படி மாகாண அரசு வேலைகளிலும்,மத்திய அரசு வேலைகளிலும் இரண்டு வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வரவில்லை.

1942இல் போர்க்கால அமைசசரவையில் அமைச்சராக அமர்ந்த டாக்டர் அம்பேத்கர், 11.8.1943 இல், மத்திய அரசுத்துறை வேலைகளில் மட்டும், இந்தியா முழுவதிலும் உள்ள தீண்டப்படாத வகுப்பினருக்கு 12.5ரூ கோரி, 8.33 விழுக்காடு ஒதுக்கீடு பெற்றுத் தந்தார். அதையே, 1946 இல், 12.5ரூ ஆக உயர்த்தி அவரே பெற்றார்.

இந்தச் சூழலில்தான், உத்தரப் பிரதேசத்திலிருந்த சில பிற்படுத்தப்பட்டோர், கான்பூரில், 1944 திசம்பர் இறுதியில்,“அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் லீக்”மாநாட்டை நடத்தினர். அம்மாநாட்டை ஈ.வெ.ரா. தொடங்கி வைத்தார். அவரை அம்மாநாட்டினர், “அனைத் திந்தியப் பிற்படுத்தப்பட்டடோர் லீக்” தலைவராகப் தேர்ந்தெடுத்தனர்.

அந்த அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் லீகுக்கு எதிராக, இணையாக, 1951இல், பிரதமர் நேரு,பஞ்சாபிராவ் தேஷ் முக் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஒரு போட்டி அமைப்பை, உருவாக்கினார். அவரை அமைச்சராகவும் ஆக்கினார்.

அதற்குப் பிறகும், ஆர்வத்தோடு இரண்டு பெருந் தலைவர்கள் உ.பி.யில் செயல்பட்டனர்.

சிவ் தயாள் சிங் சௌராசியா,வழக்குரைஞர் செடிலால் சாத்தி என்கிற இருவரே அவர்கள். அவர்கள் 1958இலும்,1968இலும் வடநாட்டுக்குத் தந்தை பெரியாரை அழைத்து மாபெரும் மாநாடுகளை நடத்தினர்.

அரசமைப்புச் சட்டப்படி,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாட்டை, விதி 340இன் கீழ்,அம்பேத்கர்,ஏற்பாடு செய்திருந்தார்.அவருடைய வற்புறுத்தலின் பேரில்தான்,முதலாவது பிற்படுத்தப்பட்டோர்குழு,29.1.1953இல்,காகாகலேல்கர் தலைமையில், நேருவினால் அமைக்கப்பட்டது. அக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் காகாகலேல் கரும்,அக்குழுவின் உறுப்பினரான மேற்கண்ட சிவ் தயாள்சிங் சௌராசியாவும் நேரில், 30.3.1955இல், நேருவிடம் அளித்தனர்.

உடனே, அந்த அறிக்கையைப் புரட்டிப் பார்த்த நேரு, திடுமென, கலேல்கரிடம் கேட்டார். “ஏழைகளாக உள்ள பார்ப்பனப் பிரிவுகளைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திருக்கிறீர்களா?” என்பதே, அக்கேள்வி.

“எனக்கு அளிக்கப்பட்ட அதிகார வரம்பின் கீழ் அதை நான் செய்ய முடியாது” என்று, கலேல்கர் விடை தந்தார். அவ்வளவுதான். கொதித்தெழுந்த நேரு, அந்த அறிக்கையைத் தூக்கித் தரைமீது வீசினார். அத்துடன் முகவுரையை மாற்றி எழுதவும் பணித்தார். அத்துடன் நின்றாரா, நேரு? இல்லை.

1961 மே மாதம் மத்திய அமைச்சரவையைக் கூட்டி, “இந்திய அளவில், மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியல் ஒன்றை உருவாக்குவது இல்லை என்றும்; பொருளாதார அடிப்படையிலேயே அவர்களுக்கு உதவப் பயன்படுத்துவது என்றும்” தீர்மானம் செய்தார்.

அத்துடன், 1961 ஆகஸ்டில், இந்தியாவிலுள்ள எல்லா மாகாண முதலமைச்சர்களுக்கும், மடல் மூலம் அந்த முடிவை அறிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் இடஒதுக்கிடு தர,யார் யார் பிற்படுத்தப்பட்ட உள்சாதிகள் என்கிற பட்டியல் வேண்டும்.

அப்படி ஒரு பட்டியலே,இல்லாத நிலையில் தான்,மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், முதலாவது வேலைத் திட்டமாக, “எல்லா வகுப்புகளுக்கும் விகிதாசார இடப்பங்கீடு பெற்றே தீர வேண்டும்” என்கிற முடிவை, 1978 சூன் திங்களில், சென்னையில் நடத்திய முதலாவது வகுப்புரிமை மாநாட்டில் முடிவெடுத்தோம்.

அந்த மாநாட்டுக்கு முன்னரே, 29.4.1978 முதல் 12.5.1978 வரையில், தில்லியிலும், உ.பி.யிலும் நாங்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

1. அன்றைய  (D.L.Mandal) என் பவருக்கு எங்கள் கோரிக்கையை 10.5.1978 அன்று புரிய வைத்தோம். சென்னை மாநாட்டைத் தொடங்கி வைத்திட அவரிடம் ஒப்புதல் பெற்றோம்.

2. 7.5.1978 இல், முசாபர் நகரில், உத்தரப்பிரதேசப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டை நான் தொடங்கி வைத்திட,மக்களவை உறுப்பினர் ராம் அவதேஷ் சிங் ஆவன செய்தார்.

அம்மநாட்டின் தலைவர், மேலே நான் குறிப்பிட்டுள்ள சௌராசியா ஆவார். (நேருவின், 1955 நடவடிக்கையைப் பற்றி, அவர் தாம் அன்று உண்மையாகக் கூறினார்). என் பேச்சை, உ.பி. பிற்படுத்தப்பட்டோர் குழுத் தலைவராகப் பணியாற்றிய செடிலால் சாத்தி மொழி பெயர்த்தார்.

3. இந்தியக்குடி அரசுத் தலைவர் என்.சஞ்சீவி ரெட்டி யிடம், வாழப்பாடி கூ.இராமமூர்த்தியுடன் சென்று, வே.ஆனைமுத்து, சீர்காழி மா.முத்துச்சாமி, தாதம் பட்டி எம்.இராஜூ ஆகியோர், அதிகாரம் வாய்ந்த முறையில் 8.5.1978இல் எங்கள் கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தோம்.

11.5.1978 இல் இந்திராகாந்தி அம்மையாரைக் கண்டு, பேசினோம்.

இதுவரை முதலாவது கட்டம்.

இரண்டாவது கட்டம்தான், மிகவும் இன்றியமை யாதது. பீகார் மாநிலம் ஆரா மாவட்டத்தைச் சார்ந்த ராம் அவதேஷ் சிங் முயற்சியால், 17.9.1978 முதல் 18.10.78 முடிய பீகார் மாநிலத்தின் 31 மாவட்டங் களிலும் நாங்கள் நால்வர் செய்த வகுப்புரிமைக் கோரிக்கைப் பரப்புரை, ஒரு பேரெழுச்சியை அம்மாநி லத்தில் உண்டாக்கிவிட்டது.அதனை எதிர்த்துப் பேசிட,1978 அக்டோபரில் பிரதமர் தேசாய் பீகாருக்கு வந்தார். ஓர் இடத்தில் கூட, மக்கள் அவரைப் பேச இடம் தர வில்லை.அதனால் ஆந்திரத்தோடு திரும்பிச் சென்ற அவர் 20.12.1978அன்று, “இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் குழு அமைக்கப்படும்” என்று அறிவித்தார். 1.1.1979 இல், பி.பி. மண்டல் (க்ஷ.ஞ. ஆயனேயட) தலை மையில், அக்குழு அமைக்கப்பட்து. 31.12.1980 இல், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் மண்டல் அறிக்கை தரப்பட்டது.

3743 உள் சாதிகளும் சமூகங்களும் கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியலை மண்டல்குழு உருவாக்குகிறது.

ஆயினும் 1981 ஏப்பிரல் 29 அன்று,மா.பெ.பொ.க.வும் அனைத்திந்தியப் பேரவையும் இணைந்து, புது தில்லியில், கான்ஸ்டிடியுஷன் கிளப்பில், நானும், அ.சித்தய்யன், ச.தமிழரசு ஆகியோரும் முதன் முதலாக நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, அக்கூட்டத்தின் தலைவர் அலகாபாத்தைச் சார்ந்த ஜெய்பால் சிங் கஷ்யாப்,அன்றாடம் மக்கள வையில், கேள்வி கேட்க, எல்லாம் நானே நேரில் இருந்து செய்தேன். மண்டல் அறிக்கை அப்போதும் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவில்லை.

“31.12.1981 க்குள் மண்டல் அறிக்கையை வெளி யிடாவிட்டால், 26.1.1982 குடி அரசு, நாளைத் துக்க நாளாக அனுசரிப்போம்”என்று பிரதமர் இந்திரா காந்திக்கும், உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங்குக்கும் அறிவித்தோம்.அப்படியே வீடுதோறும் 26.1.1982இல் கறுப்புக்கொடி ஏற்றினோம்.

இடையில்,உள்துறை அமைச்சரின் அழைப்பின் பேரில் 25.1.1982மாலை அவரைத் தில்லியில், நேரில் கண்ட நானும் ஜெய்ப்பால் சிங் கஷ்யாப் எம்.பி., மற்றும் இருவர் ஆகிய நால்வரும் தெளிவாக விளக்கிறோம்.

“விதி 16(4) இல் உள்ள எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லையோ அவர்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும்”என்பதில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அடக்கம்” என்பதை அவருக்குப் புரிய வைத்தோம்.

“நீங்கள் இந்திராகாந்தி அரசை நம்பாதீர்கள்! மக்களைத் திரட்டித் தெருவுக்கு வந்து போராடுங்கள்!” என்று கூறி அப்பெருமகனார். விடை தந்தார்.

இடையில், 1981 நவம்பரிலும், 1982 பிப்ரவரியிலும் முறையே பீகாரிலும், உ.பி.யிலும்-ராம் அவதேஷ் சிங், டாக்டர் தாவூஜி குப்தா உதவிகளுடன் நானும், சேலம் அ.சித்தய்யன், ஆகிய இருவரும் பரப்புரைக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினேம்.

1982 மார்ச்சு 3 அன்று, இரண்டாவது தடவையாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நானும்,தில்லி ச.தமிழரசுவும் நடத்தினோம்.இந்திரா காங்கிர சார் ஆர்வத்துடன் அக்கூட்டத்துக்கு வரவில்லை.

எனவே, 4.3.1982 பகல் 2 மணிக்கு உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் அவர்களைத் தனி மையில் நான் சந்தித்து, என் மனக்கொதிப்பைக் கொட்டினேன். அப்போதுதான், அவரும் உணர்ச்சி வயப்பட்டு,“கட்டாயம் அறிக்கையை வெளியிடுவேன் என உறுதி தந்தார்.அன்று மாலையிலேயே மக்கள் அவையில்,மண்டல் அறிக்கையை அரசு வெளியிட்டு,சாதி அடிப்படையில், இடஒதுக்கீடு தரும்” என்று அறிவித்தார்.

அதற்கும் இந்திராகாந்தி அன்றே ஆப்பு வைத்தார். எப்படி?

அன்று மாலையில், “மண்டல் அறிக்கையை அரசு வெளியிடும்; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தரும்”என்று அறிவித்தார்.இவ்வளவையும் தாண்டித் தான்,ஜெயில்சிங், 30.4.1982இல் அறிக்கையை வெளியிட்டார்.

இனி ஜெயில்சிங்,உள்துறை அமைச்சராக இருக்கக் கூடாது என, அதனாலேயே இந்திரா காந்தி நினைத்தார்.அவரை வெறும் முத்திரை குத்தும் வெட்டி வேலை செய்கிற குடி அரசுத் தலைவராக மாற்றினார்.

இது பற்றி,நான்,“உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா!”என்று தலையங்கம் எழுதினேன்.
இன்று இந்திராகாந்தி இல்லை;ஜெயில் சிங்கும் இல்லை. இந்திராகாந்தியின் மறைவை ஒட்டி வந்த இராஜீவ் காந்தி ஏதும் செய்யவில்லை

அவரை அடுத்து வந்த பிரதமர் வி.பி.சிங்,6.8.1990இல் 27ரூ ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தார்.

இராஜீவ் காந்தியின் மறைவை ஒட்டி வந்த பி.வி. நரசிம்மராவ், பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு வைத்து, 1991 செப்டம்பரில், வி.பி.சிங் வெளியிட்ட ஆணையில் ஒரு திருத்தம் சேர்த்தார்.

நேருவின் 1961 மே மாத முடிவை, நாம்தான், 1982 மே இல் மாற்றினோம். ஆனாலும் நேரு வித்திட்ட பொருளாதார வரம்பு அடிப்படையை, நரசிம்மராவ் அமல்படுத்தினார். மேல்சாதி ஆதிக்கம் படைத்த உச்சநீதிமன்றமும் 16.11.1992தீர்ப்பில் அதை அப்படியே ஏற்றுக் கொண்டது.

நாமும்,நம்மைப் போன்று உண்மையான அக்கறை கொண்ட மற்ற பல கட்சிகளும், அமைப்புகளும், சாதிச் சங்கங்களும்-1982க்குப் பிறகு, இன்றுவரையில் தத்தம் போக்கில், நல்ல முயற்சிகளைச் செய்கின்றனர்.ஆயினும் பிற்படுத்தப்பட்டேர் இன்று பெற்றுள்ள உண்மையான பங்கு எவ்வளவு?

இந்திய அரசின் உயர்வகுப்புப் பணிகளான-முதலாவது வகுப்புப் பதவிகளான-அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்., அய்.இ.,எஸ்., முதலான அதிகாரம் வாய்ந்த பதவிகளில், அரசு தந்த 1.11.2008 கணக்குப்படி, பிற்படுத்தப்பட்டோர் வெறும் 5.4ரூ இடங்களே பெற்றுள்ளனர்.

அதாவது-முதல் வகுப்பில் இடம்பிடித்துள்ள மொத்தம் 97,951 பேர்களில்-பிற்படுத்தப்பட்டோர் வெறும் 5,331 இடங்களே பெற்றுள்ளனர்.

1.  இவர்கள் இன்று 4300 உள்சாதிகளைக் கொண்ட பட்டியலில் சேர்ந்தவர்கள்; இந்திய மக்கள் தொகை யில் 57ரூ உள்ளவர்கள்;57ரூ உள்ளவர்களுக்கு 5.4ரூ இடங்கள் மட்டுமே கிடைத்தள்ளன. இது அவமானம் என்கிற அறிவும் உணர்ச்சியும் இந்து, இஸ்லாம், சீக்கியர், கிறித்துவ மதங்கைளச் சார்ந்த எல்லாப் பிற்படுத்தப்பட்டோருக்கும் வந்து தீரவேண் டும். அதாவது இன்றைய 121கோடி இந்தியர்களில் 69கோடி மக்களாக உள்ள-எல்லா மதங்களையும் சார்ந்த, பல மாநிலங்களைச் சார்ந்த, பல மொழிகளைப் பேசுகிற எல்லாப் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்ட வரவேண்டும்;அவர்கள் வீறு கொண்டு எழவேண்டும்.

இது யானைக்குக் கோவணம் கட்டுவது போன்ற-இமயமலையை அசைப்பது போன்ற மிகப் பெரிய முயற்சி என்பதில் அய்யம் இல்லை. இதுமட்டுமா?

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகள் 15(4), 16(4); 16(4ஹ), 4க்ஷ; 28(2), 338(10) முத லானவை முழுவதுமாகத் திருத்தப்பட வேண்டும்.

மக்களவையில் உள்ள 545உறுப்பினர்கள், மாநி லங்கள் அவையில் உள்ள 245 உறுப்பினர்கள்-ஆக 790 உறுப்பினர்களுள், மூன்றில் இரண்டு பங்கான 527 உறுப்பினர்கள் வாக்குப் போட்டு, அதன்படி, எல்லா விதிகளும் திருத்தப்பட வேண்டும்.

இது நம்மால் முடியுமா? முடியும்! முடிக்க வேண்டும்.

இடப்பங்கீடு என்பது-மதச்சார்பு இன்மை,தேசிய இன விடுதலை என்கிற நம் முடிவான குறிக்கோள் களைப் போன்று-வெகுமக்களால் ஏற்கப்பட இயலாத கொள்கை அன்று.நம் கொள்கைகள், அடியோடு அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கோருபவை.

ஆனால்-கல்வியில் இடப்பங்கீடு,வேலையில் இடப்பங்கீடு என்பவை எல்லோருக்கும் இப்போதே அனுபவிப்புக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளவை.

இருக்கிற பழைய அமைப்பை அடியோடு மாற்று வதற்கு வேண்டப்படும் புரிதல் முயற்சி, போராட்டம், ஈகம் என்பவற்றைப் போல் பாரிய பரிமாணம்-மிகப் பெரிய அளவு முயற்சிகள் வேண்டப்படாத தன்மை உள்ளவை, இவை.

இதுபற்றி, வடமாநிலங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், படித்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு 2013லும் போதிய புரிதல் இல்லை.

இதில் நாம் 35 ஆண்டுகளாகச் செய்த முயற்சிகள் கொஞ்சமும் போதவில்லை.

தென்னாட்டில் திராவிடக் கட்சிகள்-செக்குமாடுகள் போல்,தமிழ்நாட்டையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். தந்தை பெரியார் அவர்கள், “திராவிடர் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக மாறவேண்டும்” என்று 1971 இல் அறிவுறுத்தினார். வாக்குவேட்டைத் திராவிடக் கட்சிகள், அவருடைய அறிவுரையைச் சட்டை செய்ய வில்லை.

மா.பெ.பொ.க.வை அடுத்து, திராவிடர் கழகம் வடபுலத்தில் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்திய அரசமைப்பில் இடப்பங்கீட்டுக்காக மாற்றம் கொண்டு வருவதை-நாம்தாம்-தமிழ்நாட்டார் தாம்,வடநாட்டில் மாதக்கணக்கில் தங்கித் தொடர்ந்து போராட வேண்டும்; அப்படிப்போராடினால், கோரியபடி வெற்றிபெற வாய்ப்பு உண்டு! உண்டு!

இன்னும் ஒருதலைமுறைக் காலம்-30ஆண்டுக் காலம் பெரியாரின்,அம்பேத்கரின் கொள்கைப் பற்றா ளர்கள் சாதி, கட்சி பாராமல் ஒன்றுபட்டுப் போராடினால், ஒற்றை இந்திய ஆட்சியை உறுதியாக அசைத்துவிட முடியும்,.இது அசட்டு நம்பிக்கை அன்று;உணர்ச்சி வயப்பட்ட உளறல் அன்று; அசாம், மேற்குவங்கம், உ.பி., பீகார், அரியானா, இராசஸ்தான், ஜம்மு-காஷ்மீர் முதலான வடமாநிலங்களில் 1978முதல் 2013ஏப்பிரல் வரையில் பயணித்துத், தங்கிக் கலந் துரையாடி நான் பெற்றுள்ள ஒரு புரிதல். அவ்வளவே!

தமிழ்நாட்டுப் பெருமக்கள் எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு கோரும் போராட்டம்-எல்லாக் கல்வி, எல்லா வேலை வாய்ப்புகளிலும்,எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப் பங்கு கிடைத்தே தீரவேண்டும் என்கிற-அடிப்படையான மக்கள் நாயக உரிமைகளை வென்றெடுக்கிற ஓர் அரசியல் போராட்டமாகும்.

ஒன்றுபட்டுப் போராடுவோம்!
நமக்கு நமக்கு உரிய உரிமைகளை
இன்றே வென்றெடுப்போம்!!

Pin It