ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு இடம் பெற்ற அக்டோபர் புரட்சி பற்றி நமது மகாகவி பாரதி பின்வருமாறு எழுதுகிறார்.
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தா ÷ளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள் புடைத்தார் வானமரர்
பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண் புகைந்து மடிந்தனவாம்
வையகத்தீர் புதுமை காணீர்.”
இந்தக் கவிதை பாரதி அன்பர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. சோவியத் புரட்சி நடந்த உடனேயே அதனை வரவேற்றுப் பாடிய முதல் தமிழ்க் கவிஞன் என்ற பெருமை பாரதிக்கு உண்டு. (தமிழ்நாட்டில் இதனைக் கொச்சைப்படுத்தி பேசியவர்கள் உண்டு.)
இந்தப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அதன் அடியார்களாக விளங்கிய லெனின், ஸ்டாலின் வழி நின்று அது பற்றிய சில விஷயங் களை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது அவசிய மாகிறது. இவற்றை பெரும்பாலும் எல்லோரும் மறந்து விட்டனர்.
இந்தப் புரட்சி தோன்றி வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் என்ன என்பது முதல் கேள்வி.
இதனை முதலில் பாரதி வாயிலாகவே காண்போம்.
“உழுது விதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள் பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுண்டுண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு
தூக்குண்டே யிறப்ப துண்டு
முழுதுமொரு பேய் வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு.”
லெனின், ஸ்டாலின் ஆகியோரது மொழியில் கூறினால் இது புரட்சிக்கான அகச் சூழ்நிலை ஆகும். இவற்றை ஸ்டாலின் பின்வருமாறு வகைப் படுத்துகிறார் ஒன்று: ரஷ்யாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் ஆதரவு அக்டோபர் புரட்சிக்கு இருந்தது. இரண்டு: ஏழை விவசாயிகள் போர் வீரர்கள் ஆகியோர் அதனை ஆதரித்தனர். மூன்று : உறுதியான கொள்கையுள்ள போல்ஷ்விக் கட்சி அதற்குத் தலைமை தாங்கியது. இக்கட்சிக்கு உழைக்கும் மக்களிடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. நான்காவது புரட்சியை எதிர்த்த ரஷ்ய பூர்ஷ்வா வர்க்கம் பலமற்று இருந்தது. நிலப் பிரபுத்துவ வர்க்கம் சிதைந்து இருந்தது. ஐந்தாவது பல சிறு சிறு அரசுகளின் ஆதரவு அதற்கு இருந்தது அவற்றில் போல்ஷ்விக்குகள் சுதந்திரமாகச் செயல் பட்டனர்.
இவை ரஷ்யாவிற்கு உள்ளே இருந்த நிலை. இவற்றை பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து புரட்சியை நடத்திய பெருமை போல்ஷ்விக்குகளுக்கு உண்டு.
அதே ஸ்டாலின் இதற்கான புறக்காரணி களையும் வகைப்படுத்துகிறார். அக்டோபர் புரட்சி ஏற்பட்ட பொழுது ஐரோப்பிய அரங்கில் இரண்டு ஏகாதிபத்திய சக்திகள் போராடிக் கொண்டிருந்தன. ஒன்று ஆங்கிலேயர்களும் - பிரஞ்சுக்காரர்களும் இணைந்திருந்த அணி. மற்றொன்று ஜெர்மனி - ஆஸ்திரியா ஆகியன இணைந்திருந்த அணி. இவற்றின் தீவிரமான பேராட்டம் காரணமாக அக்டோபர் புரட்சி பற்றி சிந்திக்க இவற்றிற்கு நேரமே இல்லை. இதனை புரட்சியாளர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இவற்றின் விளைவாகத் தோன்றியது தான் பாட்டாளி வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகிய வற்றிற்கு இடையிலான கூட்டுறவு. இது பாட்டாளி வர்க்கத் தலைமையில் அமைந்தது. இது புரட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது. இது அக்டோபர் புரட்சிக்கான காரணங்கள்.
அக்டோபர் புரட்சியானது ஒரு நாட்டில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு. இருந்தாலும் அது பல நாடுகளுக்கு வேகத்தைக் கொடுத்தது. அது அரசியல் ரீதியான வேகத்தினையும், கருத்தியல் ரீதியான வேகத்தையும் அளித்தது. எனவே அதனை ஒரு நாட்டில் இடம் பெற்ற தேசீய நிகழ்வாகக் காணக் கூடாது. அதாவது அதற்கு ஒரு தேசீயத் தன்மையும் உண்டு; சர்வ தேசீயத் தன்மையும் உண்டு.
பழங்காலத்தில் புரட்சிகள் இடம் பெற்றது உண்டு. உதாரணமாக ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமையின் தலைமையில் ரோம சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட புரட்சி இதனை அடித்தளமாகக் கொண்டு ஹோவாட் பாஸ்ட் என்ற அமெரிக்க இடதுசாரி எழுத்தாளர் ஸ்பார்ட்டகஸ் என்ற நாவலை எழுதி யுள்ளார். இது புகழ்பெற்ற திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இதில் தான் அடிமை என்பவன் “பேசும் கருவி” (ளுயீநயமiபே கூடிடிட) என்ற வாசகம் இடம் பெற்றது. இப்புரட்சி தோல்வியில் முடிந்தது; பிரான்ஸ் தேசத்தில் உலகப் புகழ்பெற்ற பிரஞ்சுப் புரட்சி இடம் பெற்றது. இது வெற்றி பெற்றது. இதன் விளைவாக பிரபுத்துவ ஆட்சி ஒழிக்கப் பட்டு, பூர்ஷ்வாக்களின் ஆட்சி இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரிஸ் கம்யூன் எழுச்சி இடம் பெற்றது. இது தான் பாட்டாளி வர்க்க மானது முதலாளிகளுக்கு எதிராகப் போர் கோலம் பூண்டு ஆட்சியைப் பிடித்த நிகழ்ச்சி யாகும். ஆனால் வரலாற்றுச் சூழல் சாதகமாக இல்லாத காரணத்தால் இது கொடூரமாக அடக்கப் பட்டது. பிரான்சில் இரத்த ஆறு ஓடியது! இது போன்று இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் பல போராட்டங்கள் இடம் பெற்றன. ஆசிய நாடு களிலும் இடம் பெற்றன. இவற்றில் அடக்கப்பட்ட வர்க்கமானது சுரண்டல்காரர்களை அகற்றி
விட்டு அதன் ஆட்சியை நிறுவ முற்பட்டது. இது வரலாறு கண்ட உண்மை. இன்று வர்க்கங்களே கிடையாது என்று பேசுபவர்களது மண்டையில் இது ஏறாது.
அக்டோபர் புரட்சி அதற்கு முந்தி நடந்த புரட்சியிலிருந்து முன்னேறிய ஒன்று. இதன் நோக்கமே சுரண்டலை முற்றிலுமாக அகற்று வதாகும். எனவே இது முற்றிலும் புதிய வகைப் புரட்சி ஆகும். இது பற்றி ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.
“அக்டோபர் புரட்சியின் வெற்றி மனித குல வரலாற்றில் ஒரு அடிப்படை மாறுதலின் வெற்றியைக் குறிக்கிறது; முதலாளித்துவத்தின் விதியைத் தீர்மானிக்கிறது; உலகப் பாட்டாளி களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாறுதலைக் குறிக்கிறது போராட்ட முறைகளிலும், வடிவங் களிலும் ஒரு புரட்சிகர மாறுதலைக் குறிக்கிறது. சுரண்டப்பட்ட, வர்க்கங்களின் கருத்தியல் கலாச் சாரம் ஆகியவற்றில் மாறுதலைக் குறிக்கிறது” (ளவயடin : ஞசடிடெநஅள டிக டுநninளைஅ : 237).
அக்டோபர் புரட்சி ஏற்படுத்திய விளைவுகள் என்ன? ஒன்று உலக ஏகாதிபத்திய முகாமில் அது ஒரு விளைவை ஏற்படுத்தியது. உழைப்பாளிகள், அடக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள் ஆகியோர் கரங்களில் அரசு அதிகாரம் சென்றது. உற்பத்தி சாதனங்கள், பொதுச் சொத்தாக மாற்றம் பெற்றன. உலகில் முதன் முதலாகச் சோஷலிசச் சொத்து என்பது பூர்ஷ்வாக்களின் அதிகாரத்தை அடியோடு ஒழித்தது. இரண்டு இப்புரட்சியின் தாக்கத்தினால், உலகின் பல நாடுகளில் உழைப் பாளர் போராட்டங்கள் வேகம் பெற்றன. அக்காலத்திய தேச விடுதலைப் பேராட்டத்திற்கு இப் புரட்சி உந்து விசையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. மூன்று இதனை வெறும் பொருளாதார மாறுதல் என்றோ, அரசியல் மாறுதல் என்றோ கூற முடியாது. இது உழைக்கும் மக்களது சிந்தனையில் மாறுதலைக் கொண்டு வந்தது. இது மார்க்சியத்தின் வெற்றியை எடுத்துக் காட்டியது. மார்க்சியக் கருத்துக்கள் உலகம் முழுவதிலும் பரவுவதற்கு இது காரணமாக இருந்தது. பாராளுமன்ற ஜனநாயகம் என்பதை இது கேள்விக்குள்ளாக்கியது.
அக்டோபர் புரட்சி பல படைப்பாளிகளையும் கவர்ந்தது. ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னாட்ஷா போன்றவர்கள் புரட்சியைப் பாராட்டிப் பேசினர். உதாரணமாக, ஹெச்.ஜிவெல்ஸ், புரட்சி நடந்த ஒரு சில வாரங்களில் லெனினைப் பற்றி பின் வருமாறு எழுதினார் “கிரம்ளினில் ஒருவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்” இதே வெல்ஸ் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் பின்வருமாறு எழுதினார். “அந்தக் கனவு நனவாகிவிட்டது” ஜான் ரீட் “உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலை புரட்சி பற்றி எழுதினார். தமிழ்நாட்டில் பெரியார் இந்தப் புரட்சியை வரவேற்றார். அலக்ஸி டால்ஸ்டாயின் “எஃகு எவ்வாறு உறுதி யாக்கப்பட்டது?” என்ற நாவல் புரட்சியைப் பற்றியது ஆகும்.
இந்தப் புரட்சி செய்த காரியம் உலக ஏகாதி பத்திய முகாமில் ஒரு சிறு விளைவை ஏற்படுத்தியது ஆகும். ஆனால் இது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது மட்டும் உண்மை. இதனை பட்டுக்கோட்டையின் பாடல் ஒன்றுடன் முடிக்கலாம். அது நண்டு செய்த தொண்டு என்ற பாடல். ஒரு பண்ணையாரின் வயல் மேடான இடத்தில் இருக்கிறது. அவருக்கு ஏராளமான வயல்கள். நல்ல வசதியான இடத்தில் அவை உள்ளன. முதல் தண்ணீர் முழுவதும் அவற்றிற்குத் தான் செல்லும். அந்த வயல்களைச் சுற்றி சிறு விவசாயிகளின் வயல்கள் உள்ளன. பண்ணை வயலின் உயரமான வரப்பை மீறி மற்ற வயல்களுக்குத் தண்ணீர் செல்ல முடியாது! ஒரு நண்டு பண்ணையார் வயலின் வரப்பில் ஒரு சிறு துளையிட்டது. இத்துளை வழியாகத் தண்ணீர் தாழ்வான வயல்களுக்குப் பாயத் தொடங்கியது. சிறுதுளை பெரிதாகி மற்ற வயல்களுக்குப் பாய்ந்தது. இந்த நண்டு தான் உழைக்கும் வர்க்கம். இதன் தொண்டு ஒரு சமுதாய மாறுதலுக்கு வித்திட்டது எனலாம்.
இன்று அக்டோபர் புரட்சியை இடதுசாரி களே மறந்துவிட்டனர். அவர்கள் பல கருத்துக் குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர் வலுது சாரிகளைக் கேட்க வேண்டாம். அவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருக் கின்றனர்.