அறிவியல் கலைகளையெல்லாம் தமது சொந்த மொழியில் கற்கும் நாட்டவர்கள் மிக வேகமாக முன்னேறியிருப்பதை நாம் இன்று கண்கூடாக சப்பான், சீனா, ரசியா போன்ற நாடுகளின் மிகையான முன்னேற்றத்தினால் அறிய முடிகின்றது. இதற்குக் காரணம் தன் தாய்மொழி உணர்வுடன் அந்நாட்டவர்கள் 60-70 ஆண்டு களுக்கு முன்னரே அறிவியலையெல்லாம் தமது சொந்த மொழிகளில் புகுத்திவிட்டனர். அதனால் அந்நாட்டில் வாழ்ந்த எல்லோருக்கும் அறிவியல் கற்கும் வாய்ப்புக்கிட்டியது. ஏழை, பணக்காரன் முன்னேற்றமடைந்த நகரங்களில் வாழ்பவன், பின்தங்கிய கிராமத்தில் வாழ்பவன் என்ற வேறு பாடின்றி அறிவியல் கற்றனர். ஆகவே ஆர்வமும், ஆற்றலுமுடையவர்கள் எங்கிருந்தாலும் அவர் களுக்கு அறிவியல் கற்று முன்னேறும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் நாடு முன்னேறியதுடன் மொழியும் வளமடைந்து அறிவியலை எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்று வளர்ச்சியடைந்தது. இதன் பொருட்டு மொழித் தடையோ விளக்கக் குறைவோ இன்றி அறிவு பெருக வாய்ப்புண்டாக்கியதுடன் தொழில் துறைகளும் வேகமாக முன்னேறி நன்மை விளைந்தது.

தாய்மொழி குறித்த தமிழக வரலாறு:

இதற்கு மாறாக தமிழகத்தில் 1960-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டம் வரை தமிழால் முடியும் என்று வெற்றி பெற்று காட்டியவர்களிடமிருந்து தமிழ் அகன்று ஆங்கிலம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. வடமொழியைத் தமிழகத்தில் வழக் கிழக்கச் செய்த தமிழ், தன்னியல்பு மாறாது இன்னும் வாழும் மொழியாகவே உள்ளது. இந்த வளர்ச்சியைக் காணப்பெறாத வடமொழி சார் பினர் தமிழை வீழ்த்த ஆங்கிலத்தை கருவியாகப் பயன்படுத்தினர். தமிழுக்காக வாழ்வதாகச் சொன்ன இயக்கங்கள் பதவி சுகம் காணும் ஆர்வத்தால் “Hindi Never English Ever’என்ற புதிய முழக்கத்தை வைத்தனர்.

இதன் காரணமாக 1970-இல் கல்லூரிகளில் தமிழ் பயிற்சி மொழித் திட்டத்தை விரிவுபடுத்தும் ஆணையை எதிர்த்து மதுரையில் மாநாடு நடைபெற்றது. இவர்களுடன் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் திணிப்பு என்றனர். அச்சமயத்தில் இதைக் காரணம் காட்டியே தமிழகத்தில் ஆங்கிலம் சார்பாக ஒரு இயக்கம் உருவெடுத்தது.

மீண்டும் 1997-ஆம் ஆண்டு தமிழில் பொறி யியலை பயிற்றுவிக்கும் முயற்சியை மேற்கொண்டு மாணவர் சேர்க்கை பற்றி அரசு அறிவித்தது. ஆனால், அதன் பிறகு அனைத்திந்திய தொழில் நுட்பக்குழு ஒப்புதல் தரவில்லை என்று கூறி தமிழ் வழிப்பொறியியல் படிக்க முன்வந்து சேர்க்கைக்கு உள்ளாக வேண்டியவர்கள் எப்போதும் போலவே ஆங்கிலத்தில் படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு அடுத்த கட்டமாக 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கல்வி என்று அரசு சட்டம் இயற்றாது ஆணை பிறப்பித்தது.

இதற்கு மெட்ரிகுலேசன் பள்ளி நடத்துபவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நீதி மன்றத்தில் தடை வாங்கினர். இது போன்ற நிலை இன்று வரை நீடித்து தமிழ் வழிக்கல்வி ஓர் கானல் நீராகவே உள்ளது. ஆனால் தேர்தல் அறிக் கைகளில், பொது மேடைகளில் “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”என்றும் முழக்கமிடப்படுகின்றது. இது எந்த திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் நடைபெறுகின்றது. இதன் காரணமாக தமிழின் நிலை தாழ்ந்து போனது, இதற்கு திராவிட இயக்கங்களின் செயலற்ற தன் மையும், பங்காளிச் சண்டையும் தான் காரணம். கன்னடம் வழி பயின்ற மாணவர்களுக்குச் சில இடங்களை பொறியியல், மருத்துவக் கல்லூரி களில் கர்நாடக அரசு ஒதுக்கி உள்ளது போல தமிழகத்தில் ஒதுக்கீடு இல்லை. அமைதியாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அவர்கள் செயல்பட, நம்மவர்களோ ஆர்ப்பாட்டமாக முழக்கமிட்டு தொண்டை வறண்டு போயினர். பாதிக்கப்படு பவர்கள் தமிழ் வழி பயின்ற ஏழை, எளிய கிராமப் புற மாணவர்கள், இதனைப் பற்றிய கவலை தமிழகத்தைக் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட இயக்கங்களுக்கும் இல்லை.

Dr samuael 400டாக்டர் ஃபிஷ்கிறீன்:

ஆனால் 170 ஆண்டுகளுக்கு முன்பு இக்கேள்வி களுக்கு பதில் சொல்லும் விதமாக எளிய முறையில் மருத்துவ கருத்துக்களைச் சொல்லுந்திறன் தமிழுக் குண்டு என்பதை யாழ்ப்பாணத்தில் தாய்மொழி தமிழ் மூலம் மருத்துவக் கல்வி புகட்டுவதே சிறந்தது என்று துணிந்து செயலாற்றியவர் ஒரு தமிழரல்ல! ஓர் அமெரிக்க சிலோன் மிஷன் மருத்துவப் பாதிரியாரான டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன் ஆவார். மேலும் இவரே ஆங்கில மருத்துவக் கல்வியைத் தமிழ் மூலம் புகட்டி தகுதி வாய்ந்த “33” மருத்துவர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதில் ஒரு சிறப்பு என்ன வெனில் அவர் காலம் அறிவியல் கலைகளை யெல்லாம் தமிழில் சொல்லவும் கூடுவதில்லை என்று எண்ணிய 170 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.

டாக்டர் பிஷ்கிறீனினால் தமிழ் வழி மருத்துவம் போதிக்க வட்டுக்கோட்டைக்கு வந்த பின் எட்டு மாதங்களுக்குள் தமிழை இலகுவாகப் பேசக் கற்றுக்கொண்டார். பிறகு தமிழில் மேனாட்டு மருத்துவ அறிவைப் பரப்பும் முயற்சியில் 1880-ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டு அடியெடுத்து வைத்தார். அப்பொழுது தமது மனதைத் திறந்து “நான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது தமிழில் மேனாட்டு வைத்தியம் பரவ ஓர் அஸ்திவாரமாகவும் ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகிறேன்”என்று ஓர் வியக்கத்தக்க தொலைநோக்குடன் தெளிவு படுத்துகிறார்.

இக்காலகட்டத்தில் டாக்டர் கிறீன் இலங்கை மானியப்பாயில் ஆங்கில மொழியின் வாயிலாக ஐரோப்பிய மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் கற்பித்தார் என்றாலும் 1852-ஆம் ஆண்டு இரண்டாம் தொகுதி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வகுப்புகளைத் தொடங்கிய போது தமிழில் கற்பிக்க வேண்டும் என விரும்பி, இதற்கு நிதியுதவி கோரி இலங்கை தேசாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். இதற்கு தேசாதிபதி “அமெரிக்க மிஷன் நடைமுறையில் மேற்கொண் டிருக்கும் ஆங்கிலம் தவிர்க்கும் கொள்கை பேரா பத்தானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்”என்று கூறி தமிழில் நூல் வெளியிடுவதற்கு எவ்வித உதவியும் அளிப்பதற்கு மறுத்து விட்டார்.

இருப்பினும் டாக்டர் கிறீன் மனம் தளராது நூல்களை வெளியிட்டார். இக்காலகட்டம் ஆங்கிலம் அரசு மொழியாக இருந்த காலம், ஆங்கிலம் படித்தால் அரசு வேலை என்ற நிலை, அறிவியலை படிக்கக்கூடாது என்று சொல்லாத கட்டுப் பாட்டுடன் இந்துக்கள் வாழ்ந்த காலம் மேலும் அறிவியல் கிறித்துவத்துடனும் கிறித்துவ மிஷனரி களுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்று இப்பழமைவாதிகள் எண்ணிய காலத்தில் தான் டாக்டர் கிறீனின் வழியாக தமிழர்களுக்கு மேலை நாட்டு மருத்துவம் தமிழில் போதிக்கப்பட்டது.

மாணவர்கள் தமிழில் படிக்க தயக்கம்

ஆனாலும் இன்றைய நிலையைப் போலவே டாக்டர் கிறீன் மேலை மருத்துவத்தை தமிழில் படிக்க மாணவர்களை வேண்டிய போது இக்கல்வி பயின்றால் பயனுண்டா என நிலை தடுமாறினர். இது பற்றி டாக்டர் கிறீன் “எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறித் தமிழில் கற்பது பற்றிச் சலனமடைந்துள்ளனர். அரசு சேவையில் ஈடுபட்டு சம்பளம் பெறும் வாய்ப்பு குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள் அது உண்மை. ஆனால் வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலை பெறச் செய்தலே என் எதிர்கால நோக்கமாகும். எனவே பத்து நாட்கள் ஓய்வு கொடுத்து வைத்தியக் கல்வியை தொடங்குவார்களா அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்”என மனஉறுதியுடன் கூறி, தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்தினார்.

கல்வியை சொந்த நாட்டு உடையுடன் தொடர்க

இத்துடன் நில்லாது இம்மாணவர்கள் தங்கள் படிப்பை அவர்கள் கலாச்சார உடைகளான வேட்டி, சால்வை, தலைப்பாகை ஆகியவை களுடனே படித்துள்ளனர். இதற்குக் காரணம் டாக்டர் கிறீனின் எண்ணமே ஆகும். “வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டை யாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனமாகவும், குடிசை வீடாகவும் மாறுகின்றன. எனவே நான் எண்ணு கின்றேன். ஐரோப்பியர் நடையுடை பாவனை களைப் பின்பற்றும் இந்துக்களைவிட கிறித்துவ இந்துக்களை காண ஆசைப்படுகிறேன். கிறித்த வராதல் என்பது தேசியத்தை இழப்பதல்ல”என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

தமிழ் வழி மருத்துவம் என்ற கொள்கையின் தீவிர பற்றுக் காரணமாக டாக்டர் கிறீன் 1866-ஆம் ஆண்டு ஒரு செய்தியைப் பெருமையுடன் கூற முடிந்தது. தமிழிலே மேலை நாட்டு மருத்துவக் கல்வியைக் கற்பித்தல் மாத்திரமல்ல எல்லாம் தமிழ் மயமாக நடத்துதலுஞ் சாலும் என்று தமிழின் திறமையை எடுத்துக்காட்டிய மாபெரும் வெற்றிச் செய்தி அது “இப்பொழுது எல்லாம் விசயங்களும் தமிழிலே நடைபெறுகின்றன. மருந்துகளின் பெயர், நேர்களின் பெயர், கிடாப்புகள், கணக்கு விவரங்கள், மருந்துக் குறிப்புகள் எல்லாம் தமிழிலேயே எழுதப்படுகின்றன என்று கூறுகிறார்.

டாக்டர் கிறீன் மருத்துவ நூல்கள்

மருத்துவம் தமிழில் கற்பிக்க மருத்துவ நூல்கள் எழுத முன்னேற்பாடாக 1858-ஆண்டில் நியூ யார்க்கில் இருக்கும்போதே கிறீன் மருத்துவ நூல் களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக தெரிவு செய்து பதிப்பு உரிமையை உரிமையாளரிடம் பெற்றுக் கொண்டார். இதன்படி டாக்டர்

கிறீன் தானே மொழிபெயர்த்து நான்கு நூல்களை எழுதினார். இதைத் தொடர்ந்து இவர் மாண வர்கள் நூல்களை எழுதிய பின்னர் அனைத்து நூல்களும் இவரால் பார்வையிடப்பட்டு திருத்தப் பட்டதாக நூலின் முகப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது இவர் பெருந்தன்மையைக் காட்டு கிறது.

தமிழர்களும் நூல்கள் எழுதினார்கள்

பெரும்பான்மையான நூல்கள் இவரிடம் மருத்துவம் கற்றுத் தேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் களான டன்வதரால் ஒரு நூலும், த.வி.சப்மன் என்ற வைத்திலிங்கத்தால் மூன்று நூல்களும், வில்லியம் என்ற அப்பா பிள்ளை மற்றும் ச.வை.நாதனியேல் என்ற சாமிநாதனால் இரண்டு நூல்களும் எழுதப் பட்டுள்ளன. இவைகளில் பல நூல்கள் த.வி. சப்மனால் பாஷாந்தரம் செய்ததாகவும், ச.சுவாமி நாதனால் பரிபாஷை செய்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. டாக்டர் கிறீன் மொத்தமாக யாழ்ப் பாணத் தமிழர் துணையுடன் மருத்துவம் குறித்து சுமார் 5000 பக்கங்கள் எழுதியுள்ளார்.

அதில் அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம் என்ற உடல் கூறு நூலிலிருந்து கெமிஸ்தம் என்ற வேதியியல் நூல்வரை பதினொறு நூல்கள் அடங்கும். படிக்கும் மாணவர்களுக்கு கலைச் சொற்களில் அய்யம் ஏற்படும்போது அதை சரி செய்து கொள்ள அருஞ்சொற்களுக்கான அகராதியை தன் மாணவர்களான நாதனியேல், சப்மன் ஆகிய தமிழர்களின் உதவியுடன் தொகுத்து பதிப்பித் துள்ளார். கலைச் சொல் உருவாக்கத்தில் கிறீன் மொழித்தேர்வு முறையைக் கடைப்பிடித்துள்ளார்.

மொழித் தேர்வின் முதல் நிலையில் தமிழும் அடுத்த நிலையில் வடமொழியும் இறுதியில் ஆங்கிலமும் இடம் பெற்றுள்ளன. இதற்கான பல விதிகளையும் வகுத்துள்ளார். தமிழுக்கான இலக்கண நெகிழ்வும் கிறீன் காலத்திலேயே தொடங்கிவிட்டது. “தென்று தோன்றிய எவையும் நன்றாக! இன்று தோன்றிய எவையும் தீதாகா”எனும் வரிகளுக்கிணங்க டாக்டர் கிறீன் மூல ஆசிரியரை வெல்சு பண்டிதர் எனவும் Chemistry என்பதை கெமிஸ்தம் எனவும் எழுதி Samuvel என்ற பெயரை சமுல் எனவும் Danial என்ற பெயரை தனெல் எனவும் ஒலிபெயர்த்தார்.

கிறீன் உதவியை அரசு நாடியது

டாக்டர் கிறீன் பணிபுரிந்த காலத்தில் காலரா பெரும் பலி வாங்கியது. அதற்காக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு தடுப்பு முறை மருத்துவத்தை கிறீன் இலங்கையில் அறிமுகப் படுத்தினார். இதனைத் தொடர்ந்து அரசு அதன் நன்மைகளைப் புரிந்துகொண்டு துண்டு வெளியீடு களை தமிழிலேயே எழுதுவதற்கும் வெளியிடு வதற்கும் கிறீனின் உதவியை நாடியது. இது மட்டு மன்றி கிறீன் எழுதிய நூல்களை 1870-இல் கிழக்கு மாகாண அரசு அதிபராகவிருந்த திருமொறிஸ் அரசுத் தரப்பில் வாங்கி மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.

டாக்டர் கிறீனின் சிறப்பு

ஒட்டுமொத்தமாக டாக்டர் கிறீனைப் பார்க்கும் போது மருத்துவம், வேதியல், தாவரவியல் நூல் களை பெருமையோடு வெளியிட்டவர் எனவும், இவரே தமிழில் முதல் கலைச்சொல் கோட் பாட்டாராளர் என்று கூறுவதும் பொருத்தமுடை யதாகும் என்பதோடு தமிழ் கலாச்சாரத்தை சற்றேனும் குறைக்காது தமிழர்களிடையே நிலவிய அறிவியல் சார்ந்த சில நடைமுறை மருத்துவங் களையும் இணைத்து, மேலை மருத்துவத்தை தமிழில் எழுதியதோடு நில்லாமல் மாணவர்களை முதல்முதலில் தமிழ் வழி மேலை மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கிய பெருமை இந்த அமெரிக்க மருத்துவப் பாதிரியையே சாரும்.

கிறீனின் இறுதி ஆவல்

இவர் தமிழ்மீது வைத்திருந்த மோகத்தை அறிய இவருடைய கல்வெட்டு சான்றாக அமை கிறது. கிறீன் தான் வாழ்ந்த காலத்தில் அவர் நாட் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தமிழருக்கான மருத்துவ ஊழியர் (“(“Medical Evangelist to the Tamils”) எனப் பொறிக்க வேண்டும் என்பதே ஆகும். 1884-இல் டாக்டர் கிறீன் இறந்த போது அவரது வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. அமெரிக் காவில் உள்ள வூஸ்டன் கிராம அடக்கசாலையில் அந்த நினைவுக் கல்வெட்டு டாக்டர் கிறீனை நினைவுபடுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கிறது.

Pin It