balasubramaniam 400பன்முகத் தன்மை வாய்ந்தவர் எச்.பாலசுப்ர மணியன் அவர்கள். பல தமிழ் நாவல்களை தமிழில் இருந்து இந்திக்கு மொழிபெயர்த்தவர். இந்தி மொழியில் மிகுந்த புலமை கொண்டவர் என்பதை அவர் மொழி பெயர்த்துள்ள பல முக்கியமான நூல்கள் சொல்லும். இந்நூலில் இந்திய மொழி பற்றிய சிந்தனைகளைக் கொண்ட ஒன்பது கட்டுரைகள் உள்ளன, இந்திய மொழி களை இணைப்பது பிராகிருத மொழி என்று ஒரு கட்டுரை பேசுகிறது. சாதாரண மக்களின் பயன்பாட்டில் பிராகிருத சொற்கள் நன்கு வழங்கி பயன்பாட்டிற்கு உள்ளாகி யிருப்பது பற்றி விசேசமான கட்டுரையும் உள்ளது. சமஸ்கிருத உச்சரிப்பிற்கு தனிப்பயிற்சி தேவை. இந்திய மொழிகளின் அனைத்துக்கும் மூலம் ஒன்றே. இன வழி பிரிந்தாலும் மொழி வழி ஒன்றாகவே இருப்பதான ஆதாரங்களைச் சொல்கிறார்.

பின்நவீனத்துவம் சார்ந்த பல முக்கிய விசயங்களைப் பற்றிய அலசல் இதில் உள்ளது. பின் நவீனத்துவம் விளிம்பு நிலை மக்களைப் பற்றி அதிகம் பேசுகிறது. தொல்காப்பியத்தில் நாம் காண்பது போலவும், இன்று மாற்றி இருக்கும் சமூகமும் அரசியல் பொருளிலும் பின்நவீனத்துவ அம்சங்களில் ஒன்று சேர்கின்றன என்ற கருத்தை அழுத்தமாக வைத் துள்ளார். அனுமன் சீதையிடம் பேசிய மொழி எது: தமிழ்தான் என்றொரு கட்டுரையும் உண்டு. அதற்கான ஆதாரங்களையும் தருகிறார். மொழியாளர்களின் சிந்தனைக்கும் விவாதத்திற்கும் பல விசயங்களை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிட வேண்டியதாகும். ஆங்கிலம் இங்கிலாந்தில் பழமை யான மொழி அல்ல. ஆனால் இங்கிலாந்து பிரெஞ்சு மொழியின் மோகத்தில் மயங்கியிருந்தது. அதிலிருந்து இங்கிலாந்து எப்படி தப்பித்தது என்ற ஒரு கட்டுரை அதன் கட்டுடைப்பு அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

மைதிலி மொழி 12, 13ஆம் நூற்றாண்டுகளில் உரை நடையில் அதிசயங்களைக் கொண்டுவந்தது பற்றிய ஒரு விரிவான கட்டுரையும் உள்ளது. 1965இல் சாகித்ய அகாதமி மைதிலியை சுதந்திர இந்திய மொழியாக அங்கீகாரம் தந்தபின் அதன் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சி களை எடுத்து வருவதைப் பற்றிச் சொல்கிறார். மொழி யாக்கம் என்னும் முயற்சி இன்னொரு படைப்பாக்கமே. மனித சமூக ஒற்றுமைக்கு மொழி என்பது அவசியம். அந்த ஒற்றுமைப் பாலத்தை மொழிமாற்றப் படைப்புகள் மூலம் கட்டமைக்க முடியும் என்பதை இத்தொகுப்புக் கட்டுரைகள் நிரூபணம் செய்கின்றன.

இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள்

ஆசிரியர்: எச். பாலசுப்ரமணியன்

வெளியீடு: என்சிபிஎச்

விலை: ரூபாய்: 50/-

Pin It