என் முறிந்த கை எதிர்பார்த்த வேகத்தில் இயல்பு நிலைக்கு வரவில்லை. தாமதம் தவிர்க்க முடியாததாகிறது. கால்டுவெல் நூல் வெளியீட்டின் இறுதிக் கட்டமான சரிபார்ப்புப் பணிகள் எஞ்சி நிற்கின்றன. இதற்கிடையில் எங்களுக்குத் துணை செய்வதேபோல் பொருட்படுத்தத்தக்க அளவில் தோழர்கள் (66 பேர்) முன்வெளியீட்டுத் திட்டக் காலக் கெடுவை நீட்டிக்கக் கோருகிறார்கள். எங்களுக்கும் இன்னுமான உறுப்பினர் எண்ணிக்கை வேண்டியிருக்கிறது. எனவே, காலக் கெடுவை வரும் ஜூலை முதல் வாரம் வரை நீட்டிக்கிறோம். ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையில் தொகை அனுப்பி எங்களை ஊக்குவித்துள்ள தோழர்கள் இத்தாமதத்தைப் பொருத்தருள வேண்டும்.
கால்டுவெல் பதிப்பில் நடந்தேறியுள்ள விடுபடல்கள் நாம் எதிர்பார்த்ததற்கு மேலாகவும் பொறுப்பற்ற முறையிலும் மலிந்துள்ளன. குறைந்தபட்சம் கால்டுவெல்லுக்குத் தொல்காப்பியம் அறிமுகமாகியிருக்கிறது, எடுத்தாண்டுள்ளார் என்னும் உண்மைகூட நறுவிசாக மறைக்கப்பட்டுவிட்டது.
கவிதாசரண் - ஜனவரி 2007
கால்டுவெல் ஒப்பிலக்கண நூல் வெளியீடு
- விவரங்கள்
- கவிதாசரண்
- பிரிவு: கவிதாசரண் - ஜனவரி 2007
More articles by கவிதாசரண்
- தொல்காப்பியம்: ஐந்திரத்தின் அத்துமீறல்கள் (30 மே 2010)
- மாவீரனுக்கு அஞ்சலி (28 மே 2010)
- பகுத்தறிவை மூடநம்பிக்கையாக்கும் புதிய பார்ப்பனர்கள் (28 மே 2010)
- எத்தனைமுறை சாவீர்கள்? (28 மே 2010)
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளியீட்டுக் கருத்தரங்கு விழா (28 மே 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.