முறுங்கையேறிய வேதாளம்

விக்கிரமாதித்தனின் விடைக்கிறங்கும்

நொதித்தக் கதைகளை கிளர்த்தி

செய்கை புரிதலற்றிருக்க வினவினேன்

அடங்கொள்ள கைக்கொண்ட தூண்டிலை

வான்நோக்கி வீசியபடி இருக்கக் கண்டு

சாமியிடம் சேர்ந்தவர்கள்

நட்சத்திரங்களாகி உதிர

சிக்கிடச் செய்கிறேன்

பாட்டியாயின் கதை கேட்பேன்

பசங்களாயின் விளையாடுவேனென்றான்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.