கூடலில்...
கூட்டல் கணக்காய்
இல்லற வாழ்க்கை

பின்னர்-
அவசர...அவசரமாய்
ஓடி... ஓடி
சொத்து பத்து எனப்
பெருக்கல் மட்டுமே
ஐம்பது வரையில்.

நாட்கள் நகர நகர
சொந்தங்களும் பந்தங்களும்
உள்ளத்தை
வகுத்து நாராய்க் கிழிக்க
எல்லாம் உதிரும்
மிச்ச வாழ்க்கையில்.

ஆற அமர...
வரவையும் செலவையும்
இனங்கண்டு எண்ணுவதற்குள்
காலச் சக்கரத்தின்
வேகம் குறைய
வெறும் கழித்தல் கணக்காய்
முடியும் வாழ்க்கை
முதியோர் இல்லத்தில்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.