குழப்பத்தை நறுக்கியெறிய

சொற்கள் வேண்டியிருக்கிறது

ஏற்படுத்திக்கொண்ட

சிறுவாய்க்காலைக் கூட

தாண்டமுடைதான்

யாரோவை

தாமாக்கவா

இத்தணை இத்தணை

அனுபவங்கள்

ஆண்டுகள்

சொல்லிவைத்தசொல்லை

உரக்கச்சொல்லவோ

அத்தனை மென்மைக் குரல்

வியர்வைகளென்பது

சொல்லிவைத்துவருவதல்லவே

மிச்சமாகிப்போன

கடைசி

சிக்கன் துண்டை ருசித்து

எறியவா

உமக்கு இவ்வளவு தொலைவு

வரவேண்டியிருந்தது

- பொன் இளவேனில்

****

மண் வாசம் வீசிய மாலையில்

மூன்றவது குறுக்கு வீதியின் முடிவில்

கூண்டுக் கிளிகள் விற்றுக்

கொண்டிருந்தவரிடம்

தயங்கித், தய ங்கி

சுதந்திர பறவைகளை கூண்டிலடைத்து

விற்க்கிற உங்களுக்கு

சொர்க்கத்தில் இடமில்லை என்பதை

நீங்கள் அறிவீர்களா என்று கேட்டேன்

கூண்டுகள் செய்பவர்களிடத்தில்

இக்கேள்வியை கேட்டால்

இன்னும் சரியாக இருக்கும் என்றது கிளி

மூனறாவது குறுக்கு வீதி முடிவிலியாக

நீ...ண்டது......

- வெங்கடேஷ் வினித்

Pin It