sanjay dutt

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ - அடேங் கப்பா...சொல்றப்போ பெருமையாவும், கேட்கிறப்போ புல்லரிச்சும் போகுது. ஆனா உண்மையில என்ன நடக்கு துன்னு பார்த்தா, அடச்சீ...ன்னு ஆகுது.

naliniபெண்களுக்கான சிறையில இருக்குற தன்னோட மனைவி நளினிகிட்ட பேசும்போது, பக்கத்துல போயி பேசக்கூடாது, தூரமா நின்னுதான் பேசனும்னு, முருகனுக்குத் தடை போடுது, வேலூர் சிறைத்துறை. அத எதித்து முருகன் உண்ணாவிரதப் போராட்டத்துல ஈடுபட்டிருக்காரு.

புனேயில எரவாடா சிறையில இருக்குற நடிகர் சஞ்சய்தத்துக்கு, வீட்டுல இருக்கிற பொண்ணாட்டியப் போயி பாக்குறதுக்குப் பரோல் குடுத்திருக்காங்க.  ஏன்னா, அந்தம் மாவுக்கு ஒடம்பு சரியில்லயாம். அதனால பாவம், வீட்டுக்குள்ள ஓய்வெடுக்க முடியாம, பொறந்தநாள் விழா, திரைப்பட விழான்னு சுத்தியிருக்கு அந்தம்மா. அத போட்டோவா எடுத்து பேப்பர்ல போட்டுட்டாங்க. அதனால, டிசம்பர் 6ஆந் தேதியே கெடச்சிருக்க வேண்டிய பரோல், 28ந் தேதிதான் சஞ்சய்தத்துக்குக் கெடச்சிருக்கு.

விசாரணையே முடியாத ஒரு வழக்குல, தூக்குத் தண்டனை வரைக்கும் கொடுத்ததுமில்லாம, பெத்த புள்ளயப் பாக்குறதுக்கும், கட்டுன பொண்டாட்டிகிட்ட பேசறதுக்கும் கூட பட்டினி கிடந்து போராட வேண்டியிருக்கு. ஆனா, இன்னொரு பக்கம் என்னடான்னா, ஏ.கே.56, வெடிகுண்டு எல்லாம் வச்சிருந்தது நிரூபணமாகி, சிறைக்குப் போனவருக்கு, உள்ள போயி ஆறே மாசத்துல, 3 தடவை பரோல் கொடுக்குறாங்க. அதுமட்டு மில்லாம, அடிப்படை வசதிகளே இல்லாம, சரியான மருத்துவ வசதிகளும் கெடைக்காம நிறைய கைதிகள் சிறையிலயே செத்துப் போறதா செய்திகள்ல சொல்றாங்க. ஆனா, அந்த நடிகருக்-கு பீரு, ரம்மு இன்னும் என்னென்னமோ கொடுக்குறாங் களாம்.

 வேலூர் சிறை, எரவாடா சிறை - எல்லாமே சிறைதான். ஆனா சட்டத்தோட பார்வையில சஞ்சய் ‘தத்’ வேற, முருகன் - நளினி வேற. என்ன பார்வைங்க... இது?! அதாங்க வர்ணாஸ்ரம பார்வை!

Pin It