இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள்  10 பேர்களில் ஜக்கி வாசுதேவ், அமிர்தானந்த மயி, பாபா ராம்தேவ், ரவிசங்கர், நித்யானந்தா உள்ளிட்டோர் வரிசையில் கல்கி சாமியாரும் இருக்கிறார்.kalki bhaghavan 600

1989ஆம் ஆண்டு "நான் விஷ்ணுவின் அவதாரம், என் பெயர் கல்கி பகவான்" என்று, சென்னை பூந்தமல்லி நேமம் கிராமத்தில் பட்டறையைப் போட்டார் எல்.ஐ.சி ஏஜண்டாக இருந்த விஜயகுமார்.

இன்று இவருக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய இந்தியாவில் பரவலாகவும், ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நூற்றுக்கணக்கிலும் கிளைகள் பரந்து இருக்கின்றன.

இந்தச் சாமியாரை நம்பி உள்ளூர் பக்தகோடிகளும், வெளிநாட்டுப் பக்த கோடிகளும் ஏராளமாகக் காணிக்கைகளை வாரி வழங்கி இருக்கிறார்கள்.

அவையெல்லாம் இந்தச் சாமியாரின் வருமானம்.

சுவிஸ் வங்கியில் இந்தியக் கார்பரேட்டுகள் போட்டிருந்த  பணத்திற்குரியவர்களின் பெயர்களை மத்திய அரசிடம் சுவிஸ் அரசு கொடுத்துள்ளது. அந்தப் பட்டியலில் நம்முடைய கல்கி சாமியாரும் மாட்டிக் கொண்டார்.  

அதன் விளைவாக அண்மையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கல்கிக்குச் சொந்தமான ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டதில் ரூ.24 கோடி இந்தியப் பணமும்,  ரூ.9.8 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முதல் நாள், வருமான வரிச் சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் மூலம் இந்தச் சாமியார் 200 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது.

இவரின் ஆசிரமத்தில் சேவை செய்த பக்தகோடிப் பெண்கள் கூட, காணாமல் போய்விட்ட செய்தியைப் பத்திரிகையில் பார்க்கிறோம்.

கல்கி சாமியாரின் மகன் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் போன்ற பலதொழில்களைச் செய்துவந்துள்ளார்.

இதன் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும்  இவர்களிடம் இருக்கின்றன.

‘‘என் பெயர் விஷ்ணு பகவான்’’ என்று சொன்ன இவருக்கு இவ்வளவு பெரும் சொத்து தேவைதானா?

உழைக்கும் மக்கள் கடவுளில் மயங்கி இந்தச் சாமியார்களிடம் கொடுக்கும் காணிக்கைகள் எவ்வளவு பெரிய சொத்தாகச் சேர்ந்திருக்கிறது! இதை ஏன் மக்கள் உணரவில்லை.

கல்கி சாமியார் ஒரு ‘சாம்பிள்’தான். இந்த ‘சாம்பிள்’ ஏனைய காவிச் சாமியார்கள் அனைவருக்கும் பொருந்தும்.

மக்கள் விழிக்காத வரை சாமியார்கள் விழித்திருப்பார்கள். மக்கள் விழித்தால் சாமியார்களின் ‘தூக்கம்’ நிச்சயம்.

Pin It