“ஏன்? எதற்கு? எப்படி?” என்று வினா எழுப்பிக்கொண்டே இரு. பகுத்தறிந்து பார். உண்மை அதில் உள்ளது என்றால் ஏற்றுக்கொள் என்றார் பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே.ரா. கேள்விகளில் இருந்து ஞானம் பிறக்கும் என்பதற்கும் மாறாகத் தென்னகத்தில் கேள்விகளால் நடத்திய வேள்வியில் ஓர் இயக்கமே உதயமானது.

கேள்விகள் இல்லாத மனித வாழ்வே இல்லை. கேட்கும் அறிவால்தான் நாம் ஐந்தறிவிடமிருந்து விலகி நிற்கிறோம். மனிதனின் மாண்புகளை உரையாடல்கள் மேம்படுத்தி அமைக்கின்றன. கேள்வியின்றி உரையாடல் தொடர்வதில்லை. 

நவீன உலகில் எதைப்பற்றியும் நமக்கு ஐயமும் வியப்பும் மேலோங்கியிருக்கிறது. அது குறித்துக் கேள்வி எழுப்பி தெளிவுபடுத்திக் கொள்ளுதல், நம்மைத் தேடலை நோக்கித் தள்ளிவிடுகிறது. சரி யாரிடம் கேள்வி கேட்பது?  சரியான பதில் யாரிடம் இருந்து கிடைக்கும் என நாம் சிந்திக்கும் வேளையில் இந்த இடத்தினைச் சரியாக நிரப்ப நமக்கு நல்லதோர் செயலி கிடைத்திருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் னிuஷீக்ஷீணீ என்று தட்டச்சு செய்தால் சிவப்பு நிறத்தில் ’னி’  என்ற எழுத்தின் வடிவத்தில் ஒரு செயலியினை நீங்கள் காணலாம். கேள்விகளும் பதில்களுமாக ஒழுகமைக்கப்பட்ட இந்தத் தளத்தினை  சூன் 2009 இல் நிறுவிய ஆடம் டி’ஏஞ்செலோ மற்றும் சார்லி சீவெர் பொதுமக்களுக்கு சூன் 21, 2010இல் அணுக்கம் வழங்கினர். இது ஆண்ட்ராய்டு செயலியாக வந்தது முதல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடிகட்டிப் பறக்கிறது.

அதனை அடுத்த நொடியே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

ஒரு மிகப்பெரிய ஆசான் நம் கைக்குள்ளே வந்துவிட்டர். உங்களுடைய சந்தேகம் எது குறித்து வேண்டுமானாலும் இருக்கலாம். அது பற்றி இந்தத் தளத்திற்குச் சென்று பதிவு செய்யுங்கள். இதற்கான விடை உங்களுக்கு அடுத்த கணப்பொழுதே கிடைத்துவிடும். அதுவும் உரிய வல்லுநரிடமிருந்து. சில நேரங்களில் ஒரே கேள்விக்குப் பல விடைகள், பல தரபபினரிடமிருந்து கிடைக்கக்கூடும்.

இணையத்தைத் தட்டினால் நமக்கு கோடான கோடி கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கின்றன என்பது உண்மைதான். அந்த அளவிற்கு மற்றொரு உண்மையும் அதில் பொதிந்து உள்ளது. நமக்கு கிடைக்கும் தரவுகளில் பாதிக்கு மேற்பட்டவை நமக்கானவையும் அல்ல, நம்பகமானவையும் அல்ல. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தச் செயலியை ஓர் உருட்டு உருட்டினால் போதும் எண்ணற்ற கேள்விக்குப் பல பதில்கள் பல தளங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதை நாம் பார்க்க இயலும். சரியான மற்றும் விளக்கமான பதில்களுக்கு வாக்களிக்கவும் முடியும். தவறான பதில்களுக்கு நாம் எதிர்வினையாற்றவும் முடியும்.

தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவராக நாம் இருப்போமானால் நம்மை Update  ஆக நம்மை வைத்துக்கொள்ள இது உதவும். நாம் சில துறைகளைத் தேர்வு செய்து கொண்டால் அது தொடர்பான வினாக்களை நாம் தொகுத்தும் பெற இயலும். நம் நடைமுறைகளில் உள்ள பல ஐயங்களுக்கு இதில் வினாக்களும் விடைகளும் இதில் சாத்தியப்படும்.  பல லட்சம் தலைப்பிலான கேள்விகளும் பதில்களுமாக இந்த அறிவுச் சுரங்கம் மிகுதியாகத் தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் அசத்துகிறது.

சட்டம், வேதியல், உயிரியல், தொழில் நுட்பம், இயற்பியல், உளவியல் என அனைத்துத் துறைகளில் இருந்தும் ஆதாரத்தோடும் உரிய நிழற்படத்தோடும் பதில்கள் களைகட்டுகிறன. உண்மையில் இதனைப் படிக்கப் படிக்க வியப்பாக உள்ளது. எந்தத் தனியார் நிறுவனமும் இதில் பங்கேற்கவில்லை என்பதால் பதிலில் இருட்டடிப்போ அல்லது சார்பான பார்வையோ இல்லை. இதில் பங்கேர்பாளர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பல்வேறுபட்டவர்கள் தங்கள் தாய் மொழியில் அறிந்தவற்றை அளவாக, அழகாக ஆங்கிலத்தில் இங்கே பரிமாறுகின்றனர். அது அறிவியல் பூர்வமாக மட்டுமல்லாமல் தங்களது அனுபவ மொழிகளும் உள்ளடக்கியுள்ளது பல நேரங்களில் நமது ஐயங்களைத் தெளிவு படுத்தி நல்ல முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

அறிவு சார்ந்த தளத்தில் மட்டுமே இது இயங்கவில்லை. பன்முகத்தன்மையோடு இந்தச் செயலி பயணிக்கிறது. நீங்கள் ஒரு இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். அதனைப்பற்றி அறிய வேண்டுமென்றால் அந்த வாகனத்தின் பெயரை மட்டும் உள்ளீடு செய்யுங்கள். அதுவே போதும். அந்த வாகனம் தொடர்பான எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு வல்லுநர்களின் பதிலும், பயனர்களின் பதிலும் அதிகமாக இருக்கும். இதில் மிகச்சிறந்த பதில்களும், பயனுள்ள பதில்களும் வாக்குகள் அதிகம் பெற்று நம்பகத்தன்மையினை உறுதி செய்து கொடுக்கும்.

மிகுதியான பொருத்தமான நிழற்படங்கள் நம்மை வசீகரிக்கின்றன. கைகளில் திறன் பேசியினை வைத்துக்கொண்டு பொழுது போகாமல் சிலர் கணினி விளையாட்டுகளைத் திரையில் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கவனம் இதில் மடைமாற்றும் அடையுமானால் உறுதியாக அவர்கள் தாங்கள் சார்ந்த துறையில் தம்மை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். இல்லை தாங்கள் மேம்பட்டவர்களாக இருப்பாராயின் அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் முடியும். சிறப்பான பதில்களை ஒருவர் தொடர்ந்து பதிகிறார் எனில் அவரைக் குறியிட்டு நீங்கள் அவரைத் தொடரவும் முடியும். அவர் பதில் அளிக்கும் போதெல்லாம் உங்களுக்கு அலாரம் ஒலி வழியே தகவல் வந்துவிடும்.

எந்த ஒரு கேள்விக்கான பதிலுக்கும் நீங்கள் நன்றி கூறவோ, அதனைக் குறிப்பெடுத்து முக்கியம் எனக்கருதிப் பாதுகாக்கவோ, அதனைச் சரிசெய்யப் பரிந்துரை அளிக்கவோ, புகார் அளிக்கவோ, எதிர்த்து வாக்களிக்கவோ முடியும் என்பதால் இதில் அப்பட்டமாக சனநாயகம் காப்பற்றப்படுகிறது. தான் தோன்றித்தனமாக ஒவ்வாத கருத்தை தெரிவிப்பதற்கான வழி தடுக்கப்படுகிறது.

பல பகுதிகளில் வேடிக்கையான கேள்விகளும் விநோதமான பதில்களும் கூட உள்ளன. ஆனால் எங்கும் அபத்தமான பதில்களைப் பார்க்க இயலவில்லை. அவ்வாறு இருப்பின் அதனை நீங்கள் புறக்கணிக்கவும் தடுக்கவும் கூட முடியும். காலை எழுந்தது முதல் வினாக்கள் இல்லாமல் விடிவும் இல்லை, நாம் விடை தெரியாமல் உறங்குவதும் இல்லை.

உங்களிடத்தில் யாரோ ஒருவர் ஒரு கேள்வியினை எழுப்புகிறார் எனக்கொள்வோம். அக்கேள்வி உங்கள் திறனக்கு மிஞ்சியதாக இருக்குமாயின் இனி கவலை இல்லை. இந்த Ôக்வாரா’ செயலியின் உதவியினை நாடுங்கள். உங்கள் நண்பருக்குத் தேவையான பதில் அதில் கிடைக்குமாயின் இதனை மின்னஞ்சல் வழியாகவோ, வாட்ஸ்ஆப் வழியாகவோ இல்லை இதற்கு இணையான எந்த ஊடகத்தின் வழியாகவோ இதனை எளிதாகப் பகிர முடியும்.

ஒருவர் சொல்லுவார் ‘கேள்வி முக்கியம்னு நெனைக்கறவன் சத்தமா கேட்பான். பதில்தான் முக்கியம்னு நெனைக்கறவன் மெதுவா கேட்பான்’ என்று இங்கே எல்லாமே முக்கியமாக கருதப்படுவதால் இரண்டுமே சத்தமாகவே உங்களுக்குப் பரிமாறப்படுகின்றன.

இணைப்பைச் சொடுக்கிச் செயலியைப் பெறுக - - https://play.google.com/store/apps/details?id=com.quora.android

Pin It