நான் டீக்கடை வைத்து டீ போட்டுக் கொண்டிருந்த ஏழைத் தாயின் மகன் என்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

அடுத்த நாளே 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ‘கோட்’டை மாட்டிக்கொண்டு விமானத்தில் பறந்துவிட்டார் வெளிநாட்டுக்கு.

தீவிரவாதத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கிளம்பிய அவர் 40க்கும் பேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை எதிரிகளின் தற்கொலைப் படைக்குப் பலிகொடுத்துவிட்டு வந்து நின்றார்.

ரஃபேல் ராணுவ விமான ஊழல் வழக்கில் சம்மந்தப் பட்ட முக்கிய ஆவணங்கள் திருடு போய்விட்டன என்று பரிதாபமாகச் சொன்னார்.

சென்ற தேர்தலின் போது கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் போடுகிறேன் என்றார்.

இந்தத் தேர்தலில் விண்ணில் பறக்கும் ஒரு செயற்கைக் கோளை ஏவுகணை விட்டு அழித்துவிட்டேன் என்று ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பிரதமர் நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய மக்கள்நலப் பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வெட்டியாகப் பேசிக் கொண்டிருப்பதையே ஒரு தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது இந்த நாட்டுக்கு அவமானம் இல்லையா?

தமிழ்நாட்டில் தூத்துக்குடிச் துப்பாக்கிச் சூடு தொடங்கி வேளாண் மாவட்டங்களான தஞ்சை விவசாயிகள் வரை மோடி செய்த துரோகங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் அவர்.

தமிழக அதிமுக அரசை தன் கைப்பாவையாக வைத்துக் கொண்டு ஆளுநர் பன்வாரிலால் மூலமாக மாநில உரிமைகளில் தலையிட்டு நிர்வாகச் சீர்கேட்டிற்குக் காரணமாக இருப்பவர் மோடி.

தமிழக அரசு நிலை குலைந்து, ஊழல் மலிந்த அரசாகத்தான் இருக்கிறது.

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கடந்த 5 ஆண்டுகள் காட்டாட்சி செய்து கொண்டிருந்த மத்திய மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியையும், கையாலாகாத  மோடியின் எடுபிடியாகச் செயல்படும் தமிழக எடப்பாடியின் தலைமையிலான அதிமுக ஆட்சியையும் அகற்றுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.

குறுந்தொழில், சிறுதொழில்கள் நசிந்தது மட்டுமில்லாமல் வடநாட்டுத் தமிழ் தெரியா மக்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் மத்திய அரசு வேலைகளில் அமர்த்தி, தமிழக இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகக் காரணமாக இருந்த மோடி ஆட்சியையும், அதற்கு துணையாயிருந்த அதிமுக ஆட்சியையும் விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஏப்ரல் 18 மறக்கவேண்டாம். மதச்சார்பற்ற திமு கழகக் கூட்டணிக்கு வாக்களித்து அமோக வெற்றிப் பெறச் செய்து, பாஜ கூட்டணியைப் படுதோல்வி அடையச் செய்வது மக்கள் கடமை.

Pin It