வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயரும் என்று படித்திருக்கிறோம். இன்று வரப்பும் உயரவில்லை, நெல்லும் உயரவில்லை காரணம் நீராதாரம் இல்லை.

stalin 300அதனால் நமக்கு நாமே என்ற முறையில் வறண்டு கிடக்கும் ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவைகளைத் தூர்வாரி நீர் ஆதரத்திற்கு வழிகோலும் விதமாக கழகத் தோழர்களுடன் களத்தில் இறங்கினார் தளபதி ஸ்டாலின்.

முதல்வர் எடப்பாடிக்கு என்ன வந்ததோ தெரியவில்லை நானும் தூர்வாரப்போகிறேன் என்று சொல்லிவிட்டு மேட்டூர் அணைக்குக் கிளம்பினார். கெட்ட புளுகு எட்டே நாளில் என்பதுபோல எட்டே நாளில் திரும்பிவிட்டார் எடப்பாடி. பணி முடங்கியது.

மேட்டூர் அணை என்பதை எளிதாகத் தள்ளிவிட முடியாது. விவசாயிகளின் விளைச்சலுக்கு முக்கிய நீர் ஆதாரம் மேட்டூர் அணை.

இப்பொழுது அணையின் நீர் அளவு 24 அடி மட்டுமே உள்ளது. அணையின் நிலப்பகுதி வெடித்துப் பாளம்பாளமாக கிடக்கிறது. தென்மேற்குப் பருவமழை நீரைத் தேக்கி வைக்கக்கூடிய அளவுக்கு தூர்வாரப்படவும் இல்லை.

அண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடி விவசாயத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும். கலைஞர் ஆட்சி காலத்தில் மிகச் சரியாக ஆண்டுதோறும் அதே தேதியில் நீர் திறந்துவிடப்பட்டது.

ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டு மட்டும் வீம்புக்காக ஜூன் 6ஆம் தேதி முன்கூட்டியே நீரைத் திறந்துவிட்டார். அதற்குப் பிறகு இன்று வரை முறையாக அந்தத் தேதியில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை.

அ.தி.மு.க அரசு அலட்சியம் காட்டும் இந்நிலையில், தளபதி ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் தூர்வாரப்படுகின்ற ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் நீராதாரம் வலுப்பெறப்போகின்றன.

இன்று நிரம்பப்போகும் குளங்களின் நீரில், நாளை தளபதியின் முகத்தைப் பார்க்கப் போகிறார்கள் மக்கள்.