கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பல தவறாக வாக்குகளைப் பதிவு செய்திருக்கின்றன என்னும் அதிர்ச்சித் தகவலை ஆங்கில நாளேடான, ‘தி எகனாமிக் டைம்ஸ்’ (28.06.14) முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மின்னணு இயந்திரங் களில் பழுது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று அவ்வப்போது சிலர் கூறிவந்த னர். எனினும் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத் தைக் கணக்கில் கொண்டு, அவ்வாறு இருக்க வாய்ப் பில்லை என்றே எண்ணி னோம். ஆனால் இப்போது வந்து கொண்டிருக்கின்ற செய்திகள் எதிர்பாராத அதிர்ச் சியில் நம்மைத் தள்ளுகின்றன.

அசாம் மாநிலத்தில், கடந்த ஏப்ரல் மாதம் வாக்குப் பதிவு நடைபெற்ற, ஜோர்ஹாத் என்னும் தொகுதியில், ஒரு இயந்திரத்தில் பதிவான அனைத்து வாக்குகளும் பாரதிய ஜனதாக் கட்சியின் சின்னமான தாமரைக்கு மாறியிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித் துள்ளனர். நேர் எதிர்மாறாக இன்னொரு தொகுதியில் எல்லா வாக்குகளும் காங்கிரசின் கைச்சின்னத் திற்குப் போயுள்ளன. இரண்டாவது நிகழ்வு புனே நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நடந்துள்ளது.

2004ஆம் ஆண்டு முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகின்றன. அன்றைக்குச் சரியாக இருந்த இயந்திரங்கள், காலப் போக்கில் பழுதாவதற்கு வாய்ப்பு உண்டு என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளே குறிப்பிட்டுள்ளனர். அதன் காரணமாக வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 9 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ‘எடைக்குப் போட்டு விட்டு’, புதிய இயந்திரங்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிகாரிகள் சொல்லுவதைப் பார்த்தால், பழுதாகிப் போன இயந்திரங்களைக் கொண்டுதான் 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் போலத் தெரிகிறது. அங்கே எல்லா வாக்குகளும் தாமரைக்கு விழுந்ததைப் போல, இங்கே எல்லா வாக்குகளும் மோசடியாக இரட்டை இலைக்கு விழாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.

சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்குக் காத்திருப்ப தாகவும், கிடைத்த உடன் ஒன்றரை லட்சம் இயந்திரங் கள் அழிக்கப்பட இருப்பதா கவும் அந்த ஆங்கில நாளேடு கூறுகின்றது.

இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது? நாடு முழுவதும் மறு தேர்தலைத் தானாக நடத்துமா அல்லது நீதிமன்றத்தை அணுகினால்தான் நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் கூட, இன்னமும் வாக்குச் சீட்டுகளே பயன்பாட்டில் உள்ளன. ஆதலால் இனிவரும் தேர்தல்களில் இந்தியாவிலும் கைகளால் முத்திரை இடப்படுகிற வாக்குச் சீட்டுகளை மீண்டும் பயன்படுத்துவதே நேர்மையான தேர்தல் முறையாக இருக்கும்.

Pin It