modi and jayalalitha

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே, தொடர் வண்டிக் கட்டண உயர்வை அறிவித்துவிட்டது. பயணியருக்கான கட்டணம் 14.2 சதவீதமும், சரக்குகளுக் கான கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார வண்டி களுக்கான பயணக் கட்டணமோ ஏறத்தாழ 2 மடங்காகி உள்ளது.

அனைத்துக் கட்சியினரின் எதிர்ப் புக்குப் பிறகு, 80 கி.மீட்டர் வரையிலான பயணத்திற்குக் கட்டண உயர்வு இல்லை என்று கூறியிருக்கிறது.

மோடி என்றால் வளர்ச்சி என்று தேர்தல் நேரத்தில் திரும்பத் திரும்பக் கூறினார்கள். முதல் வளர்ச்சி தொடர் வண்டிப் பயணக்கட்டணத்தில் நேர்ந் திருக்கிறது. அடுத்தடுத்த வளர்ச்சிகள் எந்த நேரமும் இந்தியாவைத் தாக்கக் கூடும்.

கட்டண உயர்வு பற்றி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சில விளக் கங்களைக் கூறியிருக்கிறார். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த கட்டண ஏற்றத்தைத் தான் நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம் என்கிறார். இதற்கு காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்திருக்கலாமே என்று தோன்று கிறது.

அடுத்ததாக, கசப்பு மருந்தை மக்கள் குடித்துத்தான் ஆக வேண்டும் என்கிறார். யாருடைய நோய்க்கு யார் மருந்து குடிப்பது? அரசின் நோய்க்கு மக்கள் மருந்து குடிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது.

எல்லாவற்றையும் விட, கட்டணத்தை உயர்த்த காங்கிரஸ் அரசுக்குத் துணி வில்லை, நாங்கள் துணிவோடு அதைச் செய்திருக்கிறோம் என்கிறார். அடேயப்பா ... கட்டணத்தை உயர்த்துவதற்குப் பெயர் துணிச்சல் என்று இப்போதுதான் முதல் முறையாகத் தெரிந்து கொள்கிறோம்.

அப்படிப்பார்த்தால். பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என்று பல்வேறு உயர்வுகளைத் தந்துள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் மிகப் பெரிய துணிச்சல்காரர்.

இத்தனை துணிச்சல்காரர்களை, நாடும் மக்களும் எப்படித்தான் தாங்கப் போகிறார்களோ?

Pin It