அனைவருக்கும் இனிய தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள், மகிழ்ச்சியுடன்.

தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டா, அல்லது சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டா?

தைப்புத்தாண்டு என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியாக வருகிறது. அதனால் கி.பி / தி.பி என்று சரியாக வரலாற்றைச் சொல்ல முடியும்.

சித்திரையைப் புத்தாண்டு என்று சொன்னால், அங்கே 60 ஆண்டுகள் மட்டுமே சுழற்சி முறையில் வந்து, வந்து செல்லும்.

இந்த முறையில் வரலாற்றைப் பேசக் கூட முடியாது. இது பார்ப்பனியத்தின் திசை திருப்பும் சூழ்ச்சி.

 அவர்கள் வேண்டுமானால் கோடிக்கணக்கான ஆண்டுகள் என்றும், புராணம் என்றும் கதைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

தமிழ்நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது தெரியும், அங்கே திராவிடச் சித்தாந்தமும், திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளும் எந்த அளவுக்குத் தமிழர்களுக்கு அரணாக அவை இருந்தன என்று.

இன்று இந்தியைத் திணித்துத் தமிழை அழிக்கப் பார்க்கிறது பார்ப்பனக் கூட்டம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் இவர்களுக்குப் பின்னர் இன்று தமிழ்நாட்டின் அரணாக இருந்து வருகிறார் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

பார்ப்பனர்களுக்குத் தமிழ், தமிழ்நாடு, திராவிடம் என்றால் பிடிக்காது.

இந்து ராஷ்ட்ரா என்ற மதவெறியை திராவிடம் ஏற்காது.

அதை நோக்கிச் செல்லும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி, சமூக அநீதி அமைப்புகளை எதிர்க்கத் தமிழர்கள் ஒன்றுபட்டு வரவேண்டும்.

 தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

வாருங்கள் தமிழர்களே!

பொங்கல் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வோம்!

Pin It