கடந்த இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு இரயில்வே புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாகச் சொல்லி, இப்போது வெறும் ரூ. 301 கோடியாகக் குறைத்து ஏமாற்றி இருக்கிறது மோடியின் ஒன்றிய அரசு.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் பெண்களின் உரிமையைப் பேணி ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/= வழங்கி வருகிறார், தமிழ்நாடு அரசு சார்பாக. இது அவருக்குப் பெருமை சேர்க்கிறது. ஆனால் ஒன்றிய அரேசோ,

1. இடைக்கால பட்ஜெட்டில் கரூர் - திண்டுக்கல் வழித்தடத்திற்கு ரூ. 150 கோடி என்று சொல்லி இப்போது வெறும் 1000 ரூபாயை ஒதுக்கியிருக்கிறது.

2. சென்னை - மகாபலிபுரம் - கடலூர் பாதைக்கு ரூ. 25 கோடி என்று சொல்லி இப்போது 1000 ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.

3. ஈரோடு - பழனி இரட்டைப் பாதை ; காட்பாடி - விழுப்புரம் இரட்டைப் பாதை ; திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை ; ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டைப் பாதை.....

இப்படித் தமிழ்நாட்டில் இரயில் பாதைகள் போடுவதற்குத் திட்டச் செலவாக வெறும் 1000 ரூபாய்களை ஒதுக்கி இருக்கும் ஒன்றிய அரசின் செயல் வெட்கக் கேடானது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். இது மோடிக்கும், நிர்மலா சீத்தாராமனுக்கும் சிறுமையைத் தான் தருகிறது.

" நெஞ்சில் உரமின்றி, நேர்மைத் திறனின்றி, வஞ்சனை செய்வாரடி " என்கிறார் பாரதியார்.

தேர்தல் மூலம் மக்களைச் சந்திக்காமல் நிதியமைச்சராக ஆகியிருக்கும் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டுக்கு முன்னர் கிண்டும் 'அல்வா' வுக்குக் கூட ஆயிரம் ரூபாய் போதாதே!

அல்வா இனிப்பாக இருக்கும். அளவுக்கு மீறிக் கொடுத்தால் ஆபத்தில் போய் முடியும்.

அப்போது 'பீகார்' ஆஸ்பத்திரி, 'ஆந்திரா' ஆஸ்பத்திரியால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

- கருஞ்சட்டைத் தமிழர்