kanimozhi karunanidhi 19101-08-2022 அன்று நாடாளுமன்ற மக்களவையில்...

பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்துள்ளன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும், அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

உணவு வாங்கக் கூட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு தொழிலதிபர் மட்டும் உலகளவில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும் கறுப்புப் பணம் புழங்கி வருகிறதே எப்படி?

வெங்காயம் தக்காளி விலை குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதை வைத்து 3 வேளையும் சட்னியா அரைத்துச் சாப்பிடம் முடியும் என்று மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து, விலைவாசி உயர்வு குறித்துக் கேள்வி எழுப்பி தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய அரசைச் சாடிப் பேசினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்....

உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. கொரோனா இடர்பாடுகளையும் கடந்து உலகின் பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. கொரோனா, ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்டச் சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை....

தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலை குறைக்கவில்லை? டீசல் விலை குறைக்கவில்லை... நான் சொல்வதைக் கேட்க வேண்டும், மக்கள் எல்லோரும் நல்லா இருக்காங்க... நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.

Pin It