இந்தியா ஒரு விந்தையான நாடு. இங்கே பசு மாடுகளுக்கு ஆம்புலன்சு இருக்கிறது. ஆனால் பச்சைக் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் இல்லை. 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பிணங்களுக்கு நடுவேதான் இந்த ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று, இந்திய விடுதலைக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.

உ.பி.மாநிலம், கோரக்பூர் மாவட்டம், பி.டி.பி. மருத்துவமனையில், ஆகஸ்ட் 7&11 தேதிகளில், கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துபோய் இருக்கிறார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கும் நிறுவனம் பல முறை நினைவூட்டல் கடிதங்களை அந்த மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறது. 63 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது என்றும், அதனை உடனே அனுப்பி வைக்காவிட்டால், சிலிண்டர் வழங்குவதை நிறுத்திவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளது. ஒவ்வொரு முறை கடிதம் அனுப்பும் போதும், அதன் நகலை, உ.பி.மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி உள்ளது.

இத்தனைக்குப் பிறகும், நிலுவைத் தொகையை அந்த நிறுவனத்திற்கு மருத்துவமனை அனுப்பவில்லை அதன் விளைவாகவே இத்தனை குழந்தைகள் இப்போது உயிர் இழந்துள்ளனர். இதுகுறித்துக் கவலை கொள்ளாத உ.பி.முதல்வர் யோகி ஆதித்யா நாத், பசுக்களைப் பாதுகாக்கும் கோ சாலைகளுக்கு 4000 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார்.

சரி, இந்தியாவில் மாடுகள் வாழட்டும், மனிதர்கள் சாகட்டும்!     

Pin It