துரோணர்கள்

ஏகலைவர்களின் கட்டை விரல்களுக்காய்

வெறிநாய்போல் திரிகின்றனர் - நீட் தேர்வு

 

கருவறையில் கசக்கப்படும்

பாஞ்சாலிகளுக்குக்

கண்ணன் கருணை காட்டுவதே இல்லை - ஆசிஃபா

 

சகுனியின் சொக்கட்டான்களாய்

சி.பி.ஐ.யும், உச்சநீதிமன்றமும் - மோடி

 

மருமகன்களோ

இரட்டைத் துரியோதனர்கள்.

அடிமை சாசனமே

அவர்களுக்குக் கீதோபதேசம் - ஓ.பி.எஸ்&இ.பி.எஸ்

 

போராளிகள்

சிசுபாலர்களாய்ச் சிரம் அறுக்கப் படுகின்றனர்.

காவிரிக்கோ

ஆண்டுதோறும்

அஞ்ஞாத வாசம்!

Pin It