juliousகட்டிடப் பொறியாளர் திரு ஜே.ஆர்.ஜுலியசுடன் ஒரு நேர்காணல் - இலக்கியா

1.சமீப காலங்களில் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் நமது மக்கள் மிகவும் குழம்பிப் போய்த் திரிவதைக் காண முடிகிறது. ஒரு கட்டடப் பொறியாளராக வாஸ்து பற்றி உங்கள் பார்வை என்ன?

பல ஆண்டுகளாக நல்லமுறையில் ஒரு வீட்டில் வாழ்ந்துவருவார்கள். ஏதாவது பிரச்சனை அல்லது நோய் ஏற்பட்டுவிட்டால், தன்னை வாஸ்து நிபுணர்களாகக் காட்டிகொள்ளும் சிலர் உடனே ஆலோசனை சொல்ல வந்துவிடு வார்கள். உங்கள் வீட்டில் இது சரியில்லை அது சரியில்லை, அதனால்தான் உங்களுக்கு இந்தப் பிரச்சனை.

எனவே இந்த இந்த மாற்றங்கள் செய்தால் சரியாகிவிடும் என்று ஆலோசனை வழங்குவார்கள். நமது மக்களும், இத்தனை காலம் இந்த வீட்டில் நன்றாகத்தானே வாழ்ந்தோம் என்று சிந்திப்பதில்லை.

உடனே வீட்டில் மாற்றங்கள் செய்து விடுகிறார்கள். பிரச்சனைகளில் தீர்வோ, நோய்களிருந்து விடுதலையோ கிடைக்காத வர்கள் வாஸ்துவைப் பற்றி ஏதும் கூறாமல், ஏதோ என் தலை விதி என்று சும்மா இருந்துவிடுகிறார்கள். சிலருக்கு பிரச்ச னைகளில் தீர்வோ, நோய்களிருந்து விடுதலையோ கிடைக்கிறது.

ஆனால், அதற்காக அவர்கள் வேறு பல முயற்சிகள் செய்திருப்பார்கள். அதையெல்லாம் கருத்தில் கொள்ளமாட்டார்கள். ஏதோ வாஸ்துவினால்தான் எல்லாம் சரியாகி விட்டதாக எண்ணிக்கொள்கிறார்கள்.

2.அப்படியானால் வாஸ்துவுக்காக லட்சக்கணக்கில் மக்கள் செலவிடு கிறார்களே, அதனால் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?

புதிய வீடு கட்டுபவர்களும், தனது வசதிக்காகவும், ஆரோக்கியமான சூழ்நிலை வீட்டில் திகழ்வதற்காகவும் வீட்டின் அமைப்புகளை ஏற்படுத்தாமல், வாஸ்து என்ற பெயரில் எப்படியோ வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

 ஒரு வீடு கட்டும்போது கவனிக்க வேண்டியவை, வீட்டிற்குள் நல்ல வெளிச்சம் (வெயில் அன்று), நல்ல காற்று, வீட்டில் உள்ளவர்கள் புழங்குவதற்கு வசதியான இடவசதி. ஆனால் வாஸ்து என்ற பெயரில் நாம் கட்டுகின்ற வீடுகளில் பெரும்பாலும் வெளிச்சமும் இருப்ப தில்லை, காற்றோட்டமும் இருப்பதில்லை.

தென் மேற்குப் பகுதியில் படுக்கையறை அமைத்தால் வளம் பெருகிவிடும், என்று சொல்லிப் படுக்கையறை அமைப்பார்கள். ஆனால், மேற்கு பகுதிதான் அதிகம் வெயில் படக்கூடிய பகுதி. அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் (க்ஷிமீக்ஷீணீஸீபீணீலீ போன்றவை) செய்யாவிடில், அந்த அறை எப்போதும் சூடு நிறைந்தே இருக்கும். அதைப்பற்றி யெல்லாம் வாஸ்து நிபுணர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கவலைப் படுவதில்லை.

ஒரு வீட்டைக் கட்டும்போது  என்று சொல்லப்படுகின்ற வீட்டின் அமைப்பு மிகவும் முக்கியம். அது, அந்த நிலத்தின் அமைப்பு, அந்த சுற்றுப்புற சூழ்நிலைகளைப் பொருத்தே அமையும்.

ஆனால் வாஸ்து நிபுணர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், எல்லா நிலத்திற்கும், அது எந்தத் திசையை நோக்கி அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து ஒரே மாதிரியான அமைப்பைத்தான் சொல்கின்றனர். ஆனால் தெனமேற்குப் பகுதியில் படுக்கையறை அமைக்கப்பட்டாலும் பக்கத்து வீடுகள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்குமானால், அது காற்றோட்டத்திற்கு வாய்ப்பிருக்காது என்பதைப் பெரும்பாலும் உணர்வதில்லை.

 3. வாஸ்து அறிவியல் பூர்வமானது என்று சொல்லப்படுகிறதே?

வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞானபூர்வமானது, என்ற கருத்து பரப்பப்படுகிறது. பருவக்காற்று களை எதிர்கொண்டுதான் வீடுகளை அமைப்பதாகப் பலர் சொல்வதுண்டு. ஆனால் பருவக் காற்றுகளினால் எல்லா பகுதியிலும் ஒரே மாதிரி பலன் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

மேலும் பூமி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சற்றே சாய்ந்திருக்கிறது என்பதாலே வடகிழக்கில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் பள்ளமான பகுதி அமைய வேண்டும் என்றும், தென் மேற்கில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் மேடான பகுதி அமைய வேண்டும் என்றும் கூறுவதுண்டு. ஆனால், பூமத்திய ரேகைக்கு வடக்குப்பகுதியில் ஒரு மாதிரியான சாய்மானமும், பூமத்தியரே கைக்குத் தெற்குப்பகுதியில் ஒரு மாதிரி யான சாய்மானமும் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான வாஸ்து என்பது உண்டா என்றால் இல்லை என்பதுதானே உண்மை.

3.வாஸ்துபடி வீட்டைக் கட்டிவிட்டால், எல்லா வளங்களும் பெருகிவிடும் என்றால், வீடே இல்லாமல் தெருவோரம் தூங்கிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வளம் பெறுவது எப்போது?

இன்றைக்குப் பெரும்பாலானோர் வாஸ்து பார்த்துதான் வீடு கட்டுகிறார்கள். அதனால் இன்றைக்குப் பிரச்சனை களே இல்லாத, நோய்களே இல்லாத உலகமாக மாறிக் கொண்டிருக்கிறதா என்றால், பிரச்சனைகளும் நோய்களும் பெருகிகொண்டிருப்பதுதானே உண்மை.

4. வீட்டைக் கட்டும்போது மட்டுமின்றி, கட்டிய பிறகும் பல்வேறு பொருள்களை வாஸ்து பரிகாரத்திற்காக என்று சொல்லி வாங்கி வைக்கிறார்களே, அது கூட எந்தப் பலனையும் தருவதில்லையா?

வாஸ்து மீன், வாஸ்து பொம்மை, கண்ணாடி, சிறிய மூங்கில் செடி என சில பொருள்களை வாஸ்து பரிகாரம் என்ற பெயரில் வாங்கி வைத்துவிட்டால் போதும் என்கிறார்கள். இந்தப் பொருட்கள் நம் வாழ்வை எப்படித் தீர்மானிக்கும் என்று சிந்திக்க வேண்டாமா? வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் நம் வாழ்வைத் தீர்மானிக்கும் என்பது எவ்வளவு முட்டாள் தனமானதோ, அவ்வளவு முட்டாள்தன மானவை இந்த வாஸ்து பரிகாரங்கள்

பெரும்பாலான மக்கள் மூடநம்பிக் கையில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றால் அவர்களை அறிவூட்டுவது கற்றவர்கள் மற்றும் வல்லுனர்களின் கடமையாக இருக்கவேண்டும்; அதை விடுத்து, மக்களின் அறியாமையைப் பயன் படுத்தி நாம் வளம் பெற்றுவிட லாம் என்பது நாம் வாழ்கின்ற சமூகத்திற்குச் செய்கின்ற அநீதியாகத்தான் அமையும்.

5. வாஸ்து சாஸ்திரம் மட்டுமில்லாமல், வேறு பல மூடநம்பிக்கைகளும் மக்களிடம் நிறைந்து கிடக்கின்றன. கல்வி அறிவில் சிறந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீங்கள். இந்த மாவட்டத்தில் நிலை எப்படி இருக்கிறது?-

இன்றைக்கு நம் சமுகத்தில் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் புரையோடிக் கிடப்பதைக் காண முடிகிறது. படிக்கா தவர்கள் மட்டுமல்ல மெத்தப் படித்தவர் கள் என்று சொல்லப்படுபவர்களிடத்திலும் மூடநம்பிக்கைகள் பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. படித்தவர்கள் அதிகம் பேர் உள்ள மாவட்டம் என்று சொல்லப்படுகின்ற குமரி மாவட்டத்திலேயும் மக்கள் பல்வேறு மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பதைக் காணலாம்.

மனிதர்களுக்குப் பல்வேறு விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை என்று பல்வேறு நம்பிக்கைகள், அவையெல்லாம் அவரவருடைய அனுபவம் சார்ந்தும் வளர்ந்த சூழல் சார்ந்தும் அமைகின்றன. அந்த நம்பிக்கைகள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இருக்கவே கூடாது என்ற நம்பிக்கை ஒன்று உண்டு. அதுதான் மூடநம்பிக்கை. என்னைப் பொருத்தவரையில் நமது அறிவுக்கு எட்டாத அனைத்துமே மூட நம்பிக்கைதான்.

மூட நம்பிக்கைகளுக்கு அடிப்படையே ஆசையும் பயமும்தான். எனக்கு எல்லா வளங்களும் சுலபமாகக் கிடைக்க வேண்டும் என்ற ஆசையும், எனக்கு எந்த விதமான துன்பங்களும், பிரச்சினைகளும் வந்துவிடக்கூடாது என்ற பயமுமே மூட நம்பிக்கை களுக்கு வித்தாக அமைகின்றது.

 ராகு காலம், எமகண்டம் எல்லாம் கெட்ட நேரம் என்றால் உலகில் இதே நேரத்தில் புறப்பட்ட விமானங்கள் விழுந்து நொறுங்கிருக்க வேண்டுமே! மற்ற நல்ல நேரங்களில் புறப்பட்ட விமானங்கள், கார்கள், இரயில்கள் எல்லாம் விபத்தே இல்லாமல் ஒழுங்காக சேர்ந்துள்ளனவா? இரவில்தானே அதிக விபத்துகள் நடைபெறுகின்றன? அப்போது தான் ராகுகாலம், எமகண்டம் இல்லையே, பின் எப்படி விபத்துக்கள் ஏற்படுகின்றன?

சற்றுச் சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றினால், வாழ்க்கை வளமாக அமையும்.

Pin It