16 வயதினலே படத்துல, ‘எல்லோரும் கோபாலகிருஷ்ணன்னுதான கூப்பிடுறாங்க’ன்னு நம்ம ஸ்ரீதேவி கமலஹாசன்கிட்ட கேப்பாங்க. அதுக்கு அவரு, ‘எவஞ்சொல்றான்...நாந்தாஞ் சொல்லிட்டு அலையுறேம்’பாரு.

நம்ம பாரத மாதாவோட புத்திரர்கள் நெலமையும் இப்ப அப்படித்தான் ஆயிப் போச்சி. பாருக்குள்ளே நல்ல நாடு;பாரத மணித்திரு நாடு;பாரதப் பண்பாடு வாழ்கவே!-ன்னு, இந்துத்துவக் காவிக் கும்பல் கூப்பாடு, இப்பக் கேலிக்கூத்தா போயிடுச்சி!
இங்கிலாந்து நாட்டோட வெளியுறவு அப்புறம் காமன்வெல்த் அலுவலகம், என்ன சொல்லி இருக்கு தெரியுமா?

‘இந்தியாவுக்குத் தனியாவோ, குழுவாவோ போற பெண்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்கனும்’னு தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னால, தில்லியில ஒரு வெளிநாட்டுப் பொண்ண 8பேர் சேந்து பாலியல் பலாத்காரம் செஞ்சிட்டாங்க இல்ல, அதுக்கப்புறந்தான் இப்புடி ஒரு அறிவிப்பு.
பெருமை மிகு பாரத தேசத்தைப் பத்தி இப்ப வெளிநாடுகளோட மதிப்பு இந்த லட்சணத்துலதான்இருக்குபாத்துக்கோங்க.இன்னொருஅசிங்கத்தையும்பாத்துருவோம்.ஜெசிகா டாவிஸ்ங்கற இங்கிலாந்து பல் மருத்துவர்,தன்ன பாலியல் பலாக்காரம் செய்றதுக்கு முயற்சி செஞ்சவங்ககிட்ட இருந்து தப்பிக்றதுக்காக,ரெண்டாவது மாடியில இருந்து குதிச்சதுல, பாவம் காலு ஒடஞ்சிருச்சி. இது எங்க நடந்திச்சின்னு கேக்குறீங்களா? வேற எங்க,பாரத் மாதாகீ ஜே போடுற இந்தப் புண்ணிய பூமியிலதான். அதுவும் தலநகரத்துல ஒரு ஓட்டல்ல.

இந்தியாவுல இருந்து தப்பிச்சு,இங்கிலாந்து போன அந்தப் பொண்ணு, ‘இந்த வழக்குல சாட்சி சொல்றதுக்கு மட்டுந்தான் இந்தியாவுக்குப் போவேன்.ஆனா அதுகூடத் தனியாப் போமாட்டேன்னு’ பி.பி.சி. பேட்டியிலயே சொல்லிருக்கு.
இந்தப் ‘பெருமைக்கு’நம்ம கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்யப் போறாங்க?பாரத நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பில்லங்கற சேதி பார் முழுக்க போய்ச் சேர்ந்திருச்சி. இனிமே இந்தியான்னு சொன்னா, கலாச்சேத்ராவும், கதாக் காலட்சேபமும் நௌப்புல வராது. பாலியல் வன்கொடுமைங்கதான் நௌப்புக்கு வரும் போலிருக்கு.
 lady_350_copyராமனோட பேரால ராமராஜ்யத்தை உண்டாக்குறதுதான் எங்களோட லட்சியம்னு இவுங்க கூப்பாடு போடுற பாரதப் பண்பாட்டோட ஒழுங்கு என்னாங்கறது ஏற்கனவே நமக்குத் தெரியும்.

இவுங்க கொண்டாடுற புராண,இதிகாசங்கள் அத்தனைலயுமே பாலியல் உறவுகளும், வன்புணர்ச்சிகளும்இயற்கைக்குமாறான உடலுறவுகளும் விலாவாரியாபக்கம்பக்கமா சொல்லப்பட்டிருக்கு.ஆனா,பாலியல் கல்விக்கு எதிராவரிஞ்சிகட்டிட்டுநிக்கிறது. இந்தக் காவிக்கூட்டந்தான். அய்யோ, பள்ளிக்கூடத்துல பாலியல சொல்லிக்கொடுத்தா,பண்பாடு கெட்டுப்போயிரும்,

கலாச்சாரம் கந்தலாயிரும்னு சொல்லி,அந்த நல்ல காரியத்தை முடக்கிப் போட்டிருக்கு.இல்ல தெரியாமத்தான் கேட்குறோம்,ஒரு பொண்டாட்டியோட நல்லபடியா குடித்தனம் பண்ணிட்டிருந்த முருகனுக்கு,இந்திரனோட பொண்ணு தெய்வானைய சட்டத்துக்குப் புறம்பா சேர்த்து வச்சி,அவர ரெண்டு பொண்டாட்டிக்காரனா ஆக்கிட்டீங்க!.

சிவபெருமானும்,திருப்பதி பெருமாளும் ஓரினச் சேர்க்கையாளர்கள்னு ஒங்க கதையில இருந்து தெரியவருது! தசரதனோட பொண்டாட்டிங்க புள்ள வேணும்னு அடிச்ச கூத்த வேற சொல்லிச் சொல்லிப் பெருமை அடிச்சிக்கிறீங்க!தாருகாவனத்து முனிவனுங்க பொஞ்சாதிங்க முன்னாடி சிவபெருமான் அம்மணமா நின்னாருன்னும் சொல்றீங்க! அடுத்தவன் பொண்டாட்டிய அனுபவிக்க அனுப்பச் சொன்ன கடவுளப் பத்தியும் கத சொல்றீங்க!

இவ்வளவு அசிங்கத்தையும் நீங்க சொல்லும்போது கெட்டுப்போகாத பண்பாடும், கலாச்சாரமும்,பிள்ளைங்களுக்கு விழிப்புணர்வு தர்றதுக்காகச் சொல்லித்தர்ற பாலியல் கல்வியால கெட்டப் போகும்னு,குதிக்கிறது எத்தன பெரிய அயோக்கியத்தனம்.இந்த நாட்டுல உங்க கும்பி மட்டும் நெறஞ்சா போதும்,மத்தவங்க எப்படிப் போனா உங்களுக் கென்ன?இந்த மடம் போனா சந்த மடம்னு அலையுற நாடோடிக் கூட்டந்தான.அப்புறம்,ஒவ்வொரு காதலர் தினத்தன்னிக்கும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் பண்ற அலும்பு இருக்கே...தாங்க முடியல.காதல் வெளிநாட்டுல் இருந்து இறக்குமதியான சரக்காமா... அது சரி இவுங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் வேற...

சங்கராச்சாரி காதல், தேவநாதனோட கருவறைக் காதல் -இதுதான் அவங்களுக்குத் தெரிஞ்ச காதல்.அப்புறம் ஆன்மீக குரு, யோகா குருனு இவனுங்க ஒருபக்கம். இந்திய யோகா குரு தனக்கு செக்ஸ் தொல்ல கொடுத்ததா அமெரிக்காவுல ஒரு பொண்ணு வழக்குப் போட்டிருக்காம்.

ஏற்கனவே,எந்த மொகத்த வச்சிட்டு வெளிநாட் டுக்குப் போவேன்னு வாஜ்பாயிய புலம்ப வெச்சாரு மோடி.இப்ப அவராலயே அமெரிக்காவுல போயி பேச முடியல. கொலகாரன பேச அனுமதிக்க மாட்டோம்னு எதிர்ப்பு வந்ததால,பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தோட,வார்ட்டன் கல்லூரி குஜராத் முதலமைச்சர் மோடிய வரவேண்டான்னு சொல்லிருச்சி.

இப்ப இவர ரொம்ப...நல்லவருன்னு காட்டி அமெரிக்காகூடஅங்காளி பங்காளியா ஆக்குறதுக்கு அங்கிருக்குற அம்மாச்சிங்க எல்லாம் மாஞ்சி மாஞ்சி வேல செய்றாங்களாமா!இந்த உத்தமரத் தான் பிரதமர் வேட்பாளர்னு,சோகூட்டம்சொல்லிட் டிருக்கு. காட்சிப் பிழை மாதிரி இவங்க கட்டி வச்சிருந்த பண்பாட்டுக் கோட்டையில ஓட்ட விழ ஆரம்பிச்சிருச்சி.போகப்போகஅது பெருசாகி,இடிஞ்சி விழற நாள் ரொம்பத் தொலவுல இல்ல.

Pin It