தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
 தோன்றலின் தோன்றாமை நன்று                    (குறள் 236)

எவ்விடம் தோன்றி நாமும்
 எந்தஓர் பணிசெய் தாலும்
அவ்விடம் உள்ள மக்கள்
 அனைவரும் புகழல் வேண்டும்

அங்ஙனம் செய்ய நம்மால்
 ஆகாது என்ற றிந்தால்
அவ்விடம் தோன்றா தென்றும்
 அகல்வதே மேன்மை யாகும்.

 

Pin It