ஊரும் சேரியும் ஒன்றாகக் கலந்து

உற்சாகம் பொங்க உறவாடி மகிழ்ந்து

பொங்கலோ...பொங்கலென்று

குலவையிட்டு...கும்மியடித்து

கொண்டாடும் நாள்வருக ‡ தமிழர்

சாதியை உமிழ்ந்தார்களென எழுக !

 

ஆணும் பெண்ணும் சமமென இணைந்து

வானமளந்த தனைத்தும் சரியாய்ப்பகிர்ந்து

சர்க்கரைப் பொங்கலாய் இரண்டறக்கலந்து

சலங்கைகுலுங்க...உறுமி முழங்க...

கொண்டாடும் நாள்வருக ‡ தமிழர்

பெண்ணடிமை ஒழிந்தார்களென எழுக !

(எமக்கு மின்னஞ்சலில் வந்த பொங்கல் வாழ்த்து. காலம் தாழ்ந்தாலும், அதன் கவியழகும், கருத்தாழமும் கருதி இங்கே வெளியிடப்படுகிறது ‡ ஆசிரியர் )

----------------------------------------

Pin It