வரலாற்றைத் திரிப்பதும், இருட்டடிப்புச் செய்வதும் இந்துத்துவக் கும்பலின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருந்து வருவதை நாம் அறிவோம். இந்து மதத்தைத் தோலுரித்து, அதன் கொடூரமான முகத்தை உலகுக்கு உணர்த்திய மாமேதை அம்பேத்கரை வரலாற்றிலிருந்து  இருட்டடிப்புச் செய்யும் பணியை அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் நாளை பாபர் மசூதி இடிப்பு நாளாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கான அம்பேத்கரின் கொள்கைகளை நினைவுகூறும் அவருடைய நினைவு நாளை பின்னுக்குத்தள்ளி விட்டது இந்துத்துவக் கும்பல். டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளாகிவிட்டது. அதே போல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியையும் இருட்டடிப்புச் செய்யும் நோக்கத்துடன், சித்திரைப் புத்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது,  தமிழுணர்வாளர்களின் எதிர்ப்புகளை மீறி மீண்டும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Pin It