மூன்றாவது முறையாக இலங்கைக்கு எதிராக ஜ.நா .மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த இரண்டு முறை அமெரிக்கா கொண்டு வந்த  தீர்மானத்தை விட, தற்போது சற்று அதிகம்  அழுத்தம் கொடுக்கும் வண்ணம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2012 மற்றும் 13 ஆம்   ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து கொடுத்த அழுத்தம் காரணமாக, இலங்கையுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இந்தியா அந்தத் தீர்மா னத்தை ஆதரித்தது. அந்தத் தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றத்தை ராஜபக்சேவே விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால் ராஜபக்சேவிற்கு ஆதரவாக அப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்ததில் இந்தியத் துணைக் கண்டத்திற்கு அளப்பரிய பங்கு உண்டு. ஆகவே, அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஈழத்தமிழர் நலனில் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டது. இந்த நாடகத்தைப் பகுத்தறிவுள்ள அனைவருமே அறிவர். இருந்த போதிலும், உலக அரங்கில் இலங் கையில் போர்க்குற்றம் நடைபெற்றது என்பதைப் பதிவு செய்வதற்கு வாய்ப்பாக அந்தத் தீர்மானம் இருந்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், ராசபக்சேவை நீதிபதியாக்கிய அந்த அமெரிக்கத் தீர்மானங்கள் கேட்ட குறைந்த பட்ச விளக்கத்தைக் கூட ராஜபக்சே அரசு அளிக்கத் தயாராக இல்லை. கற்றல் மற்றும் படிப்பினைகள் குழுவையே ராஜபக்சே அரசு அமைக்கத் தயாராக வில்லை. ராஜபக்சேவிடம்  “மயிலே, மயிலே, இறகு போடு” என்றால் அது சாத்தியமாகுமா.

அதேசமயம், உத்தம புத்திரன் ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியதே மிகப்பெரிய பாவம் என முழக்கமிடுகின்றன  கியுபா, ரசியா, சீனா போன்ற பொதுவுடைமைச் சித்தாந்த ஆதரவு நாடுகள். தங்களின் அமெரிக்க எதிர்ப்பைக் காட்ட ராஜபக்சே அரசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடு கின்றன. தமிழின அழிப்பை நடத்தி விட்டு இன்னும் இறுமாப்பில் ராஜபக்சே இருப்பதற்குக் கியூபா உள்பட 12 நாடுகள் பக்க பலமாக இருக்கின்றன. இந்தியா உள்பட 12 நாடுகள் கள்ள மவுனம் சாதிப் பதும் இலங்கை அரசிற்கு நம்பிக்கையை அளிக்கிறது. சர்வதேச அளவில் இலங்கை அரசைத் தனிமைப்படுத்த சீனா, கியூபா, இந்தியா என அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்தப் புறச் சூழலின் புரிதலுடன்தான் ஜ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அணுக வேண்டும்,ஆராய வேண்டும்.

அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்த இந்தியாவின் நிர்வாக முடிவை மலையாள முதலாளிகளின் ஆங்கில ஊடகங்கள் கொண்டாடு கின்றன. சிவசங்கர் மேனண் தலைமையில் மிகவும் ஆராய்ந்து தொலைநோக்குப் பார்வை கொண்டு, எடுக்கப்பட்ட முடிவு எனப் பாராட்டுகின்றன. இலங்கையுடன் நட்புறவைப் பேணும் இந்த முடிவை டைம்ஸ் ஆப் இந்தியா வெளிப்படை யாகப் பாராட்டியுள்ளது. ஆனால், அதே சமயம், இந்தியாவின் புறக்கணிப்பைக் கண்டித்துத் தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தையும் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதில் காங்கிரஸ் ஆட்சியின் துரோகம் என்பதை முன்னிலைப் படுத்தியிருக்கிறது. அதாவது இலங்கை அரசுடன் நட்பு வைத்த இந்திய அரசிற்குப் பாராட்டு, அதே சமயம் தமிழர்களின் மனதைப் புண்படுத்திய காங்கிரசிற்குக் கண்டிப்பு. இதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு பேணப்பட வேண்டும். ஆகா என்ன ஒரு அரசியல்.., எப்படிப்பட்ட உள்குத்து. கவனித்தீர்களா. இந்த சமார்த்தியம் தமிழர்களுக்குத் துளி அளவாவது இருக்கிறதா. எங்கே நம் தமிழ்த்தேசியத் தோழர்களுக்குத் திராவிடத்தைப் பழிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

அமெரிக்காவிடம் அறத்தை எதிர்பார்க்கலாமா? போர்க்குற்றத்தைப் பற்றி அமெரிக்காவிற்குப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று சில சர்வதேசச் சிந்தனையாளர்கள் நம்மிடம் கேட்கி றார்கள். அந்தக் கேள்வி நம் ஆழ்மனத் திலும் எழுகிறது. நாமும் அமெரிக்க எதிர்ப்புக் கருத்தியலோடு வளர்க்கப்பட்ட வர்கள்தாம். ஆனால், தமிழர் தரப்பு நியாயத்தை ஜ.நா அவையில் கொண்டு செல்வதற்கு, அமெரிக்கத் தீர்மானம் மட்டுமே தற்போது பாதையாக இருக்கிறது என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க அரசியல் பேசும் நாடுகள் என்று நாம் இதுவரை நம்பிய நாடுகள் ராஜபக்சே நல்லவர் என்கிற வெகுமதியை வழங்கு கின்றன. சர்வதேச அளவில் பாட்டாளி களுக்கான அகிலம் சாத்தியம் என்று  சொன்னவர்கள், இனவெறியுடன் சிங்கள அரசு பயங்கரவாதத்திற்குக் காவடி தூக்கும்போது, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதைத் தவிர, நமக்கு வேறு வழி இல்லை. இன்னும் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர் சுப்ரமணிய சுவாமி அமெரிக்காவை இந்த தீர்மானத் திற்காக விமர்சனம் செய்திருக்கிறார். எப்போதும் அமெரிக்காவிற்குத் துதி பாடும் சுப்ரமணியசாமி, இந்த பிரச்சனைக்காக, அமெரிக்காவைக் கோபித்துக் கொள்கிறார் என்றால், நாமும் இந்த விவகாரத்திற்காக மட்டும் அமெரிக்காவை ஆதரிப்பதில் தவறில்லை.

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரிகள்தான் தீர்மானிக் கிறார்கள்.

தமிழர்களின் வரிப்பணத்தைக் கொண்டு தமிழர்களை அழித்தொழித்த பார்ப்பன மலையாளிகளின் சேவக அமைப்பான இந்தியா இன்னும் அந்த துரோகத்தைச் செய்து வருகிறது. இந்த முறை வெளி வந்த அமெரிக்கத் தீர்மானத்தில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்துச் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இது இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கிறதோ இல்லையோ இந்தியாவின் போலி நடுநிலையைப் பாதித்து விட்டது. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து, ஜ.நா மனித உரிமை கவுன்சில் விசாரிப்பது இந்தியாவின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. ஏனென்றால், நியாயப்படி விசாரித்தால் இந்தியாவின் பங்கு அம்பலப்பட்டு விடுமே என்கிற பதற்றம்தான் இந்தியா வெளிநடப்பு செய்யக் காரணம்.  கையூட்டுப் பெற்று விட்ட காவல்துறை அதிகாரியிடம் உரிமையுடன் கோபப்படும் குற்றவாளி போல் இலங்கை இந்தியா விடம் நடந்து கொள்கிறது. இந்தியாவும் அதற்குக் குழைந்து போய்க் கொண்டி ருக்கிறது.

அமெரிக்கத் தீர்மானம் இராஜபக் சேவிற்குப் பகுதி சார்பானது என்பது உணமைதான். இன்று வரை அந்தத் தீர்மானத்தில், இனப்படுகொலை என்கிற வார்த்தை இடம் பெறவில்லை. மேலும், அங்கு நடைபெற்றது மதச் சிறுபான்மை யினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று உண்மைக்குப் புறம்பான தகவலையும் அமெரிக்கத் தீர்மானம் தந்திருக்கிறது. ஆகவே, இது நமக்கு முழுத் தீர்வன்று. அடுத்த கட்ட நகர்விற்கான பாதை.

தொடர்ந்து போராடுவாம்.

Pin It