1

கோயிலில் வந்து கண்டு
கும்பிட்டு அகல்கிறான்

வீட்டின் பூஜையறையில்
விழுந்து வணங்கி
வெளியேறுகிறான்

அகத்தில்
ஆயிரம் பெயர் சொல்லி
ஆராதித்து முடிக்கிறான்

உன்னை விழுங்கி
நானேயாக வரட்டுமா என்றால்
பாவம்
பயப்படாமல் என்ன செய்வான்

2

சாக்ரடீஸூடன் தினமும்
உலாப் போவதுண்டு

வான்மீகி வீட்டிற்கு வந்தால்
மணிக் கணக்காகப்
பேசிக்கொண்டிருப்பார்

தோளில் கைபோட்டுத்தான்
சிக்மண்ட் பிராய்ட்
உரையாடுவான்

அன்று ஆபூர்வமாக
ஆடம்ஸ்மித் சாலையில் பார்த்து
முறுவலித்துச் சென்றான்
எல்லோரும்
இவனைத் திரும்பிப் பார்த்தார்கள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.